திமுக தேர்தல் வாக்குறுதி: பெட்ரோல், டீசல், பால், சிலிண்டர் விலை குறைப்பு.. சாமானிய மக்களுக்கு நன்மை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் முன்னணி கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் மிக முக்கிய அரசியல் விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகம், இந்த முறை காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் கட்சிகள் உடன் கூட்டணி இணைந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை திராவிட முன்னேற்றக் கழகம் தனது வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட நிலையில், அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிட்டு உள்ளார்.

பால் விலை குறைப்பு

பால் விலை குறைப்பு

இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டிசல் விலை அதிகரித்து வரும் காரணத்தால் சாமானியர்கள் தினசரி வாழ்க்கையில் அதிகளவில் பயன்படுத்தும் பால் விலை அதிகரிக்கும் நிலை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ3 குறைக்கப்படும் என அறிவித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல்

பெட்ரோல் மற்றும் டீசல்

மத்திய அரசு அதிகப்படியான வரி வருமான பெற வேண்டும் என்பதற்காகப் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அதிகரித்துத் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்து வந்தது. 5 மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் காரணமாகக் கடந்த 14 நாட்களாகப் பெட்ரோல் விலையை உயர்த்தாமல் மத்திய அரசு உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
 

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

இதேவேளையில் பல மாநிலங்கள் மக்களின் நலன் கருதி பெட்ரோல் மற்றும் டீசல் மீது மாநில அரசு விதிக்கும் மதிப்புக் கூட்டு வரியைக் குறைத்த நிலையில் தமிழ்நாட்டில் எவ்விதமான குறைப்பையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் திமுக தனது தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்துள்ளது.

எரிவாயு சிலிண்டருக்கு மானியம்

எரிவாயு சிலிண்டருக்கு மானியம்

இதேபோல் கடந்த சில மாதங்களில் மட்டும் எரிவாயு சிலிண்டர் விலை 200 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில் திமுக தனது தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் எரிவாயு சிலிண்டருக்கு ரூ100 மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

DMK election manifesto: Petrol, diesel, milk, cooking gas price will be reduce

DMK election manifesto: Petrol, diesel, milk, cooking gas price will be reduce
Story first published: Saturday, March 13, 2021, 13:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X