தனியார் கிரிப்டோகரன்சி தடையா..? கிரிப்டோ மசோதா சொல்வது என்ன..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கிரிப்டோகரன்சி மீது முதலீடு செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்ச் போன்ற முதலீடுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆபத்தானது எனக் கூறி வருகிறது.

இந்தியாவில் கிரிப்டோகரன்சி மீது முதலீடு செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்சி போன்ற முதலீடுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆபத்தானது எனக் கூறி வருகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 26 மசோதாக்கள் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. 3 விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்த மசோதாவைத் தாண்டி மிக முக்கியமானதாக விளங்குவது கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் கரன்சி மசோதா.

 கிரிப்டோகரன்சி முதலீட்டுக்கு 'புதிய வரி'.. பட்ஜெட் அறிக்கையில் முக்கிய அறிவிப்பு..! கிரிப்டோகரன்சி முதலீட்டுக்கு 'புதிய வரி'.. பட்ஜெட் அறிக்கையில் முக்கிய அறிவிப்பு..!

டிஜிட்டல் கரன்சி, கிரிப்டோகரன்சி

டிஜிட்டல் கரன்சி, கிரிப்டோகரன்சி

மத்திய அரசு இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பல தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்ய உள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் கரன்சி உருவாக்கும் திட்டம் குறித்த ரிசர்வ் வங்கியின் கட்டமைப்பு அடங்கிய மசோதா-வை The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021 என்ற பெயரில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

புதிய மசோதா

புதிய மசோதா

இந்த மசோதா மூலம் இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யவும், முதலீடு செய்யவும் தடை செய்யப்பட்டுச் சில முக்கியமான கிரிப்டோகரன்சிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதேவேளையில் கிரிப்டோகரன்சியின் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

சக்திகாந்த தாஸ்

சக்திகாந்த தாஸ்

இந்தியாவின் மேக்ரோ எக்னாமிக் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்குத் தனியார் கிரிப்டோகரன்சிகள் ஆபத்து என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார். இதைத் தொடர்ந்து தற்போது பெரும்பாலான தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்ய மசோதா சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

டிஜிட்டல் கரன்சி

டிஜிட்டல் கரன்சி

இதேவேளையில் உலக நாடுகளில் மிகவும் பிரபலமாகி வரும் டிஜிட்டல் கரன்சி இந்தியாவில் அறிமுகம் செய்யவும், பயன்படுத்தவும் ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சிக்கான கட்டமைப்பை இந்த மசோதா மூலம் அறிமுகம் செய்ய உள்ளது.

கிரிப்டோ சந்தை

கிரிப்டோ சந்தை

இந்த மாற்றங்கள் மூலம் கிரிப்டோகரன்சி வர்த்தகம் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட பின்பு பங்குச்சந்தை போலவே கிரிப்டோ சந்தையும் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஏற்கனவே சிறப்புக் குழு அமைத்து இதற்கான ஆலோசனையைச் செய்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

இதேபோல் இந்த மாத துவக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம், செபி ஆகிய அமைப்புகள் மத்தியில் கிரிப்டோகரன்சி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் இந்தக் கிரிப்டோ மசோதா பட்ஜெட்-க்குத் திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது குளிர்காலக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.

தனியார் கிரிப்டோகரன்சிகள் தடை

தனியார் கிரிப்டோகரன்சிகள் தடை

தனியார் கிரிப்டோகரன்சிகள் தடை செய்யப்படுவது உறுதி, ஆனால் அனைத்து கிரிப்டோகரன்சிகளும் தடை செய்யப்படமாட்டாது, பாதுகாப்பான கிரிப்டோகரன்சி வர்த்தகம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை என்பது தற்போதைய நிலைப்பாடு மூலம் தெரிகிறது. ஆனால் மத்திய அரசின் இறுதி முடிவிற்குக் காத்திருக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill 2021 : All You Need to Know

Cryptocurrency & Digital Currency Bill in Winter Session [கிரிப்டோகரன்சி தடை மசோதா & ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி]: மத்திய அரசு இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பல தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்யவும், இதே தொடர்ந்து இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் கரன்சி உருவாக்கும் திட்டம் குறித்த ரிசர்வ் வங்கியின் கட்டமைப்பு அடங்கிய மசோதா-வை 'The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill 2021' என்ற பெயரில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X