திருபாய் அம்பானியின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாபெரும் சாம்ராஜ்யத்தின் வெற்றிக்கதை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய தொழில் அதிபர்கள் பட்டியல் எடுத்தால் முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது திருபாய் அம்பானி அவர்கள் தான்.

திருபாய் அம்பானி அவர்கள் ஒரு சாதாரண மனிதராக தனது வாழ்க்கையைத் தொடங்கி இந்தியாவின் முன்னணி பணக்காரராக உயர்ந்தவர்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய திருபாய் அம்பானியின் வெற்றி கதையை தற்போது பார்ப்போம்.

திருபாய் அம்பானி

திருபாய் அம்பானி

ஏழையாக பிறப்பது தவறு இல்லை, ஆனால் ஏழையாக இறப்பது தான் தவறு என்ற பில்கேட்ஸ் பொன்மொழியை தனது வாழ்க்கையில் நிஜமாக்கி காட்டியவர் திருபாய் அம்பானி. குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் கடந்த 1932ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருபாய் அம்பானி பிறந்தார். அவரது முழுப்பெயர் தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி. அவரது தந்தை ஒரு ஆசிரியர்.

முதல் சம்பளம்

முதல் சம்பளம்

திருபாய் அம்பானியின் இளமைக்காலம் சிறப்பாக இல்லை. பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த அவர் அதன்பிறகு வேலை செய்ய தொடங்கினார். திருபாய் அம்பானி தனது 16வது வயதில் தனது சகோதரருடன் பணம் சம்பாதிப்பதற்காக ஏமன் நாட்டிற்குச் சென்றார்.

 முதல் சம்பளம்

முதல் சம்பளம்

1949 ஆம் ஆண்டு அங்கே பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தார். அங்குதான் அவரது முதல் சம்பளம் 300 ரூபாய் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய பணியால் மகிழ்ச்சி அடைந்த பெட்ரோல் நிலையத்தின் மேலாளர் அவருக்கு பதவி உயர்வு கொடுத்தார். இருப்பினும் திருபாய் அம்பானி 1954ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்.

 மும்பை வருகை

மும்பை வருகை

குஜராத்தில் உள்ள கிராமத்தில் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று முடிவு செய்த திருபாய் அம்பானி மும்பைக்கு தனது குடும்பத்துடன் புறப்பட்டார். மும்பைக்கு அவர் தனது குடும்பத்தினருடன் செல்லும் போது அவரது பாக்கெட்டில் இருந்தது வெறும் 500 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் வணிகம்

மும்பையில் வணிகம்

மும்பைக்கு போனதும் அவர் தனது வணிக அறிவின் மூலம் பல தொழில்களை செய்தார். அப்போது இந்தியாவுக்கு அதிக பாலியெஸ்ட்ர் தேவை இருந்தது என்பதை புரிந்து கொண்டார். அது தான் அவரை பணக்காரர் ஆக்கியது.

 பார்ட்னர்

பார்ட்னர்

திருபாய் அம்பானி முதலில் தனது பார்ட்னருடன் இணைந்து ரிலையன்ஸ் கமர்சியல் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை நிறுவினார். அவர் தனது முதல் அலுவலகத்தை வெறும் 330 சதுர அடியில் மும்பையில் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் கமர்சியல் கார்ப்பரேஷன்

ரிலையன்ஸ் கமர்சியல் கார்ப்பரேஷன்

தனது உறவினருடன் பார்ட்னர்ஷிப்பில் தொழிலை ஆரம்பித்தாலும் பார்ட்னருடன் உறவு சரிவரவில்லை. இதனையடுத்து அவர் தனியாக 1996ஆம் ஆண்டு ரிலையன்ஸ் கமர்சியல் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் தான் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற மாபெரும் தொழில் நிறுவனமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் - குழந்தைகள்

திருமணம் - குழந்தைகள்

இந்தநிலையில் கோகிலா என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு முகேஷ் அம்பானி, அனில் அம்பானி நீனா, தீப்தி ஆகிய நான்கு குழந்தைகள் பிறந்தனர். இதில் முகேஷ் அம்பானி தான் தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் கோடீஸ்வரர்

இந்தியாவின் கோடீஸ்வரர்

திருபாய் அம்பானி கடந்த 2000ம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக மாறினார். பொழுதுபோக்குகளில் அவர் கவனம் செலுத்தவில்லை. முழுக்க முழுக்க வணிகத்துக்கு மட்டுமே அவரது கவனம் இருந்ததால் அவர் மிகப்பெரிய தொழிலதிபராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி தனது தந்தையின் சொத்துக்களை பாதுகாப்பது மட்டுமன்றி அந்த சொத்துக்களை பல மடங்காக பெருக்கி இந்தியா மட்டுமின்றி ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராகவும், உலகின் முதல் பத்து கோடீஸ்வரர்களில் ஒருவராகவும் முகேஷ் அம்பானி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மறைவு

மறைவு

திருபாய் அம்பானி கடந்த 2002ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானர். சுயமாக உழைத்து முன்னேறி பல வெற்றிகளைக் கண்ட ஒரு மாபெரும் சக்தியை இந்தியா இழந்துவிட்டது என்று அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அம்பானியின் மறைவு குறித்து குறிப்பிட்டிருந்தார்.

இளைஞர்களுக்கு பாடம்

இளைஞர்களுக்கு பாடம்


தொழில் செய்ய விரும்பும் ஒவ்வொரு இளைஞருக்கும் திருபாய் அம்பானியின் வாழ்க்கை வரலாறு ஒரு பாடமாக உள்ளது என்பதும், அவரது உழைப்பு, திறமை, விடாமுயற்சி ஆகியவற்றை பின்பற்றினால் ஒவ்வொரு இளைஞரும் அம்பானி ஆக முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Did you know how much Dhirubhai Ambani's first salary? some interesting facts here!

Did you know how much Dhirubhai Ambani's first salary? some interesting facts here! | திருபாய் அம்பானியின் முதல் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாபெரும் சாம்ராஜ்யத்தின் வெற்றிக்கதை
Story first published: Friday, July 8, 2022, 8:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X