தந்தை மரணம்.. பொறுப்புக்கு வந்த மகன்கள்.. TATA குழுமத்தில் இடம் கிடைக்குமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகவும் பழமையான வர்த்தகக் குழுமங்களில் ஒன்றாக இருக்கும் ஷபூர்ஜி பலோன்ஜி குரூப்-ன் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் நவம்பர் 4 ஆம் தேதி இறந்தது இந்த வருடத்தின் மறக்க முடியாத சம்பவமாக மாறியது.

தொழிலதிபர்கள் மத்தியில் இவருடைய மரணம் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் ஷபூர்ஜி பலோன்ஜி குரூப்-ல் சைர்ஸ் மிஸ்திரி இடத்திற்கு அவருடை மகன்கள் இருவரும் வர உள்ளனர்.

டாடா டிரஸ்ட் முக்கிய பதவியில் மெஹ்லி மிஸ்திரி.. யார் இவர்..? சைரஸ் மிஸ்திரி குடும்பம்..!டாடா டிரஸ்ட் முக்கிய பதவியில் மெஹ்லி மிஸ்திரி.. யார் இவர்..? சைரஸ் மிஸ்திரி குடும்பம்..!

ஷபூர்ஜி பல்லோன்ஜி & கம்பெனி

ஷபூர்ஜி பல்லோன்ஜி & கம்பெனி

ஷபூர்ஜி பல்லோன்ஜி & கம்பெனி நிறுவனம் 1865 ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டு இன்று 9,200 கோடி ரூபாய் மதிப்புடையதாக உள்ளது. சமீபத்தில் இந்தியாவின் டாப் 500 நிறுவனங்கள் கொண்ட ஹூரன் பட்டியலில் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமம் இடம்பெற்றுள்ளது.

சைரஸ் மிஸ்திரி

சைரஸ் மிஸ்திரி

ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் முன்னாள் தலைவரும், மறைந்த சைரஸ் மிஸ்திரி-யின் மகன்களான 26 வயதான ஃபிரோஸ் மிஸ்திரி மற்றும் 24 வயதான ஜஹான் மிஸ்திரி ஆகியோர் அதிகாரப்பூர்வமாக இக்குழுமத்தின் நிர்வாகப் பொறுப்பில் சேர்ந்தனர்.

ஃபிரோஸ் மிஸ்திரி மற்றும் ஜஹான் மிஸ்திரி

ஃபிரோஸ் மிஸ்திரி மற்றும் ஜஹான் மிஸ்திரி

இருவரும் இக்குழுமத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதல் கீழ் பணியாற்ற உள்ளனர், இது மட்டும் அல்லாமல் சைரஸ் மிஸ்திரியின் மூத்த சகோதரர் ஷபூர் மிஸ்திரி தான் தற்போது இக்குழுமத்தின் தலைவராக இருக்கும் நிலையில், ஃபிரோஸ் மிஸ்திரி மற்றும் ஜஹான் மிஸ்திரி ஆகியோர் தனிப்பட்ட முறையில் நிர்வாகப் பணியில் ஈடுபடுத்தவும், வழிநடத்தவும் உள்ளார்.

18 மாதங்கள்

18 மாதங்கள்

ஃபிரோஸ் மிஸ்திரி மற்றும் ஜஹான் மிஸ்திரி ஆகிய இருவருடம் அடுத்த 18 மாதங்களுக்கு ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் பல்வேறு வர்த்தகப் பிரிவுகளில் பணியாற்றி வர்த்தகச் செயல்பாடுகளையும், வர்த்தக முறைகளையும் கற்க உள்ளனர். இதன் பின்பு இருவருக்கும் நிர்வாகத்தில் நேரடி அதிகாரம் கொண்ட பொறுப்புகள் வழங்கப்பட உள்ளது.

வெளிநாட்டு கல்லூரி

வெளிநாட்டு கல்லூரி

இந்த நிலையில் ஃபிரோஸ் மிஸ்திரி யேல் பல்கலைக்கழகத்திலும் மற்றும் ஜஹான் மிஸ்திரி வார்விக் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் தான் பட்டப்படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பினர். இதற்குள் தாத்தா மற்றும் தந்தையின் மரணம் இவர்களுடைய குடும்பத்தை தலைகீழாகப் புரட்டிப்போட்டது மட்டும் அல்லாமல் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் நிர்வாகத்தையும் தடுமாறச் செய்தது.

ஷபூர் மிஸ்திரி

ஷபூர் மிஸ்திரி

ஆனால் சைரஸ் மிஸ்திரியின் மூத்த சகோதரர் ஷபூர் மிஸ்திரி நிர்வாகப் பொறுப்பை ஏற்ற உடன் சில முக்கிய மாற்றங்கள் மூலம் நம்பிக்கை அளித்தது. இதேபோல் தற்போது ஃபிரோஸ் மிஸ்திரி மற்றும் ஜஹான் மிஸ்திரி வருகை மூலம் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் கூடுதல் நம்பிக்கை உருவாகியுள்ளது.

ஷபூர் மிஸ்திரியின் மகன் Pallon

ஷபூர் மிஸ்திரியின் மகன் Pallon

SP குழுமத்தில் உள்ள ஒவ்வொரு மூத்த அதிகாரிகளும் தங்கள் தந்தையின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல அவர்களுக்கு ஆதரவளிப்பார்கள் என இக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தில் ஷபூர் மிஸ்திரியின் மகன் Pallon, ஹோல்டிங் நிறுவனமான ஷபூர் பல்லோன்ஜி & கோ (SPCPL) குழுவில் சேர்ந்தார்.

8 நிறுவனங்கள்

8 நிறுவனங்கள்

தற்போது Pallon சுமார் எட்டு குழும நிறுவனங்களின் குழுவில் இயக்குநராக உள்ளார். Pallon கடந்த 5 வருடத்திற்கு அவருடைய சந்தை தந்தை ஷபூர் மிஸ்திரி, சைரஸ் மிஸ்திரி மற்றும் மூத்த குழு நிர்வாகிகளால் வழிநடத்தப்பட்டார். தற்போது நிர்வாக அதிகாரத்தில் ஷபூர் மற்றும் சைரஸ் மிஸ்திரியின் பிள்ளைகள் புதிய போட்டியை எதிர்கொள்கின்றனர்.

யார் இந்த சைரஸ் மிஸ்திரி.. டாடா குழுமத்திற்கு, இவருக்கும் என்ன சம்பந்தம்..!யார் இந்த சைரஸ் மிஸ்திரி.. டாடா குழுமத்திற்கு, இவருக்கும் என்ன சம்பந்தம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cyrus Mistry son's Firoz Mistry, Zahan Mistry join Shapoorji Pallonji Group after his death

Cyrus Mistry son's Firoz Mistry, Zahan Mistry join Shapoorji Pallonji Group after his death
Story first published: Wednesday, December 7, 2022, 17:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X