DELL அதிரடி அறிவிப்பு.. 6650 ஊழியர்கள் பணிநீக்கம்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கம்ப்யூட்டர் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் அமெரிக்காவின் பிரபலமான DELL நிறுவனம் சுமார் 6650 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும், ஊழியர்களுக்கு விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் அதிக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிறுவனங்கள் பட்டியலில் DELL நிறுவனமும் இணைந்துள்ளது.

ஊழியர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்த DELL சிஇஓ.. இனி செம ஜாலி தான்..! ஊழியர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்த DELL சிஇஓ.. இனி செம ஜாலி தான்..!

இன்டெல்

இன்டெல்

 


உலகளவில் நிலவும் ரெசிஷன் பாதிப்பு மூலம் கம்ப்யூட்டர் விற்பனை பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இன்டெல் நிறுவனம் நஷ்டம் அடையும் என்றும், வருவாய் 3 பில்லியன் டாலர் வரையில் சரியும் என்றும் கணிக்கப்பட்டு அறிவிப்பை வெளியிட்ட ஒரே நாளில் 8 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்தது மறக்க முடியாது.
இதற்கு இன்டெல் கூறிய முக்கியக் காரணம் பர்சனல் கம்ப்யூட்டர் விற்பனை குறைவது தான். இதைக் காரணத்தை மையமாக வைத்து டெல் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டது.

 

DELL நிறுவனம்

DELL நிறுவனம்

இன்று DELL நிறுவனத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரியான ஜெப் கிளார்க் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் மோசமான சந்தை சூழ்நிலை காரணமாக நிறுவனத்தின் எதிர்காலத்தில் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது.

 பொருளாதார சூழ்நிலை

பொருளாதார சூழ்நிலை

டெல் நிறுவனம் இதற்கு முன்பு பல பொருளாதார சூழ்நிலைகளை எதிர்கொண்டு சரிவில் இருந்து மீண்டு வந்துள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் பொருளாதாரப் பிரச்சனைகளையும் சமாளித்து மீண்டு வர நிறுவனம் தயாராக இருக்க வேண்டும் என DELL நிறுவனத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரியான ஜெப் கிளார்க் இந்த ஈமெயிலில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டிய போது டெல் 2020ல் இதேபோன்ற லாக்டவுன் அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் பர்சனல் கம்ப்யூட்டர் ஏற்றுமதிகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தொழில்துறை ஆய்வு நிறுவனமான ஐடிசி தெரிவித்து.

விற்பனை சரிவு

விற்பனை சரிவு

IDC தரவுகள் படி, 2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் பர்சனல் கம்ப்யூட்டர் பிரிவில் இருக்கும் பெரிய நிறுவனங்களான டெல் 37 சதவீத வர்த்தகப் பாதிப்பை சந்தித்துள்ளது. டெல் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 55 சதவீதத்தைப் பர்சனல் கம்ப்யூட்டர் பிரிவு விற்பனையில் இருந்து பெறுகிறது.

HP நிறுவனம்

HP நிறுவனம்

நவம்பர் மாதம் DELL நிறுவனத்தில் சக போட்டி நிறுவனமான HP பர்சனல் கம்ப்யூட்டருக்கான தேவை குறைந்து வருவதால், அடுத்த மூன்று ஆண்டுகளில் 6000 ஊழியர்களை நிறுவனத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.

சிஸ்கோ, ஐபிஎம்

சிஸ்கோ, ஐபிஎம்

இது மட்டுமின்றி, சிஸ்கோ சிஸ்டம்ஸ் இன்க். மற்றும் IBM கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் தலா 4,000 ஊழியர்களைக் குறைப்பதாக அறிவித்தது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமாக டெக் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஆப்ரேட்டிங் லாபம்

ஆப்ரேட்டிங் லாபம்

நவம்பர் 2022ல் டெல் வெளியிட்ட காலாண்டு முடிவில் இந்நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் லாபம் 68 சதவீதம் உயர்ந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் பர்சனல் கம்ப்யூட்டர் குறைந்தாலும், சர்வர் மற்றும் நெட்வொர்க் உபகரணங்களுக்கான டிமாண்ட் குறைந்து பெரிய அளவிலான இழப்பை குறைத்துள்ளது.

6650 ஊழியர்கள் பணிநீக்கம்

6650 ஊழியர்கள் பணிநீக்கம்

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் பர்சனல் கம்ப்யூட்டர் ஏற்றுமதிகள் கடுமையாக வீழ்ச்சியடைந்து உள்ளது. 2021 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் டெல் 37 சதவீத வர்த்தகப் பாதிப்பைச் சந்தித்துள்ளதைத் தொடர்ந்து தற்போது டெல் நிர்வாகம் 6650 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும், ஊழியர்களுக்கு விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dell layoff: PC Maker Dell to layoff 6650 employees says CO-CEO Jeff Clarke

Dell layoff: PC Maker Dell to layoff 6650 employees says CO-CEO Jeff Clarke
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X