இந்தோனேஷியாவின் பாமாயில் தடையால் அதீத லாபம் அடைந்தாரா அதானி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்தில் இந்தோனேசியா நாடு பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்ததால் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் பாமாயில் விலை எகிறியது.

இந்தோனேஷியாவின் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை என்ற நடவடிக்கை அதானி நிறுவனத்திற்கு மறைமுகமாக மிகப்பெரிய லாபத்தை தந்ததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தோனேசியாவின் பாமாயில் ஏற்றுமதி தடையால் அதானி - வில்மர் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் லாபம் கிடைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மே மாதத்தில் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை: ஆச்சரியம் தரும் புள்ளி விபரங்கள்!மே மாதத்தில் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை: ஆச்சரியம் தரும் புள்ளி விபரங்கள்!

ஏற்றுமதிக்கு தடை

ஏற்றுமதிக்கு தடை

உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக சமையல் எண்ணெய்க்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை அடுத்து இந்தோனேசியா நாடு உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளுக்கு சமையல் எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்தது.

அதானி-வில்மர்

அதானி-வில்மர்

இந்த நிலையில் சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மர் என்ற நிறுவனத்துடன் இணைந்து அதானி நிறுவனம் சமையல் எண்ணெய் உள்பட பல்வேறு உணவுப் பொருள்களை உற்பத்தி செய்துவருகிறது. கச்சா பாமாயில்களை வாங்கி சுத்திகரித்து, பாமாயிலாக விற்பனை செய்வதில் அதிக ஆர்வம் காட்டிய இந்நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைத்து வந்ததாகவும் கூறப்பட்டது.

பற்றாக்குறை

பற்றாக்குறை

இந்த நிலையில் உலகம் முழுவதும் சமையல் எண்ணெய்க்கு ஏற்பட்ட பற்றாக்குறை மற்றும் இந்தோனேசியா வெளிநாட்டு ஏற்றுமதிக்கு விதித்த தடை ஆகியவை காரணமாக அதானி நிறுவனத்தின் பாமாயில் மிகப்பெரிய அளவில் விற்பனை ஆனதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்காரணமாக அதானி நிறுவனத்திற்கு அவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

காலாண்டு முடிவு

காலாண்டு முடிவு

கடந்த 2020-21ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதானி - வில்மர் நிறுவனத்தின் வர்த்தகம் ரூ.37,195 கோடியாக இருந்த நிலையில் 2021-22 நிதியாண்டில் ரூ.54,386 கோடியாக உயர்ந்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

லாபம்

லாபம்

அதுபோல் கடந்த 2020-21 நிதியாண்டில் அதானி - வில்மர் நிறுவனத்தின் லாபம் ரூ.728 கோடியாக இருந்தது. ஆனால் 2021-22 நிதியாண்டில் அதன் லாபம் ரூ.800 கோடியாக உயர்ந்துள்ளது.

ஐபிஓ

ஐபிஓ

இந்த நிலையில் அதானி - வில்மர் நிறுவனத்தின் ஐபிஓ கடந்த பிப்ரவரி மாதம் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட போது ரூ.221 ஆக இருந்தது. ஆனால் இரண்டே மாதங்களில் அசுர வளர்ச்சி அடைந்து ஏப்ரல் மாத முடிவில் ரூ.874 ஆக உயர்ந்தது. இந்த ஐபிஓவில் முதலீடு செய்தவர்களுக்கு சுமார் 280 சதவிகிதம் லாபம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Did Adani Wilmer use the ban on palm oil in Indonesia?

Did Adani Wilmer use the ban on palm oil in Indonesia? | இந்தோனேஷியாவின் பாமாயில் தடையால் அதீத லாபம் அடைந்தாரா அதானி?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X