மக்களையில் தனியார்மயம் குறித்து டிஆர் பாலுவின் கேள்விக்கணைகள்.. அரசின் பதில் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழக பன்னாட்டு விமான நிலையங்கள் தனியார்மயமாகிறதா? என மக்களையில் திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி ஆர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய விமான போகுவரத்து துறை இணை அமைச்சர் விகே சிங் மக்களவையில், இந்தியாவில் 2022ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டிற்குள் 25 விமான நிலையங்களை அரசு தனியார்மயமாக்க திட்டமிடப்படுள்ளதாக கூறியுள்ளார்.

இது சொத்தினை பணமக்குதலுக்கான மத்திய அரசின் திட்டங்களின் ஒரு பகுதியாக, இந்த விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 வருடத்தில் 25 விமான நிலையம் தனியார்மயம்.. திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, சென்னை..!

 விமான நிலையங்கள்

விமான நிலையங்கள்

நாக்பூர், வாராணாசி, டேராடூன், திருச்சி, இந்தூர், சென்னை, கோழிக்கோடு, கோயமுத்தூர், புவனேஷ்வர் மற்றும் பாட்னா உள்ளிட்ட இடங்களில் 25 விமான நிலையங்களை அரசு தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளது.

இந்த தனியார்மயமாக்கல் திட்டத்தில் மதுரை விமான நிலையம், திருப்பதி, ராஞ்சி, ஜோத்பூர், ராய்ப்பூர், ராஜமுந்திரி, வதோதரா, அமிர்தசரஸ், சூரத், ஹூப்ளி, இம்பால், அகர்தலா, உதய்ப்பூர், போபால் மற்றும் விஜயவாடா உள்ளிட்ட விமான நிலையங்களும் இதில் அடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 13 சர்வதேச விமான நிறுவனங்கள்

13 சர்வதேச விமான நிறுவனங்கள்

இது குறித்து மக்களவைத் தலைவர் டி ஆர் பாலு, மத்திய அரசு இந்திய விமான நிலையங்கள் ஆணையமும் நாட்டில் உள்ள விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைத்திட திட்டமிட்டுள்ளதா? இதில் தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களையும் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த விகே சிங், திருச்சி பன்னாட்டு விமான நிலையம் உள்பட 13 விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை எடுத்துள்ளது.

 உரிமக் காலம்
 

உரிமக் காலம்

இந்த நடவடிக்கையானது விமான நிலையங்களை மேம்படுத்த பொது நலம் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். விமான நிலையங்களின் நிலம் உள்ளிட்ட சொத்துகள் அனைத்தும் ஆணையத்தின் சொத்துக்களாகவே தொடங்கும். உரிமக் காலம் முடிவடைந்தவுடன் சொத்துக்கள் அனைத்தும் மீண்டும் இந்திய விமான நிலையங்களுக்கு திரும்ப வரும்.

 தமிழக விமான நிலையம்

தமிழக விமான நிலையம்

தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த விமான நிலையங்கள், தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை, கோயமுத்தூர், சென்னை விமான நிலையங்களும் அடங்கும் என சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் பதிலளித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

DMK MP TR Balu's questions union govt on airport privatization? What is the answer of the government?

Government plans to privatize 25 airports, how many airports in tamil nadu?/ 25 விமான நிலையங்கள் தனியார்மயமாக்க அரசு திட்டம்.. தமிழகத்தில் எத்தனை.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X