டிசம்பர் 31ஆம் தேதி கடைசி.. இதை மறந்துவீடாதீர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஆண்டு ஜூலை மாதம் வருமான வரி கணக்கு அறிக்கையைத் தாக்கல் செய்யத் தவறியவர்களில் நீங்களும் ஒருவரா?

டிசம்பர் 31, 2022 வரை தாமதக் கட்டணத்துடன் ITRஐ தாக்கல் செய்ய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது, அதாவது அடுத்த ஒரு நாளில் தாக்கல் செய்ய வேண்டும்.

2021-22 நிதியாண்டிற்கான (AY 2022-23) தாமதமான மற்றும் திருத்தப்பட்ட ITRஐ தாக்கல் செய்ய டிசம்பர் 31 கடைசி நாளாகும்.

ஜிஎஸ்டி: எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைப்பு.. முழு விபரம்..!ஜிஎஸ்டி: எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைப்பு.. முழு விபரம்..!

வருமான வரி

வருமான வரி

வருமான வரிச் சட்டங்களின் கீழ், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யக் கடைசித் தேதியைத் தவறவிட்ட தனிநபர், தாமதமான ITRஐ தாக்கல் செய்ய அனுமதிக்கும் விதி உள்ளது. மாத சம்பளக்காரர்கள் கணக்கியல் ஆண்டு 2022-23 அதாவது 2021-22ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31, 2022 ஆகும்.

காலக்கெடு

காலக்கெடு

இந்தக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்கு அறிக்கை தான் தாமதமான ITR எனப்படும். தாமதமான ITR ஐ தாக்கல் செய்யும் போது ஒருவர் தாமதமாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.

அவகாசம்

அவகாசம்

முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், இந்த ஆண்டு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை, மேலும் ஐடிஆர்களைத் தாக்கல் செய்வது தொடர்பான சிக்கல்கள் குறித்து வருமான வரித்துறை தனது FAQ-வில் விளக்கம் கொடுத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கொரோனா மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வருமான வரி தாக்கல் செய்ய அதிகப்படியான கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

சிறு வழிக்காட்டி

சிறு வழிக்காட்டி

நீங்கள் வருமான வரி அறிக்கையைத் தற்போது தாக்கல் செய்யப் போகிறீர்கள் என்றால் உங்களுக்கான குவிக் அப்டேட். என்ன செய்ய வேண்டும்..? எப்படிச் செய்ய வேண்டும்..? என்பதற்கான சிறு வழிக்காட்டி..

வரி விலக்கு வரம்பு

வரி விலக்கு வரம்பு

ஐடிஆர் தாக்கல் செய்வதைத் துவங்கும் முன், உங்கள் மொத்த வருமானம் விலக்கு வரம்பை மீறுகிறதா என்பதை நீங்கள் முதலில் உறுதிப்படுத்த வேண்டும். 60 வயதிற்குட்பட்ட தனிநபர்களுக்கு, நீங்கள் புதிய வருமான வரி முறையைத் தேர்வு செய்தாலும் அல்லது பழையதைத் தேர்வு செய்தாலும், வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2.5 லட்சம் வரை இருக்கும்.

2.5 லட்ச ரூபாய்

2.5 லட்ச ரூபாய்

இதன் மூலம் மொத்த வருமானத்தில் நீங்கள் 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால், நீங்கள் கட்டாயமாக ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். இதுதான் முதல் படி. இதைத் தாண்டிவிட்டால் அதாவது உங்களின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் ஐடிஆர் தாக்கல் செய்வதற்குத் தேவையான ஆவணங்களைச் சேகரிப்பது அடுத்த கட்டம்.

 முக்கிய ஆவணங்கள்

முக்கிய ஆவணங்கள்

இதற்கு நீங்க படிவம் 16 (நீங்கள் பணியாற்றும் நிறுவனத்திடம் இருந்து பெறலாம்), படிவம் 16A (வங்கிகளில் இருந்து), வட்டி சான்றிதழ்கள், மூலதன ஆதாய அறிக்கைகள் போன்ற பல்வேறு வரி விலக்கு கிடைக்கும், மற்றும் வரி செலுத்தியதற்கான ஆவணங்களை விரைவாகச் சேகரிக்க வேண்டும்.

e-Verify

e-Verify

இதன் அடிப்படையில் வருமான வரித் தளத்தில் உங்கள் முதலீடு, செலவுகளைப் பதிவிட்டு வருமான வரி அளவுகளைத் தெரிந்துகொண்டு இதேதளத்தில் வரியை செலுத்திக்கொள்ள முடியும். உரியத் தொகையை வருமான வரியாகச் செலுத்திய பின்பு கட்டாயம் ITR படிவத்தை e-Verify செய்ய மறந்துவிடாதீர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dec 31 Last day to file belated and revised ITR AY 2022-23

Dec 31 Last day to file belated and revised ITR AY 2022-23. usually, last date to file income tax return (ITR) for AY 2022-23 (FY 2021-22) for salaried individuals is July 31 for every year. But everyone can file a belated ITR with late filing fee. The income tax return filed after the deadline is called a belated ITR. One will have to pay a late filing fee when filing a belated ITR.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X