அடிப்படையான உண்மை எது தெரியுமா... ஒன்றிய அரசை விளாசும் ப.சிதம்பரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா 2வது அலை தொற்று பாதிப்புகளைக் குறைத்து நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான மத்திய நிதியமைச்சகம் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 8 பொருளாதார ஊக்கத் திட்டத்தை அறிவித்தது.

இந்த திட்டத்தின் மூலம் பல துறைக்குக் குறிப்பாகச் சுகாதாரத் துறை, சுற்றுலாத் துறை ஆகியவற்றுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படும் நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம் அவர்கள் தனது டிவிட்டரில் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் டிவிட்டர் பதிவு

ப.சிதம்பரம் டிவிட்டர் பதிவு


மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் பல துறைக்குக் கடன் உத்தரவாதம் குறித்த அறிவிப்பு வெளியிட்டது. இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டிவிட்டரில்

கடன் உத்தரவாதம் என்பது கடன் அல்ல..

எந்த வங்கியும் அதீத கடன் நெருக்கடியில் இருக்கும் நிறுவனங்களுக்குக் கடன் அளிக்காது, எனவே புதிய கடன் என்பது கூடுதல் சுமை தான்.


எனவே அதீத கடன் நெருக்கடி அல்லாது நிதிப் பற்றாக்குறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு தற்போது கடன் சேவையில்லை, கடன் அல்லாத மூலதனம் தான் தேவை எனத் தனது டிவிட்டரில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 

சப்ளை மற்றும் டிமாண்ட் பிரச்சனை

சப்ளை மற்றும் டிமாண்ட் பிரச்சனை

இதேபோல் அதிகப்படியாக சப்ளை செய்வது மூலம் டிமாண்ட் (நுகர்வு) உருவாக்க முடியாது. ஆனால் இதேவேளையில் அதிக டிமாண்ட் உருவாக்கப்படும் போதும் தானாகவே சப்ளை அதிகரிக்கும். எனவும் நாட்டின் டிமாண்ட் அளவீடு மிகவும் மோசமாக இருப்பது குறித்து டிவிட்டரில் விளக்கியுள்ளார் ப.சிதம்பரம்.

நாட்டின் பொருளாதாரம்

நாட்டின் பொருளாதாரம்

மேலும் கோடிக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்தும், கோடிக்கணக்கானோரின் வருமானம் குறைந்து இருக்கும் நாட்டில் டிமாண்ட் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படாது. இந்தியாவின் நிலையும் தற்போது இதுதான்.

ஏழை, லோவர் மிடில் கிளாஸ் மக்கள்

ஏழை, லோவர் மிடில் கிளாஸ் மக்கள்

இந்தியாவில் தற்போதைய நிலையைச் சமாளிக்கச் சிறந்த வழி பணத்தை துறை வாரிய நிறுவனங்களில் போடாமல் மக்கள் கையில், குறிப்பாக ஏழை மற்றும் லோவர் மிடில் கிளாஸ் மக்கள் கையில் கொடுங்கள் என டிவிட்டரில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சாமானிய மக்கள் கேள்வி

சாமானிய மக்கள் கேள்வி


நேற்றைய அறிவிப்பில் சுற்றுலாத் துறை நிறுவனங்களுக்கு அதிகளவிலான கடன் உத்தரவாதம் அளித்தது, இதில் கடன் வாங்கிய ஒரு நிறுவனம், மக்கள் மத்தியில் பணம் இல்லாத காரணத்தால் வர்த்தகம் பெற முடியாமல் போனால் இந்த கடன் வாராக் கடனாகத் தானே மாறும்.??

இப்போ மக்கள் கையில் பணம் போனால் மட்டுமே வர்த்தகம் மற்றும் டிமாண்ட் அதிகரிக்கும்.!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Credit guarantee is not credit, More supply does not mean more demand: PC slams union govt

Credit guarantee is not credit, More supply does not mean more demand: PC slams union govt
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X