கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படலாம்.. அப்படின்னா இனி பெட்ரோல் டீசல் விலை?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து சரிய தொடங்கி கச்சா எண்ணெய் விலையானது, கடந்த நான்கு மாதங்களாகத் தான் சற்று ஏற்றம் காண தொடங்கியுள்ளது. எனினும் அது பெரிய அளவிலான ஏற்றம் இல்லை.

நடப்பு ஆண்டு தொடக்கத்தில் WTI கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு சுமார் 61 டாலர்களாக இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 6.55 டாலர்கள் வரை சென்றது. எனினும் தற்போது அதன் விலையானது 37.67 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

அதே நேரத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது, கடந்த ஜனவரி மாதத்தில் பேரலுக்கு 71.75 டாலர்களாக இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் குறைந்தபட்சமாக 15.98 டாலர்களாகவும் வர்த்தகமாகியுள்ளது. இன்று அதன் விலை 40.49 டாலர்களாக உள்ளது.

இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் விலை நிலவரம்
 

இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் விலை நிலவரம்

இதே இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலையானது இந்த வருட தொடக்கத்தில் அதிகபட்சமாக 4,670 ரூபாயாக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் வெறும் 795 ரூபாய்க்கும் சென்று, இன்று அதன் விலை பேரலுக்கு 2,768 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது. சர்வதேச அளவில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வந்தாலும், பொருளாதார மீட்புக்கான நடவடிக்கைகளை ஒவ்வொரு நாடும் எடுத்து வருகின்றன.

விலை என்னவாகும்?

விலை என்னவாகும்?

இதனடிப்படையில் இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனா லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கச்சா எண்ணெய் தேவையும் விரைவில் மீண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. எனினும் தற்போது புதிய வழக்குகளின் எண்ணிக்கையானது பல நாடுகளில் அதிகரித்து வருவது, அந்த நம்பிக்கையினை சீர்குலைக்கும் விதமாக உள்ளது..

குறைந்த விலையில் விற்க தயார்

குறைந்த விலையில் விற்க தயார்

இதற்கிடையில் மத்திய கிழக்கு கச்சா எண்ணெய் விற்பனையாளர்கள் குறைந்த விலையில் விற்கத் தயாராக உள்ளபோது, உலகளாவிய சந்தை விற்பனையாளர்கள் பீதியில் அதே விலையினை பின்பற்றுவது இயல்பானது என ரைஸ்டாட் எனர்ஜியின் மூத்த எண்ணெய் சந்தை ஆய்வாளர் பாவோலா ரோட்ரிக்ஸ் கூறியுள்ளார். ஆக இதுவும் அதிக விலையேற்றத்திற்கு தடை போட்டுள்ளது எனலாம்.

தேவையை குறைக்கும்
 

தேவையை குறைக்கும்

இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இது உலகளாவிய பொருளாதார நெருக்கடியினை அதிகரிக்கிறது. சொல்லப்போனால் பொருளாதார வளர்ச்சியினை மெதுவாக்கும். இது விமான எரிபொருள் முதல் டீசல் வரை தேவையை குறைக்கும்.

உற்பத்தி குறைப்பு செய்யப்படலாம்

உற்பத்தி குறைப்பு செய்யப்படலாம்

ஆக குறுகிய கால சந்தையானது மென்மையாகத் தெரிகின்றன. எனினும் தேவை மீட்பு உடையது என்றும் மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக பெட்ரோலிய உற்பத்தி நாடுகளான ஓபெக் நாடுகள் உற்பத்தி குறைப்பினை செய்துள்ளன. இது கச்சா எண்ணெய் விலைக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றன.

பொருளாதார சரிவுகள்

பொருளாதார சரிவுகள்

ஆனால் கொரோனா நெருக்கடியினால் உலகளவில் கடுமையான பொருளாதார சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இது கச்சா எண்ணெய் தேவையிலும் பாதிப்பினை ஏற்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பானது நடப்பு ஆண்டில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மீட்சி எப்போது?

மீட்சி எப்போது?

பொருளாதார மீட்சி, வழக்கம்போல் தொழிற்சாலை இயக்கம், விமான போக்குவரத்து மற்றும் பொதுபோக்குவரத்து என முழுவதும் தொடங்கும் போது தான் இதெல்லாவற்றிற்கும் ஒரு முழுமையான பதில் கிடைக்கும். அப்போது கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் பெரியளவில் இருக்கலாம். ஏனெனில் அப்போது தேவை அதிகரிக்கும்.

நீண்ட கால நோக்கில் லாபம் தரலாம்

நீண்ட கால நோக்கில் லாபம் தரலாம்

எனினும் இதனை முதலீடாக பார்ப்பவர்களுக்கு, அதாவது கமாட்டி வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் வாங்கி வைப்பவர்களுக்கு நீண்ட கால நோக்கில் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இன்றைய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியுள்ள எரிபொருள் தேவையானது நிச்சயம் விரைவில் மீண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. ஆக நீண்டகால நோக்கில் கச்சா எண்ணெய் லாபம் கொடுக்கும் ஒரு முதலீடாக இருக்கலாம் என கூறுகின்றனர் கமாடிட்டி ஆய்வாளர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Crude oil production may cut in current year

Oil price starts to up in 3 month lows, but investors concerns demand.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X