டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னும் இரண்டு மாதங்களில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்கான முன் ஏற்பாடுகளை இந்திய தேர்தல் கமிஷன் செய்து வருகின்றது.

 

அந்த வகையில் தற்போது டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் காரணமாக பல பணிகளும் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், வணிக ரீதியிலாகவும், பாதுகாப்பு கருதியும் பல இடங்களில், டிஜிட்டல் ஆவண முறைகளே பயன்படுத்தப்படுகிறது.

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை அறிமுகம்

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை அறிமுகம்

குறிப்பாக சுங்கசாவடிகளில் பாஸ்டேக் முறை, விமான நிலையம் என உள்ளிட்ட பல இடங்களிலும் டிஜிட்டல் சேவைகளை இருந்து வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் கமிஷன் மின்னணு முறையிலான வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகம் செய்யவுள்ளது. இன்று தேசிய வாக்காளர் தினம் என்ற நிலையில், இன்று இந்த மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்கிறது.

பிடிஎஃப் பார்மெட்டில் கிடைக்கும்

பிடிஎஃப் பார்மெட்டில் கிடைக்கும்

இந்த மின்னணு வாக்காளர் அடையாள் அட்டையை பிடிஎஃப் பார்மேட்டில் பெற்றுக் கொள்ள முடியும். ஆக இதனை எடிட் செய்ய முடியாது. இந்த புதிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை புதிதாக பதிவு செய்யும் வாக்காளர்கள் மட்டுமே பெற முடியும். முதல் கட்டமாக இந்த மின்னணு சேவையினை பெற ஜனவரி 25 முதல் ஜனவரி 31 வரையிலான காலகட்டத்தில், உங்களது மொபைல் எண்ணினை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யலாம்.

பழைய வாக்காளர் அட்டை வைத்திருப்போருக்கு
 

பழைய வாக்காளர் அட்டை வைத்திருப்போருக்கு

அதோடு தங்களது செல்போன் நம்பரை பதிவிட்ட பழைய வாக்காளர்கள், பிப்ரவரி 1ம் தேதி முதல் கொண்டு மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பெற முடியும். இந்த மின்னணு அட்டையில் வாக்காளரின் பெயர், வரிசை எண், பாகம் எண், புகைப்படம் இடம் பெற்றிருக்கும். அதோடு கியூ ஆர் கோடு பயன்பாட்டை கொண்டதாக இந்த அடையாள அட்டை இருக்கும். ஆக உங்களது பதிவு மொபைல் நம்பரை கொண்டு, உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Array

Array

இதே மொபைல் நம்பரை பதிவு செய்யாத வாக்காளர்கள், இதனை பதிவு செய்த பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதியதாக மின்னணு வடிவில் வாக்காளர் அட்டை டிஜிட்டல் முறையில் பெறும் வாக்காளர், அதனை அட்டையாகவும் பெற முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை பெறுவதில் தாமதம் இருக்காது.

எப்படி பதிவிறக்கம் செய்வது?

எப்படி பதிவிறக்கம் செய்வது?

இந்த மின்னணு அட்டையை நீங்கள் https://voterportal.eci.gov.in/ என்ற தளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த இணையத்தில் லாகின் செய்த பின்பு, E- EPIC என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். இந்த பதிவிறக்கம் காலை 11.14 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Digital voter ID cards from today: top things to know

Digital voter ID cards updates.. Digital voter ID cards from today: top things to know
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X