திருபாய் அம்பானி தான் என் முதல் இன்ஸ்பிரேஷன்.. கௌதம் அதானி அதிரடி பேச்சு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கெளதம் அதானி தனது வணிக வளர்ச்சிக்கு எந்த ஒரு தனிப்பட்ட நபரும் காரணமில்லை. தனது வளர்ச்சியினை எந்த ஒரு அரசியல் தலைவருடனும் இணைக்க முடியாது. தனது முதல் தொழில் பயணம் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தொடங்கியதாக கூறியுள்ளார்.

இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியால், தான் மிக ஆழமாக ஈர்க்கப்பட்டதாகவும் அதானி தெரிவித்துள்ளார்.

எனது வெற்றிக்கு பிரதமர் மோடி காரணமில்லை.. அதானி ஓபன் டாக்..! எனது வெற்றிக்கு பிரதமர் மோடி காரணமில்லை.. அதானி ஓபன் டாக்..!

திருபாய் அம்பானி உத்வேகம்

திருபாய் அம்பானி உத்வேகம்

இந்தியாவில் உள்ள வளரும் இளம் தொழில் முனைவோருக்கு திருபாய் அம்பானி உத்வேகம் அளிக்கும் ஒருவர். எந்தவிதமான ஆதரவும் இல்லாமல், உலகத் தரம் வாய்ந்த ஒரு வணிக குழுவை அமைத்துள்ளார். சாதாரணமாக தொழிலை தொடங்கிய நான், திருபாய் அம்பானியால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன்.

அதானி & லாரி பேஜ்

அதானி & லாரி பேஜ்

சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், உலக நாடுகள் பலவும் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. 2022ம் ஆண்டில் பல பில்லியனர்களும் பெரும் சவால்களை எதிர்கொண்டாலும், கெளதம் அதானியின் சொத்து மதிப்பானது மிகப்பெரிய அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரர் ஆன கெளதம் அதானி, நடப்பு ஆண்டில் மிகப்பெரிய அளவு சொத்தினை சேர்த்தவர், இதே லாரி பேஜ் நடப்பு ஆண்டில் மிகப்பெரிய அளவில் சொத்தினை இழந்த பில்லியனர் ஆவார்.

முதல் தலைமுறை வணிகர்

முதல் தலைமுறை வணிகர்

இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் அதானி, தான் ஒரு முதல் தலைமுறை வணிகர் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் மறைந்த திருபாய் அம்பானியை தனது முதல் உத்வேகம் என்றும் தெரிவித்துள்ளார். தனக்கு மட்டும் அல்ல, பல மில்லியன் கணக்கான தொழில் முனைவொருக்கும் திருபாய் அம்பானி ஒரு முன்னுதாரணமாக உள்ளார். எந்த விதமான ஆதரவும் இல்லாமல், பல சவால்களை எதிர்கொண்டு, வெற்றிகண்ட ஒரு நிறுவனமாகும்.

அதானி & அம்பானி ஒற்றுமை

அதானி & அம்பானி ஒற்றுமை

அதானி மற்றும் திருபாய் அம்பானிக்கு இடையே சில ஒற்றுமை இருக்கலாம், 1980களில் அதானி முதல் முறையாக வைர வியாபாரத்தினை தொடங்கிய போது, அதானி தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்யத் தொடங்கியிருந்தார். இன்று அதே வேலையினைத் தான் அதானியும் செய்கிறார்.

 அதானி எக்ஸ்போர்ட்ஸ்

அதானி எக்ஸ்போர்ட்ஸ்

மும்பையில் தரையிறங்கிய பிறகு, அதானி விரைவில் தனது அதானி எக்ஸ்போர்ட்ஸை நிறுவினார். திருபாய் அம்பானி இறந்த காலக்கட்டத்தில், முகேஷ் அம்பானி தலைவரானார். அந்த காலகட்டத்தில் அதானி மிகச்சிறிய எக்ஸ்போர்ட் நிறுவனமாகவும் இருந்து வந்தது. நவம்பர் 18 நிலவரப்படி, அதானி குழும நிறுவனங்களின் ஒட்டுமொத்த மதிப்பு 19.31 லட்சம் கோடி ரூபாயாகும். இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மதிப்பு 1.84 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது.

 சந்தை மூலதனத்தின் அடிப்படையில்?

சந்தை மூலதனத்தின் அடிப்படையில்?

இதே அதன் சராசரி வருடாந்திர சந்தை மூலதன மதிப்பின் அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 17 லட்சம் கோடி ரூபாயாகும். இதே அதானி குழும நிறுவனங்களில் 13.72 கோடி ரூபாயாகும். இந்த நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி என்பது பற்பல துறைகளில் இருந்தாலும், எரிசக்தி துறையில் மிக கடுமையாக உள்ளது. இரு மாபெரும் வணிக குழுமங்களுமே புதுபிக்கத்தக்க ஆற்றல் எனர்ஜியினை பெரிதும் அஸ்திரமாக கவனித்து வருகின்றன. .இது எதிர்காலத்தில் இவ்விரு நிறுவனங்களுமே பெரும் போட்டியாளர்களாக மாற வழிவகுக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dhirubhai Ambani was my first inspiration:gautam adani

Dhirubhai Ambani was my first inspiration:gautam adani
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X