கொரோனா நோயாளிகள்: 60 நிமிடத்தில் இன்சூரன்ஸ் கிளைம்-க்கு ஒப்புதல்.. புதிய உத்தரவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாமல் இருக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்விதமான தாமதமும் இல்லாமல் மருத்துவமனையில் படுக்கை கிடைக்க வேண்டும் என்பதற்காக டெல்லி உயர் நீதிமன்ற இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பான IRDAI-க்கு சில முக்கியமான உத்தரவுகளை விடுத்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் இந்த உத்தரவுகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

 டெல்லி உயர் நீதிமன்ற

டெல்லி உயர் நீதிமன்ற

நீதிபதி பிரதீபா எம் சிங் தலைமையிலான டெல்லி உயர் நீதிமன்ற பென்ச் மருத்துவமனையில் நோயாளிகளின் அட்மிஷன் குறித்தும், நிர்வாகம் செய்யும் முறை குறித்துத் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையில் சில முக்கியமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

 கொரோனா நோயாளிகள்

கொரோனா நோயாளிகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்ப மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்பு, கொரோனா சிகிச்சைக்கான இன்சூரன்ஸ் வைத்துள்ள நோயாளிகளின் இன்சூரன்ஸ் கிளைம் ஒப்புதல் பெறப் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைப்பதற்குத் தாமதமாகி வருகிறது.

 இன்சூரன்ஸ் கிளைம் : 60 நிமிடத்திற்குள் ஒப்புதல்

இன்சூரன்ஸ் கிளைம் : 60 நிமிடத்திற்குள் ஒப்புதல்

இந்த நிலையை உடனடியாகச் சரி செய்யும் விதமாக நீதிபதி பிரதீபா எம் சிங் தலைமையிலான டெல்லி உயர் நீதிமன்ற பென்ச், கொரோனா நோயாளிகளின் இன்சூரன்ஸ் கிளைம் கோரப்பட்டால் 30 நிமிடம் முதல் 60 நிமிடத்திற்குள் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என இன்சூரன்ஸ் கட்டுப்பாடு அமைப்பான IRDAI-க்கு உத்தரவிட்டுள்ளது.

 IRDAI அமைப்பு

IRDAI அமைப்பு

இதன் மூலம் IRDAI தனது கட்டுப்பாட்டிற்குள் கீழ் இருக்கும் அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அல்லது ஏஜென்ட்களை இதை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, எவ்விதமான தாமதமும் இல்லாமல் இதைச் செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

 மருத்துவமனை நிர்வாகம்

மருத்துவமனை நிர்வாகம்

இதேபோல் மருத்துவமனை நிர்வாகமும் இந்த 30 முதல் 60 நிமிட அவகாசத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நோயாளிகளுக்கான பணிகளையும், புதிய அட்மிஷன்களைப் பெறுவதற்கான பணிகளையும் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்ற பென்ச்.

 இந்தியாவின் நிலை

இந்தியாவின் நிலை

மேலும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படுவது மூலம் பல உயிர்களையும் காப்பாற்ற முடியும், கால தாமதமாகும் ஒவ்வொரு நிமிடத்திற்குப் பல உயிர்கள் மருத்துவமனைக்கு வெளியில் துடித்துக்கொண்டு உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Delhi HC Directs IRDAI, COVID Patients Insurance claim should be Approved Within 30-60 Minutes while Discharge

Covid latest update.. COVID Patient Insurance update.. Delhi HC Directs IRDAI, COVID Patients Insurance claim should be Approved Within 30-60 Minutes while Discharge
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X