DHFL நிதி நிறுவனத்தில் செய்த டெபாசிட் பணம் வருமா வராதா.. உயிரைவிட்ட வைப்பு நிதியாளர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் எனப்படும் டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனம், ஏற்கனவே செய்த பல மோசடிகள் செய்துள்ளதாக குற்றசாட்டுகள் இருந்து வருகிறது.

வீட்டுக் கடன் வழங்கும் இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் போலியான நிறுவனங்களை உருவாக்கி கடன் வழங்கியிருப்பதாக புலனாய்வு ஊடகமான கோப்ரா போஸ்ட் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் கூறியிருந்தது.

இந்த நிலையில் அந்த செய்தியில் இந்த நிதி நிறுவன, 31,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மோசடிகளை செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

நாங்க கெளம்புறோங்க..! பிஎஸ்என்எல்-ல் இருந்து 75,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு..!நாங்க கெளம்புறோங்க..! பிஎஸ்என்எல்-ல் இருந்து 75,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு..!

தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் DHFL

தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் DHFL

தொடர்ந்து இது பல சர்ச்சைகளில் சிக்கித் தவித்து வந்த இந்த நிறுவனம், பெருத்த கடன் பிரச்சனையும் தத்தளித்து வந்தது. இந்த நிலையில் தனது பத்திரதாரர்களுக்கும் பணம் கொடுக்க முடியாமல் தவித்து வந்தது. இந்த தொகையின் வெளிப்பாடு சுமார் 41,000 கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டது.இந்த நிலையில் வங்கிகளும் தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையாக 27,527 கோ0டி ரூபாய் நிதியை உரிமை கோரியது. இந்த நிலையில் இந்த நிறுவனம் கடந்த அக்டோபர் 10 ம் தேதி மும்பை உச்ச நீதிமன்றம் பாதுகாப்பற்ற கடனாளர்களுக்கு பணம் செலுத்துவதை தடை செய்தது.

 டெபாசிட் தாரர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை

டெபாசிட் தாரர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை

இதில் கொடுமை என்னவெனில் இந்த வங்கி அல்லாத நிதி நிறுவனத்தில் டெபாசிட் தாரர்களும் உள்ளனர். இந்த நிலையில் நவம்பர் 13 அன்று டி.ஹெச்.எஃப்.எல் பத்திரமயமாக்கல் ஒப்பந்தங்களுக்கு பதிலாக பணம் செலுத்தவும் அனுமதித்தது. எனினும் இதில் வைப்புத் தொகையாளர்களுக்கு எந்த நிவாரணமும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

ரூ.38 லட்சம் டெபாசிட்

ரூ.38 லட்சம் டெபாசிட்

இந்த நிலையில் பிலாயில் இருந்து பேசிய மிருதுல் குமார் பிஸ்வால், தனது 78 வயதான தாயார் சுபாலா தாசி பிஸ்வாஸ், டி.ஹெ.எஃப்.எல்லில் 38 லட்சம் ரூபாயை பனத்தை, 15 வைப்பு நிதி திட்டங்கள் மூலம் டெபாசிட் செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த 15 திட்டங்களில் 2 திட்டம், நவம்பர் மாதத்தில் முதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் மீதமுள்ளவை வரும் ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தங்களது வைப்பு நிதிகள் முதிர்ச்சியடைந்தாலும் சிறிது காலம் கிடைக்காது என்றும் டி.ஹெச்.எஃப்.எல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை கேட்ட மிருதுலின் தாயார் சிறிது நேரத்திலேயே இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதிர்ச்சியில் மூச்சு திணறல் ஏற்பட்டு இறப்பு

அதிர்ச்சியில் மூச்சு திணறல் ஏற்பட்டு இறப்பு

இது குறித்து மிருதுல் குமார் பேசியபோது, நான் அந்த நிதி நிறுவனத்தின் விற்பனை மேலாளரிடம் பேசி விட்டு, எனது தயாரின் வைப்பு நிதி பற்றிய தலை விதியை பற்றி சொன்னேன். நான் சொன்ன சிறிது நேரத்திலேயே எனது அம்மாவுக்கு அதிர்ச்சியால் நெஞ்சு வலி ஏற்பட்டு, மூச்சி திணறல் ஏற்பட்டது. இந்த நிலையிலேயே அவரை நாங்கள் ஒரு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றோம். ஆனால் அவர் போகும் வழியிலேயே இறந்து விட்டார். எனது தயார் தனது ஆறு குழந்தைகளுக்கு வைப்பு தொகையை பிரித்து தர விரும்பினார். அவருக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர் என்றும் அவரது மகன் மிருதுல் கூறியுள்ளார்.

வேறு எந்த பிரச்சனையும் இல்லை

வேறு எந்த பிரச்சனையும் இல்லை

மேலும் மிருதுல் எனது தாயாருக்கு டயாபெடிக் பேஷண்டாக இருந்தாலும், வருக்கு வேறு எந்த பாதிப்பும் இல்லை. அவரின் இறப்பு சான்றிதல் கிடைத்தவுடன் நான் டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்தை அணுகுவேன் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே டெபாசிட் தொகையை கொடுக்க வில்லை. இனி தாயார் இறப்புக்கு நஷ்டம் கொடுக்க வேண்டும் எனவும் மிருதுல் வட்டாரத்தில் கூறப்படுவதாக தெரிகிறது.

முறைகேடு இருக்கு

முறைகேடு இருக்கு

கடந்த நவம்பர் 1 அன்றும் டி.ஹெச்.எஃப்.எல்லிம் முறைகேடுகள் இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்தவும் அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் விமானப்படி குழுமம் இந்த நிறுவனத்தில் 55 கோடி ரூபாய் டெபாசிட் வைத்திருந்ததாகவும், இது குறித்த வழக்கும் மும்பை உயர் நீதி மன்றம் அடுத்த வாரம் விசாரிக்க உள்ளது. மேலும் சமூகத்தின் 84 கோடி ரூபாய் டெபாசிட் இந்த நிறுவனத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மொத்த டெபாசிட்

மொத்த டெபாசிட்

இந்த நிலையில் ஜூலை 6ம் தேதி நிலவரப்படி டி.ஹெச்.எஃப்.எல்லில் பொது வைப்புத் தொகையாக 6,188 கோடி ரூபாய் இருந்துள்ளது. இது 2018 மார்ச் இறுதியில் 10,166.72 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த மே 21 அன்றும் முதல் டி.ஹெ.எஃப்.எல் டெபாசிட் தொகை வாங்குவதை நிறுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே உள்ள தொகைகளையும் புதுப்பிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளது. மேலும் நிர்வாகத்தை மறுசீரமைக்க வைப்புகளை முன் கூட்டியே பெறுவதையும் இது தடை செய்தது.

தொடர்கதை

தொடர்கதை

இந்த நிலையில் மருத்துவம் அல்லது ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் வைப்பு தொகையை மீட்டெடுப்பதற்காக டி.ஹெச்.எஃப்.எல் உறுதியளித்தது. இந்த நிலையில் தனது சொந்த பணம், அதுவும் சேமிப்புக்காக டெபாசிட் பணம் திரும்ப கிடைக்காத நிலையில் ஒருவர் உயிர் இழந்திருப்பது மிக அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே பி.எம்.சி வங்கியில் தனது டெபாடிட் பணம் திரும்ப கிடைக்காததால் இருவர் உயிர் இழந்த நிலையில், இது தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. இதனை தடுக்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்கு அனைவரின் வேண்டுகோள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: dhfl
English summary

DHFL crisis: Depositer subala dasi Biswas died when DHFL not bring any relief for the FD holders

Depositer subala dasi Biswas died when DHFL not bring any relief for the FD holders, she deposited in 15 fixed deposit schemes to Rs.38 lakh.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X