இந்தியாவில் கிரிப்டோகரன்சியை அதிகாரப்பூர்வ முதலீடாக அறிவிக்கவில்லை என்றாலும், கிரிப்டோ முதலீட்டை ஒழுங்குமுறைப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கிரிப்டோ மற்றும் இதர டிஜிட்டல் சொத்துக்கள் மீதான முதலீட்டில் கிடைக்கும் லாபத்திற்கு 30 சதவீதம் வரி விதித்துள்ளது மத்திய அரசு.
இந்த நிலையிலும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அடிப்படை மதிப்பு இல்லை
கிரிப்டோ முதலீடுகளும், முதலீட்டுச் சேவைகளும் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும் இத்தகைய டிஜிட்டல் சொத்துக்களுக்கு எவ்விதமான அடிப்படை மதிப்பும் இல்லை என்பதை முதலில் உணர்ந்திடுங்கள் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
சொந்த ரிஸ்க்
மேலும் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்பவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பெயரில் ரிஸ்க்குகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு முதலீடு செய்ய வேண்டும், செய்கிறீர்கள் என்பதை உணர வேண்டும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பிரைவேட் கிரிப்டோகரன்சி
தனியார் அல்லது பிரைவேட் கிரிப்டோகரன்சிகள் நாட்டின் பொருளாதார மற்றும் நிதி நிலைத் தன்மைக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கிரிப்டோகரன்சிக்கு நாணயம் போன்ற தன்மை இருந்தாலும், இந்தப் பிரைவேட் கிரிப்டோகரன்சிகள் ரிசர்வ் வங்கி நிதி ஸ்திரத்தன்மை சிக்கல்களைச் சமாளிக்க எடுக்கும் நடவடிக்கைகளை மொத்தமாகச் சீர்குலைக்கிறது என ஆர்பிஐ கவர்னர் தெரிவித்துள்ளார்.
இருமாத நாணய கொள்கை கூட்டம்
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இவை அனைத்தையும் இன்று காலை இருமாத நாணய கொள்கை முடிவுகளை அறிவித்த பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் பிரைவேட் கிரிப்டோகரன்சி குறித்து மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வட்டி விகிதம்
இன்று நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் 10வது முறையாக சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கை குழு வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும், வங்கிகளுக்கான MSF விகிதம் 4.25 சதவீதமாகவும் தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கிரிப்டோகரன்சி விலை
இன்றைய வர்த்தகத்தில் முன்னணி கிரிப்டோகரன்சியின் விலை நிலவரம்
பிட்காயின் - 43,832.070 டாலர்
எதிரியம் - 3,184.110 டாலர்
டெதர் - 1.000 டாலர்
பினான்ஸ் காயின் - 417.250 டாலர்
USD காயின் - 1.000 டாலர்
ரிப்பிள் - 0.866 டாலர்
கார்டானோ - 1.180 டாலர்
சோலானோ - 113.420 டாலர்
டெரா - 56.870 டாலர்
அவலான்சி - 90.270 டாலர்
போல்காடாட் - 22.100 டாலர்
டோஜ்காயின் - 0.15870 டாலர்
ஷிபா இனு - 0.00003280 டாலர்
பினான்ஸ் USD - 1.000 டாலர்
பாலிகான் - 2.000 டாலர்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications