யுஏஎன் - ஆதார் இணைப்பு: நவம்பர் 30 வரையில் கால நீட்டிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

EPFO அமைப்பு அனைத்து வாடிக்கையாளர்களையும் தங்களது யுஏஎன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதுமட்டும் அல்லாமல் இணைக்கப்படாத கணக்கிற்குச் செப்டம்பர் 1 முதல் பிஎஃப் பணத்தை வரவு வைக்க வேண்டாம் எனவும் நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டது.

 

14 குஜராத் நிறுவனங்களின் வியக்க வைக்கும் வளர்ச்சி.. 4 மடங்கு லாபம்..!

இந்நிலையில் தற்போது டெல்லி உயர் நீதிமன்றம் யுஏஎன் - ஆதார் இணைப்பு மற்றும் அதன் வெரிபிகேஷன்-க்கும் நவம்பர் 30 வரையில் கால நீட்டிப்புச் செய்ய உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் 30 வரை நீட்டிப்பு

நவம்பர் 30 வரை நீட்டிப்பு

நீதிபதி பிரதீபா எம் சிங் வெளியிட்டுள்ள தீர்ப்பில் யுஏஎன் - ஆதார் இணைப்பு மற்றும் அதன் வெரிபிகேஷன்-க்கும் நவம்பர் 30 வரையில் கால நீட்டிப்புச் செய்ய உத்தரவிட்டுள்ளது மட்டும் அல்லாமல், நிறுவனங்கள் அதுவரையில் தத்தம் ஊழியர்கள் கணக்கில் பணத்தை வைப்பு வைக்க வேண்டும் என்றும், வைப்பு வைக்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

சேவைகள் முடக்கக் கூடாது

சேவைகள் முடக்கக் கூடாது

ஆதார் தீர்ப்பின் படி ஆதார் கட்டாயம் இணக்கப்படத் தேவை இல்லாத போது அதற்கான சேவைகள் எதுவும் நிறுத்தப்படக் கூடாது. மேலும் ஆதார் தரவுகள் சரிபார்ப்புத் தோல்வி அல்லது வெரிபை செய்யத் தவறும் காரணத்தாலும் அதற்கான சேவைகளை நிறுத்தக்கூடாது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

யுஏஎன் - ஆதார் இணைப்பு
 

யுஏஎன் - ஆதார் இணைப்பு

இந்தத் தீர்ப்பு மூலம் இதுநாள் வரையில் யுஏஎன் - ஆதார் இணைப்பு செய்யாதவர்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் எளிதாகச் செய்ய முடியும். இதனால் உங்கள் கணக்கில் வரும் பணத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை.

இணைப்பது எப்படி

இணைப்பது எப்படி

சரி சில நிமிடங்களில் உட்கார்ந்த இடத்திலேயே யுஏஎன் எண் உடன் ஆதார் எண் இணைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

படி 1. முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ இணையதளப் பக்கத்திற்குச் செல்லுங்கள்

படி 2. உங்கள் UAN எண், பாஸ்வோர்டு மற்றும் கேப்சா ஆகியவற்றைக் கொடுத்து உள் நுழையுங்கள்.

படி 3. மெனுவில் இருக்கும் "Manage" என்பதைக் கிளிக் செய்து, KYC கிளிக் செய்யுங்கள்

படி 4. KYC கிளிக் செய்த உடன் புதிய பக்கத்திற்குச் செல்லும், இந்தப் பக்கத்தில் நீங்கள் ஏற்கனவே ஆதார் எண்-ஐ இணைத்திருந்தால் எவ்விதமான பிரச்சனையும் இல்லை.

படி 5. ஆதார் எண் இல்லாத பட்சத்தில் ஆதார் என்பதைக் கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்-ஐ பதிவிடுங்கள்.

படி 6. ஆதார் எண்-ஐ பதிவு செய்த பின்பு Save என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

படி 7. Save பட்டனை கிளிக் செய்த உடன் ஆதார் தரவுகளில் பெயர், பிறந்த நாள் ஆகியவை சரிபார்க்கப்படும்.

படி 8. அனைத்து தரவுகளும் சரியாக இருக்கும் பட்சத்தில் அப்ரூவ் செய்யப்பட்ட KYC அறிக்கையை நீங்கள் பெறுவீர்கள். ஆதார் தரவுகளுக்குக் கீழ் "Verified" என எழுதப்பட்டு இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Delhi High Court extends Aadhaar - UAN linking deadline till November 31

Delhi High Court extends Aadhaar - UAN linking deadline till November 31
Story first published: Saturday, September 25, 2021, 12:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X