டிஎல்எஃப் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. கொண்டாட்டத்தில் கடை உரிமையாளர்கள்.. என்ன காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் மிகப்பெரிய மால்களில் ஒன்றான டிஎல்எஃப் கொரோனாவின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு வாடகையில் சில சலுகைகளை வழங்கியுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து வெளியான பிசினஸ் டுடே செய்தியில், கொரோனா வைரஸ் காரணமாக நெருக்கடியில் உள்ள கூட்டாளர்களை ஆதரிக்க ஒரு வாடகை திட்டத்தினை அமல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது கடைகள் மற்றும் மல்டிபிளேக்ஸ், உணவகங்கள் போன்ற வர்த்தக பங்காளிகளுக்கு குறைந்தபட்சம் உத்தரவாதம் உள்ள வாடகைதாரர்களுக்கு, 100 சதவீதம் வரை தள்ளுபடி செய்யும் திட்டத்தினை தள்ளுபடி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

வணிகர்களுக்கு ஆதரவு

வணிகர்களுக்கு ஆதரவு

மேலும் நீங்கள் எதிர்கொள்ளும் நிலைமைக்கு நாங்கள் அனுதாபப்படுகிறோம். எங்கள் வெளிப்புற பங்கு தாரர்களூக்கு நிதிக் கடமைகள் எஞ்சியிருக்கும் அதே நேரத்தில், நாங்கள் வருவாயை நிறுத்துவதையும் நாங்கள் எதிர் கொண்டுள்ளோம். உங்கள் வணிகத்தினை மறு தொடக்கம் செய்யவும், வணிக கூட்டாளர்களை ஆதரிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக டிஎல் எஃப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எவ்வளவு தள்ளுபடி

எவ்வளவு தள்ளுபடி

இந்த நிலையில் தான் ஜுன் 16 முதல் ஜுன் 30 வரையில் 75 சதவீத தள்ளுபடி முன்மொழியப்பட்டுள்ளது. இதே போல் 50 சதவீதம், 25 சதவீதம், 10 சதவீதம் என தள்ளுபடிகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது, நான்காவது காலாண்டில் தள்ளுபடி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதெல்லாம் சரி அதென்ன எம்ஜி குத்தகை வாடகை.

அதென்ன எம்ஜி குத்தகை வாடகை

அதென்ன எம்ஜி குத்தகை வாடகை

இந்த எம்ஜி குத்தகை வாடகை என்பது வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பரிவர்த்தனைகளில் ஒரு வாடகையாகும். அங்கு குத்தகை தாரர் குத்தகையின் தொடக்கத்தில் அடிப்படை வாடகையை செலுத்துகிறார். ஆனால் சொத்து வரி, பயன்பாடுகள், காப்பீடுகள் மற்றும் பராமரிப்பு போன்ற சொத்துக்களுடன் தொடர்புடைய வேறு சில செலவுகளின் விகிதார பங்கை இது பெறுகிறது.

வாருங்கள் தொடங்குங்கள்

வாருங்கள் தொடங்குங்கள்

டிஎல்எஃப் ப்ரோமனெடிலின் வசந்த் குஞ்ச் நீங்கள் இணைந்து பணியாற்றுவதை நாங்கள் எதிர் நோக்குகிறோம். மேலும் எங்கள் வாடிக்கையாளர்களை பாதுகாப்பான மற்றும் அற்புதமான ஷாப்பிங் சூழலுக்கு வரவேற்கிறோம். இந்த ஆதரவு திட்டத்திற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விரைவில் பகிர்கிறோம். இதற்கிடையில் உங்கள் வணிக நடவடிக்கைகளை எங்கள் மால்களில் தொடங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

DLF to waive up to 100 percent of base rent amid coronavirus pandemic

DLF to waive up to 100 percent of base rent amid coronavirus crisis
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X