தோனிக்கு கிடைத்த 137 கோடி ரூபாய்.. சிஎஸ்கே-வால் ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தோனி இந்த பெயருக்கு பின்னால் ஏதோ ஒரு சக்தி இருக்கு, இவர் இந்திய கிரிக்கெட் அணியில் இல்லை என்றாலும் ஒவ்வொரு மேட்சிலும் தோனியின் பெயர் அடிப்படாமல் இருக்காது. இந்திய அணியில் ஒரு சிறந்த கேப்டனாக இருந்த தோனி, ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதன் மூலம் இதுவரை எவ்வளவு சம்பாதித்துள்ளார் தெரியுமா..?!

 

தோனியின் ஐபிஎல் வருமானத்திற்குச் சக முன்னணி ஐபிஎல் விளையாட்டு வீரர்களின் வருமானத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

பேரன் உடன் முகேஷ் அம்பானி.. வைரலாகும் போட்டோ..!பேரன் உடன் முகேஷ் அம்பானி.. வைரலாகும் போட்டோ..!

தோனி சாதனை

தோனி சாதனை

கிரிக்கெட் உலகில் இதுவரை எந்தொரு அணி கேப்டனும் செய்திடாத வகையில் உலகக் கோப்பை, உலக டி20 கோப்பை, சேம்பியன்ஸ் டிராபி என 3 முக்கியமான கோப்பைகளைப் பெற்ற ஒரே ஒருவர் நம் தோனி தான். இதேபோல் ஐபிஎல் போட்டியில் இதுவரை 3 முறை வெற்றி கோப்பையை வென்று சாதித்துள்ளார். இந்நிலையில் எம்எஸ் தோனி இதுவரை ஐபிஎல் போட்டி மூலம் எவ்வளவு சம்பாதித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் போட்டிகள்

2008ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி ஏலத்தில் தோனி 1.5 மில்லியன் டாலர் என்ற அதிகப்படியான விலைக்குத் தேர்வு செய்யப்பட்டுச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்தார். இதே தொகையைத் தான் 2008, 2009, 2010 ஆகிய 3 வருடத்திற்கும் தோனி பெற்றார். இதேபோல் ஐபிஎல் 2011 முதல் 2013 வரையிலான 3 சீரிஸ்களிலும் தலா 8.2 கோடி ரூபாய் தோனி பெற்றார். 2014ல் பிசிசிஐ முதல் தேர்வு கட்டணத்தை 12.5 கோடி ரூபாயாக உயர்த்திய நிலையில் 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் தோனி 12.5 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பெற்றார்.

ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்ஸ்
 

ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்ஸ்

சென்னை அணி மீது மோசடி குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்ட காரணத்தால் அணி 2 வருடம் விளையாடத் தடை விதிக்கப்பட்ட நிலையில், தோனி அந்த 2 வருட காலம் ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த 2016, 2017ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கும் தோனி முன்பு அறிவிக்கப்பட்ட அதே 12.5 கோடி ரூபாய் தொகையைப் பெற்றார்.

மீண்டும் சிஎஸ்கே

மீண்டும் சிஎஸ்கே

2 வருட தடை காலத்திற்குப் பின் சிஎஸ்கே அணிக்கு வந்தார் தல தோனி. இந்த முறை பிசிசிஐ முதல் தேர்வு கட்டணத்தை 15 கோடி ரூபாயாக உயர்த்திய நிலையில் தோனி 3 வருடமாக அதாவது 2018, 2019, 2020 ஆகிய 3 ஆண்டுகளுக்குச் சுமார் 45 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பெற்றார். 2020 ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற நீண்ட காலச் சந்தேகத்தில் போட்டிகள் அனைத்தும் அரபு நாடுகளில் வெற்றிகரமான நடந்து முடிந்தது.

137 கோடி ரூபாய்

137 கோடி ரூபாய்

இதன் மூலம் தல எம்எஸ் தோனி 2008 முதல் ஐபிஎல் போட்டியில் சுமார் 137 கோடி ரூபாய் அளவிலான பணத்தைச் சம்பாதித்துள்ளார். சரி எப்போதும் தோனியுடன் ஒப்பிடப்படும் விராத் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஐபிஎல் போட்டியில் எவ்வளவு சம்பாதித்துள்ளார்கள் தெரியுமா..?!

மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா

ஐபிஎல் போட்டியில் அதிக வெற்றிகளைக் குவித்துள்ள முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 2008 முதல் 2010 வரையில் வருடம் 3 கோடி ரூபாயும், 2011 முதல் 2013 வரையிலான காலத்திற்கு வருடம் 9.2 கோடி ரூபாயும், 2014 முதல் 2020 வரையில் வருடம் 15 கோடி ரூபாய் என ஐபிஎல் போட்டியில் ரோஹித் சுமார் 131 கோடி ரூபாய்ச் சம்பாதித்துள்ளார்.

கேப்டன் விராட் கோலி

கேப்டன் விராட் கோலி

இந்திய அணியில் கேப்டாக இருக்கும் விராட் கோலி 2008 முதல் 2010 வரையில் வருடத்திற்கு வெறும் 12 லட்சம் ரூபாய் மட்டுமே பெற்றார். இதன் பின்பு 2011 முதல் 2013 வரையிலான காலத்திற்கு வருடம் 8.2 கோடி ரூபாயும், 2014 முதல் 2017 வரையில் வருடம் 12.5 கோடி ரூபாயும், 2018 முதல் 2020 வரையில் ஐபிஎல் வரலாற்றில் அதிகப்படியாக 17 கோடி ரூபாய்ப் பெற்றுள்ளார்.

இதன் மூலம் விராட் கோலி ஐபிஎல் போட்டியில் இதுவரை சுமார் 126 கோடி ரூபாய் அளவிலான பணத்தைச் சம்பாதித்துள்ளார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dhoni's massive IPL income: Rohit Sharma and Virat Kohli stayed back on list

Dhoni's massive IPL income: Rohit Sharma and Virat Kohli stayed back on list
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X