டாப் 100 பட்டியலில் நுழைந்தார் டிமார்ட் தமனி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரீடைல் சந்தையில் தனக்கெனத் தனி வர்த்தக முறையை வைத்துக்கொண்டு மிகப்பெரிய வாடிக்கையாளர் கூட்டத்தைச் சம்பாதித்துள்ள டிமார்ட் பிராண்ட்-ன் தலைவரான ராதாகிஷன் தமனி முதல் முறையாக ப்ளூம்பெர்க்-ன் உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் நுழைந்துள்ளார்.

 

ஓலா S1 ஸ்கூட்டர் விலை இங்கு மட்டும் குறைவு.. ஏன்.. எவ்வளவு.. இஎம்ஐ திட்டம்.. எப்படி புக் செய்யலாம்!

ராதாகிஷன் தமனி சாதனை

ராதாகிஷன் தமனி சாதனை

ராதாகிஷன் தமனியின் பெரும் பகுதி சொத்து மதிப்பு டிமார்ட் பிராண்டை வைத்திருக்கும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இருப்பு மற்றும் இதர பங்கு முதலீடுகள் மூலமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

பத்திரிக்கைகளுக்குப் பேட்டி கொடுப்பதில் மிகவும் கூச்சப்படும் ராதாகிஷன் தமனி உலகப் பணக்காரர்களில் டாப் 100 பேர் கொண்ட பட்டியலில் நுழைந்துள்ளார்.

19.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு

19.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு

ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள படி அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ராதாகிஷன் தமனி-யின் சொத்து மதிப்பு 19.2 பில்லியன் டாலர் உடன், டாப் 100 பேர் பட்டியலில் 98வது இடத்தில் உள்ளார்.

வேல்யூ இன்வெஸ்டிங்
 

வேல்யூ இன்வெஸ்டிங்

பெரும் பின்புலம் இல்லாமல் பங்கு முதலீட்டின் மூலம் அதிக லாபத்தைப் பெற்று ரீடைல் சந்தைக்குள் நுழைந்த ஒரு தொழிலதிபர். சாமானிய மக்கள் தளத்தில் இருந்து இன்று உலகின் டாப் 100 பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் ராதாகிஷன் தமனி.

ஆன்லைன் வர்த்தக விரிவாக்கம்

ஆன்லைன் வர்த்தக விரிவாக்கம்

டிமார்ட் இந்தியாவில் தற்போது பல இடங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் இதேவேளையில், ஆன்லைன் வர்த்தகச் சேவை பிரிவையும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் மற்றும் வர்த்தகம் அதிகரித்து வருகிறது.

2021ல் பெரும் வளர்ச்சி

2021ல் பெரும் வளர்ச்சி

2021ஆம் ஆண்டில் மட்டும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகள் சுமார் 28 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் ராதாகிஷன் தமனியின் சொத்து மதிப்பு 2021ல் மட்டும் 4.3 பில்லியன் டாலர் வரையில் அதிகரித்துள்ளது. மேலும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தில் தமனியின் பங்கு இருப்பு 32 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

டிமார்ட் வர்த்தக முறை

டிமார்ட் வர்த்தக முறை

டிமார்ட் இந்தியாவில் சுமார் 11 மாநிலம், 1 யூனியன் பிரதேச பகுதிகளில் ரீடைல் வர்த்தகம் செய்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் பிற ரீடைல் நிறுவனங்களைப் போல் கடைகளை வாடகைக்கும், குத்தகைக்கும் எடுக்காமல், கட்டிடம் அல்லது நிலத்தை வாங்கி அதில் வர்த்தகம் செய்யும் வழக்கத்தைக் கொண்டு உள்ளது அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்.

விரிவாக்கத்தின் வேகம் சரிவு

விரிவாக்கத்தின் வேகம் சரிவு

இதனால் வாடகை மற்றும் குத்தகை பணத்தைப் பெரிய அளவிலான தொகையை மிச்சப்படுத்துகிறது. இந்தக் கட்டமைப்புக் காரணமாக டிமார்ட் கடைகளின் விரிவாக்கம் மிகவும் ஸ்லோவாக உள்ளது. அதேபோல் வர்த்தகம் இல்லாத குறிப்பாகக் கொரோனா காலத்தில் வர்த்தகம் குறைந்தாலும் நஷ்டம் அடையாமல் உள்ளது டிமார்ட்.

ரியல் எஸ்டேட் துறை

ரியல் எஸ்டேட் துறை

கொரோனா காலத்தால் ரியல் எஸ்டேட் துறை மந்தமாகவும், விலை பெரிய அளவில் குறைந்தும் காணப்பட்ட காரணத்தால் இதைச் சரியாகப் பயன்படுத்த முடிவு செய்த அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் தலைவர் ராதாகிஷன் தமனி சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் மும்பை, ஹைதராபாத், புனே, பெங்களூர் ஆகிய பகுதிகளில் சுமார் 7 இடங்களில் சொத்துக்களை 2021ல் வாங்கியுள்ளதாக ஜூன் மாதம் அறிவிப்பு வெளியானது.

இந்தியா சிமெண்ட் முதலீடு

இந்தியா சிமெண்ட் முதலீடு

இது மட்டும் அல்லாமல் ராதாகிஷன் தமனி கடந்த இரண்டு வருடமாக இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் சுமார் 674 கோடி ரூபாய் மதிப்பிலான 12.7 சதவீத பங்குகளில் முதலீடு செய்து கைப்பற்றியுள்ளார். இதுவும் ராதாகிஷன் தமனி சொத்து மதிப்பு உயர்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

அடுத்தது லட்சுமி மிட்டல்

அடுத்தது லட்சுமி மிட்டல்

அடுத்தச் சில மாதத்தில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் ராதாகிஷன் தமினி உலகின் முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவன தலைவரான லட்சுமி மிட்டல்-ஐ முந்துவார் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

D-Mart Radhakishan Damani enters into Bloomberg world’s top 100 richest people list

D-Mart RK Damani enters into Bloomberg world’s top 100 richest people list
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X