விழாக்கால பருவத்தில் ஆஃபர்களை அள்ளி கொடுக்கும் வங்கிகள்.. இது செம சான்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விழாக்கால பருவம் தொடங்கி விட்டது. தேவையும் அதிகரிக்க தொடங்கி விட்டது. வீட்டுக்கு தேவையான வாகனம் முதல் மின் சாதனங்கள், தங்கம் வரையில் மக்கள் வாங்க தொடங்கி விட்டனர்.

இதற்கிடையில் தேவையினை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக ,பல வங்கிகள் விழாக்கால சலுகைகளை வாரி வழங்கியுள்ளன.

எந்தெந்த வங்கிகள் என்னென்ன சலுகைகளை அறிவித்துள்ளன? வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள இந்த திட்டங்களை எத்தனை நாட்கள் வரையில் பெற்றுக் கொள்ளலாம், வாருங்கள் பார்க்கலாம்.

 ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க EPFO அமைப்பு ஆதரவு.. ஏன் தெரியுமா..? ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க EPFO அமைப்பு ஆதரவு.. ஏன் தெரியுமா..?

என்னென்ன வங்கிகள்?

என்னென்ன வங்கிகள்?

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச் டி எஃப் சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் இந்தஸ் இந்த் வங்கி உள்ளிட்ட வங்கிகள் இந்த விழாக்கால பருவத்தில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.

இதன் மூலம் வீட்டுக் கடன் முதல் வாகன கடன் வரையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் குறைவான வட்டியில் கடனை பெற்று பயன் பெறலாம்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

எஸ்பிஐ (SBI) வங்கியில் வீட்டுக் கடன் வாடிக்கையாளார்களுக்கு 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளார்கள் 8.4%ல் இருந்து வட்டி விகிதத்தில் கடனை பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகையானது ஜனவரி 31, 2023 வரையில் பெறலாம். இந்த சலுகையானது டாப் அப் லோன்களுக்கும் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் 8.8%ல் இருந்து கடன் பெற்றுக் கொள்ளலாம். இதில் செயல்பாட்டுக் கட்டணம் என்பது இல்லை.

ஹெச் டி எஃப் சி வங்கி

ஹெச் டி எஃப் சி வங்கி

ஹெச் டி எஃப் சி வங்கியில் கார் கடன்களுக்கு வட்டி விகிதம் 7.9%ல் இருந்து ஆரம்பமாகிறது. இந்த கடனில் 24 மாதங்கள் முடிவடைந்தால் எந்த வித முன் கட்டணமும் இல்லாமல் முன் கூட்டியேவும் முடித்துக் கொள்ளலாம். தங்கத்தின் மீதான செயல்பாட்டு கட்டணம் 50% குறைக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் பெறப்படும் கடன்களுக்கு கட்டணமாக பிளாட்டாக 999 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தற்போது வீட்டுக் கடன் ப்ரீ அப்ரூவ்டு மற்றும் வேறு வங்கிகளில் இருந்து மாற்றிக் கொள்ளலாம். இதற்கான செயல்பாட்டுக் கட்டணம் 999 ரூபாயாகும். உங்களுடைய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், உடனடியாக உங்களது கடனுக்கு ஒப்புதல் கொடுக்கப்படலாம். புதிய கார் கடன்களுக்கான செயல்பாட்டுக் கட்டணம் 1999 ரூபாய் ஆகும். அதேபோல காரின் ஆன் தி ரோடு விலையில், முழுத் தொகையையும் கடனாக பெறலாம். இதற்கு முன் கூட்டியே முடித்துக் கொள்ளவும் எந்த கட்டணமும் இல்லை. தனி நபர் கடன் எனில் 12 மாத தவணைக்கு பிறகு எந்த வித கட்டணமும் விதிக்கப்படுவதில்லை. 12 மாத தவணைகளுக்கு பிறகு 3% கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

பேங்க் ஆப் பரோடா

பேங்க் ஆப் பரோடா

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடாவில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 8.45%ல் இருந்து ஆரம்பமாகிறது. கார் கடன்களும் 8.45% வட்டியில் இருந்து ஆரம்பமாகிறது. இதற்கு முன் கூட்டியே முடித்துக் கொள்ள கட்டணம் எதுவும் இல்லை எனலாம்.

இந்தஸ் இந்த் வங்கி

இந்தஸ் இந்த் வங்கி

இந்தஸ்இந்த் வங்கியில் கார் கடனுக்கான காலம் 7 வருடங்கள் வரையில் வழங்கப்படுகிறது. இது காரின் மதிப்பில் 100% வரையில் பெறலாம். தனி நபர் கடன்களுக்கு 72 மாதங்கள் வரையிலான கால அவகாசத்தில் 50 லட்சம் ரூபாய் வரையில் கடனாக பெற்றுக் கொள்ளலாம். வீட்டுக் கடன் களுக்கு 30 வருடங்கள் வரையில் திரும்ப செலுத்திக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Diwali 2022: Banks announced many offers for loans during this festive season

Banks including SBI, HDFC Bank, ICICI Bank, Bank of Baroda and IndusInd Bank have announced various offers this festive season.
Story first published: Friday, October 21, 2022, 15:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X