ஆசை ஆசையாய் ஆர்டர் செய்த உணவு.. ரொம்ப டேஸ்டா இருக்கு, சாரி.. மெசேஜ் போட்ட டெலிவரி மேன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆன்லைன் ஷாப்பிங் என்பது அதிகரித்து வரும் இந்த சூழலில், அதில் சில குளறுபடிகளும் இருக்கத்தான் செய்கின்றன. பொதுவாக ஆன்லைன் ஆர்டர்களில் இருக்கும் சிக்கல் டெலிவரி நேரம் தான்.

 

அது இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆகட்டும், உணவு டெலிவரி, மளிகை டெலிவரி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். பொதுவாக வரும் பிரச்சனைகளில் ஒன்று சரியான நேரத்தில் டெலிவரி செய்யப்படாதது தான்.

இதனால் ஆங்காங்கே நடைபெறும் சில சம்பவங்களையும் வலைதளங்களில் பார்க்க முடிகின்றது. உதாரணத்திற்கு நாம் ஆசை ஆசையாய் பார்த்து பார்த்து ஆர்டர் செய்த உணவு சரியான நேரத்தில் டெலிவரி செய்யப்படாவிட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்.

ஆன்லைன் ஷாப்பிங் செய்பவரா நீங்க.. கேஷ் ஆன் டெலிவரி-க்கு பிளிப்கார்ட் எடுக்க போகும் முடிவு! ஆன்லைன் ஷாப்பிங் செய்பவரா நீங்க.. கேஷ் ஆன் டெலிவரி-க்கு பிளிப்கார்ட் எடுக்க போகும் முடிவு!

டெலிவரி தாமதம்

டெலிவரி தாமதம்

அதனை சரியான நேரத்தில் டெலிவரி செய்யாததது கூட பரவாயில்லை. அதற்கு டெலிவரி மேன்கள் சொல்லும் காரணம் தான் இன்னும் கடுப்பேற்றும். அதுவும் பசி நேரத்தில் ஆர்டர் செய்த உணவு வராவிட்டால் எப்படியிருக்கும்? நினைத்து பார்க்கவே கடுப்பாகிறது இல்லையா? ஆனால் இப்படி ஒரு சம்பவம் தான் இணையத்தில் பரவி வருகின்றது.

அறியாமையா?

அறியாமையா?

இந்த கதையில் டெலிவரி மேன் சொன்ன காரணம் அவரின் குசும்புத் தனத்தை காட்டுகின்றதா? அல்லது அறியாமையா? எனத் தெரியவில்லை. எனினும் உணவை ஆர்டர் செய்த இளைஞர் பாவம் ( @bodybagnall ) எனலாம்.

இது குறித்து இங்கிலாந்தின் பிரபலமான டெலிவரோ நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்தவர், தனது ட்விட்டர் பக்கத்தில் , டெலிவரி ஓட்டுனர் இன்று காலை முரட்டுத்தனமாக சென்றுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். அதனுடன் டெலிவரி மேனுடன் உரையாடிய ஸ்க்ரீன் சாட்டையும் பகிர்ந்துள்ளார்.

என்ன ஆச்சு?
 

என்ன ஆச்சு?

அதில் டெலிவரி மேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார். உணவு ஆர்டர் செய்தவர் என்ன ஆயிற்று என்று கேட்டதற்கு, நீங்கள் ஆர்டர் செய்த உணவு ரொம்ப சுவையாக இருந்தது. அதனால் அதனை சாப்பிட்டுவிட்டேன். நீங்கள் வேண்டுமானால் நிறுவனத்தில் புகார் அளித்து விடுங்கள் என கூலாக பதிலளித்துள்ளார்.

நீங்க ரொம்ப மோசமான மனிதன்

நீங்க ரொம்ப மோசமான மனிதன்

அதுமட்டும் அல்ல, இதற்கு உணவு ஆர்டர் செய்த நபர் நீங்கள் மோசமான மனிதர் என்று கூறியதற்கு, எனக்கு அதை பற்றி எனக்கு கவலை இல்லை என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் @bodybagnall என்பவர் பதிவிட்டுள்ளார். இதனை பல ஆயிரம் பேர் லைக் செய்தும், கமண்ட் செய்தும் வருகின்றனர்.

ஆப்பை நீக்கி விட்டேன்

ஆப்பை நீக்கி விட்டேன்

இதே போன்று இன்னும் சிலர் தங்களது பதிவினை @bodybagnall டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர். அதில் marvin million என்பவர் டெலிவரோவில் எதையும் எதிர்பார்க்காதே. நான் எனது கணக்கினை முடித்துவிட்டேன். எனது ஸ்மார்ட்போனில் ஆப்-னையும் நீக்கிவிட்டேன் என பதிவிட்டுள்ளார்.

2 மணி நேரம் கழித்து கால்

2 மணி நேரம் கழித்து கால்

இது குறித்து அவர் ஷேர் செய்த ஸ்கீரின் சாட்டில் எனது உணவு ஆர்டர் செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து டெலிவரி செய்யப்பட்டுள்ளது என லைவ் சாட்டில் தெரிவித்துள்ளார். ஆனால் உணவு டெலிவரி செய்யப்படவில்லை. அதற்கு எங்களது ஏஜெண்டுகள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வார்கள் என நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய உணவு வரும்

புதிய உணவு வரும்

மேலும் அதில் marvin நான் உணவகத்திற்கு கால் செய்து கேட்டபோது, டிரைவர் உங்களது உணவினை எடுத்து சென்று விட்டார். அதனால் உங்களுக்கு புதிய ஆர்டரை டெலி வரி செய்கிறோம் என கூறியதாகவும் சாட்டிங்கில் உள்ளது. மேலும் இது மிக அபத்தமானது. எனக்கு எனது பணம் திரும்ப வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ரீ பண்ட் வேண்டும்

ரீ பண்ட் வேண்டும்

ஆனால் டெலிவரி நிறுவனமோ உங்களது ஆர்டர் சரியான நேரத்தில் கிடைத்து விடும். நாங்கள் கூறிய நேரத்தில் சரியாக கொண்டு வந்து சேர்ப்போம் என்று கூறிய நிலையில், எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். நாங்கள் இதனை எங்களது கணினியில் வைத்துக் கொள்கிறோம். எங்களது டெலிவரி சேவையை மேம்படுத்த நிர்வாகத்திடம் பேசுகிறோம் என கூறிய நிலையில், பின்னர் ஒரு வழியாக பணத்தினை திரும்ப கொடுக்க சம்மதித்துள்ளதை அந்த ஸ்கீரின் சாட்டில் பார்க்க முடிகின்றது.

குப்பையில் தான் போடணும்

குப்பையில் தான் போடணும்

டெலிவரி நிறுவனம் டிரைவர் அதனை திருடிவிட்டார் என்று கூறியதாகவும், எனக்கு என் பணம் தான் வேண்டும், என்னால் இந்த குப்பையை சாப்பிட முடியாது. இதனை என் நாய்க்கு கொடுப்பதில் நான் குற்ற உணர்வோடு இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

பாவம் மனுசன் ரொம்ப பசியா இருந்திருப்பார் போல.. உங்களுக்கு இப்படி ஒரு அனுபவம் இருக்கா என்ன?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Delivery man eats customer's very tasty food: he text later this food is very tasty

Delivery man who ate the food ordered, excuse me, the food you ordered was delicious. So he has given a message that he has eaten it
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X