இந்திய வங்கி துறையை துரத்தும் Credit Suisse பிரச்சனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வங்கி அமைப்பு அமெரிக்காவின் பிராந்திய வங்கிகள் திவாலானதில் மூலம் பெரிய பிரச்சனையிலும், பாதிப்பிலும் சிக்காமல் தப்பித்தாலும் வங்கி பங்கு முதலீட்டில் ஒரு ஆட்டத்தை ஆடியுள்ளது.

இந்த நிலையில் சுவிஸ் நாட்டின் 2வது பெரிய வங்கியாக இருக்கும் கிரெடிட் சூயிஸ் வங்கியில் இருக்கும் பிரச்சனைகளில் இருந்தும் தப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக கிரெடிட் சூயிஸ் இந்தியாவில் மிகக் குறைந்த அளவிலான முதலீட்டை மட்டுமே வைத்துள்ளதை சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆனால் உண்மை என்ன..? கிரெடிட் சூயிஸ் வங்கி பிரச்சனையால் ஒட்டுமொத்த ஐரோப்பிய வங்கி சந்தையும் தடுமாற்றத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இந்திய சந்தையை எப்படி பாதிக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.

Sillicon Valley Bank-ல் மாட்டிக்கொண்ட 1 பில்லியன் டாலர்..இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் திக் திக்..! Sillicon Valley Bank-ல் மாட்டிக்கொண்ட 1 பில்லியன் டாலர்..இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் திக் திக்..!

சிலிக்கான் வேலி வங்கி, கிரெடிட் சூயிஸ்

சிலிக்கான் வேலி வங்கி, கிரெடிட் சூயிஸ்

சிலிக்கான் வேலி வங்கியை (SVB) விட Credit Suisse இந்தியாவின் நிதி அமைப்புக்கு மிகவும் பொருத்தமானது என்றாலும், அது மிகவும் குறைவான செயல்பாடுகளையே கொண்டுள்ளது என்று Jefferies இந்தியா நிறுவனம் தனது அறிக்கையில் கூறுகிறது, இதனால் சிலிக்கான் வேலி வங்கி சரிவை விட கிரெடிட் சூயிஸின் எதிர்காலம் இந்திய வங்கித் துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஜெஃப்ரிஸ் தெரிவித்துள்ளது.

 20,000 கோடி ரூபாய்

20,000 கோடி ரூபாய்

சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட Credit Suisse வங்கி 20,000 கோடி ரூபாய்க்கும் குறைவான முதலீட்டை இந்திய டெரிவேடிவ் சந்தையில் மட்டும் கொண்டுள்ளது. இது இந்தியாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு வங்கிகளில் 12வது இடம். மேலும் இதில் 60 சதவீத சொத்துக்களை கடன் வாங்கி முதலீடு செய்துள்ளது, இதில் 96 சதவீத தொகை அடுத்த இரண்டு மாதத்தில் முடிவடைகிறது.

இந்திய சந்தை

இந்திய சந்தை

Credit Suisse இந்தியாவில் ஒரு வங்கி கிளை மட்டுமே வைத்துள்ளது, இதன் மூலம் இந்திய வங்கி துறையில் 0.1 சதவீத முதலீட்டை மட்டுமே வைத்துள்ளது. ஆனால் கிரெடிட் சூயிஸ் வீழ்ச்சி அடைந்தால் எப்படி சமாளிப்பது என்பதை இந்திய அரச, நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி தரப்பில் தயாராகவும், அட்ஜெஸ்ட் செய்யவும் தாயாராக உள்ளது. ஆனால் இதன் எதிரொலியாக ஒட்டுமொத்த ஐரோப்பிய, அமெரிக்க நிதியமைப்பு பாதிக்கும், இது இந்திய சந்தையை கட்டாயம் பாதிக்கும்.

 50 பில்லியன் சுவிஸ் பிராங்க் கடன்

50 பில்லியன் சுவிஸ் பிராங்க் கடன்

Credit Suisse தனது பணபுழக்க பிரச்சனையை சரி செய்ய சுவிஸ் நாட்டின் மத்திய வங்கியான Swiss National Bank -ல் இருந்து 54 பில்லியன் டாலர் அதாவது 50 பில்லியன் சுவிஸ் பிராங்க் அளவிலான தொகையை கடனாக பெற்றது. இந்த 50 பில்லியன் சுவிஸ் பிராங்க் கடன் மூலம் கிரெடிட் சூயிஸ் பணபுழக்க பிரச்சனை தீர்க்கப்பட்டாலும் வங்கியின் வலிமை தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது.

UBS, கிரெடிட் சூயிஸ்

UBS, கிரெடிட் சூயிஸ்

இந்த நிலையில் தான் சுவிஸ் நாட்டின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் UBS, கிரெடிட் சூயிஸ் வங்கியை மொத்தமாகவோ அல்லது சிறு பகுதியை வாங்கவோ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்காக UBS, கிரெடிட் சூயிஸ் வங்கிகளின் உயர்மட்ட நிர்வாக குழு சனி மற்றும் ஞாயிறுக்கிழமையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த ஆலோசனை துவங்க முக்கியமான காரணம் சுவிஸ் நேஷ்னல் வங்கி மற்றும் அந்நாட்டின் கட்டுப்பாட்டு அமைப்பான FINMA உந்துதல் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Credit Suisse liquidity Crisis how much Impact on India's Banking System

Credit Suisse liquidity Crisis how much Impact on India's Banking System
Story first published: Saturday, March 18, 2023, 19:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X