கிரிப்டோ முதலீட்டாளர்களே உஷார்.. ஜூலை 1 முதல் புதிய வரி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு, பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சுமார் 30 சதவீத வரி விதிக்கப்பட்டது.

 

30 சதவீதம் வரி அதிகம் என்றாலும் தடை விதிக்காத காரணத்தால் மனதைத் தேற்றிக்கொண்டனர். இந்த 30 சதவீத வரி ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் ஜூலை 1ஆம் தேதி முதல் கூடுதலான வரியும் நடைமுறைக்கு வருகிறது.

SMS, வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் ரூ.3000 கோடி மோசடி.. உஷார இருங்க மக்களே..!

1 சதவீத டிடிஎஸ்

1 சதவீத டிடிஎஸ்

விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகளை மாற்றுவதற்கான பரிவர்த்தனை மதிப்பில் 1 சதவீத டிடிஎஸ் (TDS) விதிக்கப்படும் என்றும், வரியைக் கழிப்பதற்கான பொறுப்பு முதன்மையாகப் பரிமாற்றங்களில் இருக்கும் என்றும் வருமான வரித் துறை புதன்கிழமை கூறியுள்ளது.

2022-23 பட்ஜெட்

2022-23 பட்ஜெட்

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2022-23 பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகள் (VDA) அல்லது கிரிப்டோகரன்சிகள் மீதான டிடிஎஸ் விதிகள் மீது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை (FAQ) வெளியிட்டதுடன், ஜூலை 1 முதல் 1 சதவீத டிடிஎஸ் (TDS) அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

பியர்-டு-பியர்
 

பியர்-டு-பியர்


பியர்-டு-பியர் (நேரடி வாங்குபவர் முதல் விற்பனையாளர் வரை) பரிவர்த்தனையின் போது, வாங்குபவர் மூலத்தில் டிடிஎஸ் கழிக்க வேண்டும். எவ்வாறாயினும், பரிமாற்றம் மூலம் எக்ஸ்சேஞ்ச் மூலம் நடைபெறும் பட்சத்தில், TDS ஐ கழிப்பதற்கான பொறுப்பு, விற்பனையாளருக்கு வரவு வைக்கும் அல்லது செலுத்தும் மீது இருக்கும்.

வருமான வரி விதிகள்

வருமான வரி விதிகள்

"வருமான வரி விதிகள், 1962 இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறை கீழ் நிலுவைத் தேதியில் அல்லது அதற்கு முன்பிருந்த காலாண்டின் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ஒரு காலாண்டு அறிக்கையை (படிவம் 26QF இல்) எக்ஸ்சேஞ்ச் வழங்க வேண்டும்" என்று CBDT கூறியது.

வெளிநாட்டு முதலீடு

வெளிநாட்டு முதலீடு

இந்தியாவில் கிரிப்டோ முதலீடுகளுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையிலும், கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளத்தில் யூபிஐி பேமெண்ட் பிரச்சனை, மத்திய அரசின் கிரிப்டோ மசோதா என அடுக்கடுக்கான பல பிரச்சனைகள் இருக்கும் வேளையில் இந்தியப் பணக்காரர்கள் வெளிநாட்டில் பணத்தை 'overseas direct investment' (ODI) என்னும் வழியில் LRS முறையில் முதலீடு செய்கின்றனர். இதில் LRS என்பது liberalised remittance facility, இது ஆர்பிஐ-யால் இயக்கப்படும் வெளிநாட்டு முதலீடு சேவை.

கிரிப்டோகரன்சி முதலீடு: ஆசை காட்டி ரூ.1.57 கோடி மோசடி செய்த மர்ம நபர்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cryprocurrency: TDS on virtual digital assets from July 1 says CBDT

Cryprocurrency: TDS on virtual digital assets from July 1 says CBDT கிரிப்டோ முதலீட்டாளர்களே உஷார்.. ஜூலை 1 முதல் புதிய வரி..!
Story first published: Thursday, June 23, 2022, 20:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X