தினசரி 15 நிமிட உடற் பயிற்சியால் உலக பொருளாதாரம் மேம்படும்.. அதுவும் வருடத்துக்கு ரூ.7 லட்சம் கோடி.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை போக்க ஒவ்வொரு நாடும் பல துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் படி, முதலாளிகள் தங்களது ஊழியர்களை உடற்பயிற்சி செய்ய ஊக்குவித்தால், உலக பொருளாதாரத்தை ஆண்டுக்கு 7 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த முடியும் என்று ஒர் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அது எப்படி உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தினால் பொருளாதாரத்தினை மேம்படுத்த முடியும் என்று கேட்கிறீர்களா? அதை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.

300 புள்ளிகள் சரிவு..! ஆனாலும் 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..!

உடற்பயிற்சி பொருளாதாரத்தினை மேம்படுத்தும்
 

உடற்பயிற்சி பொருளாதாரத்தினை மேம்படுத்தும்

தினசரி ஒருவர் 15 நிமிடங்கள் கூடுதலாக நடப்பது அல்லது ஒவ்வொரு நாளும், ஒரு கிலோ மீட்டர் ஜாக்கிங் செய்வது, அவர்களின் திறனை மேம்படுத்துவதோடு, ஆயுட்காலத்தையும் அதிகரிக்கும். இதனால் வேலை செய்யும் திறனும் அதிகரிக்கும். இது அதிக பொருளாதார மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் என்றும் சுகாதார காப்பீட்டுக் குழுவான வைட்டாலிட்டி மற்றும் திங் டாங்க் ராண்ட் ஐரோப்பா ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

வேலை செய்யும் திறன் அதிகரிக்கும்

வேலை செய்யும் திறன் அதிகரிக்கும்

மேலும் பொருளாதார ஊக்கமானது குறைந்த அளவு இறப்பு விகிதத்திலிருந்தே வரும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்படுகிறது. இதை வேறு விதமாகக் கூறினால் அதிகமான மக்கள் இருக்கும் போது, நீண்ட காலத்திற்கு, அதிக வேலை செய்வார்கள். இது நீண்ட காலத்திற்கு பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவும் என்றும் இந்த ஆய்வறிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

பெரியோர்களுக்கு பரிந்துரை

பெரியோர்களுக்கு பரிந்துரை

மேலும் இதற்காக உலக சுகாதார அமைப்பு அனைத்து பெரியவர்களும் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் வீரியமான உடற்பயிற்சியை வாரத்திற்கு 75 நிமிடம் மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அமெரிக்காவில் 40 சதவிகித பெரியவர்களும், இதே பிரிட்டனில் 36 சதவிகித பெரியவர்களும், இதே சீனாவில் 14 சதவிகிதம் பேரும் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

பலரிடம் ஆய்வு
 

பலரிடம் ஆய்வு

இந்த ஆய்வானது உலக அளவில் ஏழு நாடுகளில் 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இது உலகளவில் மற்றும் 23 தனிப்பட்ட நாடுகளில், அதிகரித்த உடற் பயிற்சியினால் சாத்தியமான பொருளாதார நன்மைகளையும் சுட்டி காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் உடல் ரீதியாக செயலற்ற 40 வயதுடையோர் ஒரு நாளைக்கு 20 நிமிட ஜாகிங்கை செய்வதன் மூலம், தங்களது ஆயுட்காலத்தை சராசரியாக 3.2 ஆண்டுகள் அதிகரிக்கக் கூடும் என்றும் அது கண்டறிந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Daily 15-minute walks could boost global economy to Rs.7 lakh crore

Daily 15-minute walks could boost global economy to Rs.7 lakh crore. World health organization recommends that all adults should take at least 150mins of simple exercise, or 75mins of hard exercise, a week.
Story first published: Friday, November 8, 2019, 17:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X