என்ன சொல்கிறார் நிர்மலா சீதாராமன்.. முக்கிய அறிவிப்புகள் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த கடுமையான நெருக்கடி நிலையிலும் கூட, அரசு பொருளாதாரத்தினை ஊக்குவிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து வரும் நிதியமைச்சர், 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது கடந்த ஜூன் காலாண்டிலேயே 40 ஆண்டுகளில் இல்லாத அளவு, பொருளாதாரம் வீழ்ச்சி கண்ட நிலையில் இரண்டாவது காலாண்டிலும் வீழ்ச்சி காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த சந்திப்பில் முக்கிய அறிவிப்புகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா காலத்திலும் வலுவான வளர்ச்சி

கொரோனா காலத்திலும் வலுவான வளர்ச்சி

10 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கூட, பொருளாதார வளர்ச்சி குறித்தான குறியீடுகள் சாதகமாக வந்துள்ளன. தொழில்துறை குறித்தான பிஎம்ஐ குறியீடு அக்டோபர் மாதத்தில் 58.9 ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 54.6 ஆக இருந்தது. 9 வருடங்களில் இல்லாத அளவுக்கு வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது.

வளர்ச்சி அதிகரிக்கலாம்

வளர்ச்சி அதிகரிக்கலாம்

மின்சார நுகர்வு கடந்த ஆண்டினை விட அக்டோபர் மாதத்தில் 12% அதிகரித்துள்ளது. அதே போல ஜிஎஸ்டி வசூல் அக்டோபர் மாதத்தில் 1.05 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதே வங்கிக் கடன் வளர்ச்சி விகிதம் 23 அக்டோபர் 2020 நிலவரப்படி 5.1% அதிகரித்துள்ளதாகவும் அறிக்கைகள் தரவுகள் கூறுகின்றன. இந்திய பங்கு சந்தைகள் வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளன. அன்னிய முதலீடுகள் வரத்தும் அதிகரித்துள்ளது. நிறுவனங்களின் சந்தை மதிப்பும் அதிகரித்துள்ளன. அந்நிய செலாவணி கையிருப்பும் அதிகரித்துள்ளது.
ஆர்பிஐ மதிப்பீட்டின் படி, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி சாதகமான நிலைக்கு திரும்பலாம்.

ஒரே நாடு ஒரு ரேஷன் திட்டம்

ஒரே நாடு ஒரு ரேஷன் திட்டம்

ஒரே நாடு ஒரு ரேஷன் திட்டம் பற்றி பேசியவர், இத்திட்டம் பெரியளவில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 28 மாநிலங்களில் இந்த ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 68.6 கோடி மக்கள் பயனடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆத்ம நிர்பார் நிதி

ஆத்ம நிர்பார் நிதி

ஆத்ம நிர்பார் நிதி திட்டம் பேசுகையில், 26.62 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் 30 மாநிலங்களில் 13.78 லட்சம் பேருக்கு 1,373.33 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இடம்பெயர் தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக பல அமைச்சர்கள் மா நில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கிசான் கார்டு திட்டம்

கிசான் கார்டு திட்டம்

கிசான் கிரெடிட் கார்டு என்பது இந்திய அரசின் ஒரு திட்டமாகும். இதன் கீழ் நாட்டின் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் அரசாங்கம் கடன்களை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு விவசாயி மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் 2.5 கோடி விவசாயிகளுக்கு, 1.5 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது/. இதே பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டம் 21 மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 1,700 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசின் பிணையில்லா அவசர கடன்

அரசின் பிணையில்லா அவசர கடன்

அரசின் Emergency Credit Liquidity Guarantee கடன் திட்டத்தின் கீழ் மொத்தம் 2.05 லட்சம் கோடி கடன், 61 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 17 மாநிலங்கள்/UT 1.18 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மூலதன செலவினங்களுக்கு வட்டி இல்லா கடன்

மூலதன செலவினங்களுக்கு வட்டி இல்லா கடன்

11 மாநிலங்களுக்கு மூலதன செலவினங்களுக்கு, வட்டி இல்லாத கடன்களின் கீழ் ரூ.3,621 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதே போல் வருமான வரி ரீபண்ட் தொகையானது பெரும் அளவில் சென்றுள்ளது. இது 1.32 லட்சம் கோடி அளவில் ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Aatmanirbhar Bharat Rozgar Yojana திட்டம்

Aatmanirbhar Bharat Rozgar Yojana திட்டம்

Aatmanirbhar Bharat Rozgar Yojana திட்டம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும். மேலும் ஈபிஎப்ஓவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் புதிய ஊழியர்கள் அல்லது வேலையினை இழந்தவர்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது. அதோடு இந்த திட்டத்தின் மூலம், அக்டோபர் 1 முதல் ஜூன் 30, 2021ம் ஆண்டு ஆட்சேர்ப்பு செய்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அந்த நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கப்படும். Aatmanirbhar Bharat Rozgar Yojana திட்டத்தின் கீழ் மார்ச் 1 முதல் செப்டம்பர் 31 வரையில், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிய நிறுவனங்களுக்கு (ஈபிஎப்ஓ கணக்கு அடிப்படையில்) 8300 கோடி ரூபாய் அளவிலான தொகையை 1,52,899 நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Diwali gift: Nirmala Sitharaman Press Conference highlights today.

Finance minister Nirmala Sitharaman Press Conference highlights today.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X