10 கோடி மொபிகுவிக் பயனர்களின் தரவுகள் டார்க் வெப்பில் விற்பனையா? உண்மை நிலவரம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் நிறுவனமான மொபிகுவிக் நிறுவனத்தின், வாடிக்கையாளர்களின் தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் பேமெண்ட் செயலியான மொபிகுவிக்கில் இருக்கும், பயனர்களின் தகவல்கள், பெயர், பான் எண், ஆதார எண், மற்ற கேஓய்சி விவரங்கள் டார்க் வெப் இணையத்தில் கசிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிவு தரவு லீக்காக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில் தற்போது 10 கோடிக்கும் அதிகமான மொபிகுவிக் வாடிக்கையாளர்களின் தரவுகள் டார்க் வெப்பில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிறுவனம் மறுப்பு

நிறுவனம் மறுப்பு

நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தில், அப்படி ஏதும் நடக்கவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் நாங்கள் இதுகுறித்து விசாரித்தோம். எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடுகளையும் நாங்கள் காணவில்லை. எங்கள் பயனர் மற்றும் நிறுவனத்தின் தரவு முற்றிலும் பாதுகாப்பனது என்றும் இந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

தரவுகள் பாதுகாப்பாக உள்ளது

தரவுகள் பாதுகாப்பாக உள்ளது

அதோடு வெளியான தகவல்கள் உண்மையானவை அல்ல, அது போல யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். மொபிகுவிக் வாடிக்கையாளர்களின் தரவுகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. மேலும் இந்த தவறான குற்றச்சாட்டை வைத்த ஆராச்சியாளர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த மாதத் தொடக்கத்திலேயே கூறப்பட்டது.

நிபுணர்கள் உறுதி
 

நிபுணர்கள் உறுதி

இந்த தரவுகள் லீக் விஷயத்தினை மொபிகுவிக் நிறுவனம் மறுத்தாலும், பிரெஞ்சு பாதுகாப்பு ஆராச்சியாளார் ராபர்ட் பாப்டிஸ் அல்லது எலியட் ஆண்டர்சன் உட்பட சில ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதில் மெயில் ஐடிக்கள், மொபைல் எண்கள், பெயர்கள், முகவரிகள், பாஸ்வேர்டு, ஜிபிஎஸ் லோகேஷன்ஸ் உள்ளிட்ட பல தனிப்பட்ட தகவல்களும் 8 terabytes அளவு திருடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆய்வாளர்கள் எச்சரிக்கை

ஆய்வாளர்கள் எச்சரிக்கை

ஆக இதனால் ஹேக்கர்களிடம் இருந்து திருடப்பட்ட தகவல்களினால் பயனர்கள் பாதுகாப்பு கருதி தங்களது பாஸ்வேர்டு மற்றும் கீ வேர்டுகளை மாற்ற வேண்டும். ஆக உங்களது கணக்கினை தொடர்ந்து கண்கானிக்க வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் மொபிகுவிக் மூலம் கடன் வாங்கிய வணிகர்களின் தனிப்பட்ட தரவுகளும் பிட்காயிங்களுக்கு ஈடாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பரிவர்த்தனைகளை கண்கானியுங்கள்

பரிவர்த்தனைகளை கண்கானியுங்கள்

உண்மையில் இந்த தரவுகள் விற்கப்பட்டதா? பாதுகாப்பாக உள்ளதா? என்பது உறுதிபட தெரியவில்லை. மேலும் இதனை அறிந்து கொள்வது அவசியமான ஒன்று என்றாலும், அதற்கு முன்பு பாதுகாப்பு என்பது மிக அவசியமானதாக உள்ளது. ஆக உங்களது முக்கியமான பாஸ்வேர்டுகளை ரீசெட் செய்யலாம். உங்களது பரிமாற்றங்களையும் தொடர்ந்து ஒவ்வொன்றையும் கண்கானிக்க வேண்டும். ஏதேனும் மாற்றமிருந்தால் உடனே தக்க நடவடிக்கை எடுக்கலாம். இதுவே உங்களை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: mobikwik
English summary

Data of 10 crore mobikwik users for sale on dark web, says industry experts

mobikwik data leak updates.. Data of 10 crore mobikwik users for sale on dark web, says industry experts
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X