ஏசியன் பெயிண்ட்ஸ் உருவானது எப்படி தெரியுமா.. ஊருக்கு நாலு பேர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உருக்கு நாலு பேர் நாலு விதமாக பேசுவாங்க, ஆனா இந்த நாலு பேர் வேற ரகம்.. ஏனெனில் பலரும் அந்த சமயத்தில் சுதந்திரத்தை பற்றிய அத்தியாயத்தை பேசிக் கொண்டிருந்தபோது, இந்த 4 நண்பர்களும் வணிகம் பற்றி யோசித்துக் கொண்டிருந்தனர்.

 

இந்த 4 பேருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம், சுதந்திரத்திற்கும் இவர்களுக்கு மென்ன சம்பந்தம்? அப்படி என்ன வணிகம் வாருங்கள் பார்க்கலாம்.

எல்லாரும் சூனா பானா ஆக முடியுமா? பேஸ்புக் படுதோல்வி.. அக்டோபர் 1 முதல் புல்ஸ்டாப்..!

சுதந்திரம் + வணிகம்

சுதந்திரம் + வணிகம்

கடந்த 1942ல் ஆயிரக்கணக்கானோர் சுதந்திரம் பற்றிய சிந்தனையில், வலுவானதொரு சரித்திரத்தினை படைக்கும்பொருட்டு சிந்தனையில் இருந்தபோது, மும்பையில் உள்ள 4 நண்பர்கள் சுதந்திரத்தோடு, வணிகம் பற்றியும் சிந்தித்தினர்.

எப்படி தொடக்கம்?

எப்படி தொடக்கம்?

இது ஆங்கிலேயர்கள் தற்காலிகமாக பெயிண்டினை தடை செய்தபோது, இந்த யோசனையை கொண்டிருந்தனர். அந்த காலகட்டத்தில் இந்தியாவின் ஷாலிமர் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட வெளி நாட்டு நிறுவனங்கள் தான் முன்னணியில் இருந்து வந்தன. இந்த காலகட்டத்தில் பிறந்ததே ஏசியன் ஆயில் & பெயிண்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட். இதில் சம்பக்லால் சோக்சி, சிமன்லால் சோக்சி, சூர்யகாந்த் டானி மற்றும் அரவிந்த் வக்கீல் இந்த 4 வரும் தான் இதன் உதயத்திற்கு காரணமானவர்கள்.

ஆசியாவின் மூன்றாவது பெரிய நிறுவனம்
 

ஆசியாவின் மூன்றாவது பெரிய நிறுவனம்

80 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், இன்று பெயிண்ட் நிறுவனம் இந்திய சந்தையில் சுமார் 53% பங்கினை கொண்டுள்ளது. இது ஆசியாவின் மூன்றாவது பெயிண்ட் நிறுவனமாகவும் உள்ளது. இது ஏசியன் பெயிண்ட்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றது. உலகம் முழுக்க 16 நாடுகளில் செயல்பட்டு வருகின்றது.

யாருக்கு என்ன தேவை?

யாருக்கு என்ன தேவை?

இந்த நிறுவனம் நடுத்தர மக்கள், மேல்தட்டு மக்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், என் ஜி ஓ-க்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றவாறு பொருட்களை வைத்துள்ளது. ஆக யாருக்கு எது தேவையோ அதற்கேற்ப அதன் இணையதளத்தில் சென்று வாங்கிக் கொள்ளலாம். இது மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறும் உள்ளது.

பழமை எப்படி புதுமையுடன் போட்டி

பழமை எப்படி புதுமையுடன் போட்டி

1947க்கு முந்தையதாக தோன்றிய ஒரு நிறுவனம் எப்படி இன்றைய காலக்கட்டத்திலும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. தொழிலில் உள்ள ஆர்வமும், விடாமுயற்சிக்கும் மத்தியில், புதுமையுமே காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் ஆரம்பித்த 3 ஆண்டுகளில் 1945ல் ஏசியன் பெயிண்ட்ஸ் பெருமளவில் பிரபலமடைந்ததற்கு ஒரு முக்கிய காரணமும் உண்டு.

பாகெட்கள் அறிமுகம்

பாகெட்கள் அறிமுகம்

அது பெரிய பெரிய டின்களுக்கு எதிராக சிறிய சிறிய பாக்கெட்டுகளை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இது சப்ளையை எளிதாக்கியது. இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் செல்ல உதவியது. சிறிய சிறிய விற்பனையாளர்களிடம் சென்று சேர முக்கிய காரணமாக அமைந்தது. அதொடு பலரும் நகரத்தில் கவனம் செலுத்தியபோது, இவர்கள் கிராமங்களையும் குறி வைத்து காய் நகர்த்தினர். இது மிகப்பெரிய வெற்றிக்கும் வழிவகுத்தது.

குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சி

குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சி

கறுப்பு, வெள்ளை, சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் உள்ளிட்ட 5 வண்ணங்களில், ஆரம்பத்தில் ஒரு ஆண்டில் இந்த நிறுவனம் 3.5 லட்சம் ரூபாய் வருமான ஈட்டியுள்ளது.

அவர்களின் புதுமையான யோசனை அவர்களுக்கு கைகொடுத்தது. 1952ல் அதன் வருடாந்திர வருவாய் சுமார் 23 கோடி ரூபாயினை அப்போதே எட்டியது. இது அன்றைய காலகட்டத்தில் பல ஆயிரம் கோடிக்களுக்கு சமமான ஒன்று என்பது மறுப்பதற்கில்லை.

முதல் ஆலை

முதல் ஆலை

கட்டு ஒரு மலிவு விலை டிராக்டர் டிஸ்டெம்பராகவும் மறியது. இது நடுத்தர மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது, இதுவே அடுத்த 4 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது. இந்த காலக்கட்டத்தில் மட்டும் நிறுவனம் 10 மடங்கு வ்ளர்ச்சி கண்டது. இதன் எதிரொலி பாண்டுப்பில் முதல் ஆலை அமைக்க வழிவகுத்தது.

பிஜியில் தொடக்கம்

பிஜியில் தொடக்கம்

1957 - 1966களுக்கு இடையில் பாக்கெட்டுகளில் விற்பனை செய்ததே மிகப்பெரிய வெற்றியாக மாறியது. இது சர்வதேச நிறுவனங்கள் பெரிய அளவில் இந்தியாவினை வந்தடையும் முன்பே இந்த நிறுவனங்கள் வளர்ச்சி கண்டன. அதன் பின்னர் பிஜியிலும் தங்கள் முதல் முயற்சியினை தொடங்கினர். அதன் பிறகு நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையினை நோக்கி அடி எடுத்து வைக்க ஆரம்பித்தது.

வெற்றிக்கான சாவி

வெற்றிக்கான சாவி

தொடர்ந்து தரத்தினை ஊன்றுகோலாக வைத்திருந்த இந்த நிறுவனம் அதன் சந்தை போக்குக்கு ஏற்ப மாற்றிக் கொண்டே வந்தது. இதனால் மாபெரும் வளர்ச்சியினையும் காண ஆரம்பித்தது. கடந்த 1984ல் அதன் முதல் தொலைகாட்டி விளம்பரமாக இருந்தாலும், 90களின் முற்பகுதியில் பிரீமியம் தயாரிப்பாகவும் இருந்தது. இதன் மார்கெட்டிங் விதமும் ஆரம்பத்தில் இருந்தே மக்களை கவரும் விதமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளத்திலும் பிசி

சமூக வலைதளத்திலும் பிசி

1998 - 99ம் ஆண்டில் கால் செண்டர் செயல்பாடுகள் மற்றும் இனையதளத்தினை நிறுவியிருந்தாலும், ஏசியன் பெயிண்ட்ஸ் எப்போதும் எதிர்கால செயல்பாடுகளை கருத்தில் கொண்டே செயல்பட்டு வந்தது. சமூக வலைதளத்திலும் பின் வாங்கவில்லை, பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் மில்லியன் கணக்கான பயனர்களையும் கொண்டுள்ளது.

காலத்திற்கு ஏற்ப வணிகம்

காலத்திற்கு ஏற்ப வணிகம்

இது Asian Paints, Asian Paints Berger, SCIB Paints, Apco Coatings, Taubmans, Causeway Paints மற்றும் Kadisco ஆகிய முக்கிய எட்டு பிராண்டுகளை கொண்டுள்ளது. இதன் மூலம் ஆசியா, மத்திய கிழக்கு, தென் பசிபிக் மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நான்கு பிராந்தியங்களில் இயங்குகிறது. ஏசியன் பெயிண்ட்ஸ் எப்போதும் சந்தையில் முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த ஆராய்ச்சிகளில் முதலீடு செய்து வருகிறது. இதன் மூலம் காலத்திற்கு ஏற்பட தனது வணிகத்தினை மேம்படுத்தி வருகின்றது.

உலகளாவிய உற்பத்தி மையங்கள்

உலகளாவிய உற்பத்தி மையங்கள்

இன்று உலகளவில் 26 உற்பத்தி மையங்களை கொண்டுள்ள இந்த நிறுவனம், 65க்கும் மேற்பட்ட நாடுகளில் வணிகம் செய்து வருகின்றது. இந்தியாவில் மட்டும் 1.5 லட்சம் சில்லறை விற்பனையாளர்கள் உள்ளனர். இதன் பிராண்டினை பயன்படுத்தாதவர்கள் கூட பெயிண்ட் என்றால் அது ஏசியன் தான் எண்ணுமளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது.

முன்னணி பெயிண்ட் நிறுவனம்

முன்னணி பெயிண்ட் நிறுவனம்

இன்று இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய எக்ஸ்சேஞ்ச்-களான என் எஸ் இ மற்றும் பி எஸ் இயில் இருந்து வரும் ஒரு பெயிண்ட் நிறுவனம். மகராஷ்டிரா மாநிலம், மும்பையை தலைமையிடமான கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், இந்திய பெயிண்ட் துறையில் உள்ள முன்னணி நிறுவனமாகும். அந்த காலகட்டத்தில் சந்தையில் போட்டிகள் மிக குறைவு. அதோடு நிறுவனத்தின் கடும் முயற்சியால் விரைவில் ஏற்றம் கண்டது.

 கவனம் ஈர்த்த ஒன்று

கவனம் ஈர்த்த ஒன்று

புதுமையான, மக்களை சார்ந்த ஏதுவான பொருட்களே இந்த நிறுவனத்திற்கு வலுவான ஊன்றுகோலாக இருந்தது. குறிப்பாக மாசுபடுத்துதலை முன்னிலை படுத்தி செய்யப்பட்ட விளம்பரம் பெரும் கவனத்தை ஈர்த்தது. மொதத்தில் பெயிண்ட் என்றாலே ஏசியன் பெயிண்ட்ஸ் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மனதில் பதிந்து விட்டனர்.

புதிய புதிய அறிமுகம்

புதிய புதிய அறிமுகம்

அதோடு தொடர்ந்து இந்த நிறுவனம் தொடர்புடைய வணிகங்களிலும் ஒவ்வொன்றாக நுழைந்தும் வந்தது. உதாரணத்திற்கு உள்புற சுவர்கள் மற்றும் வெளிப்புற சுவர்கள், மர பூச்சுகள், ஓவியங்கள், குளியல் அறையில் பொருத்தும் சாதனங்கள், சமயலறை சாதனங்கள் என பலவற்றிலும் நுழைந்தனர்.

போர்ப்ஸ் பட்டியல்

போர்ப்ஸ் பட்டியல்

இப்படி தொடர்ந்து ஏற்ற பாதையிலேயே இருந்து வந்த நிறுவனம் 2004ம் ஆண்டில் , பில்லியன் டாலர்களுக்கு கீழான நிறுவனங்களில் சிறந்த நிறுவனமாகவும் போர்ப்ஸ் பட்டியலிலும் இடம்பெற்றது. பல விருதுகளையும் வென்றுள்ளது.

மொத்தத்தில் இன்று மக்களின் மனதிலும், வீட்டின் சுவர்களிலும் இடம் பிடித்த ஒரு நிறுவனமாக வளர்ந்துள்ளது.

மஞ்சப்பை விற்பனையில் 3 கோடி வருமானம்.. மதுரையை கலக்கும் கிருஷ்ணன்- கௌரி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do you know how Asian Paints came to be? india's largest paint company

Do you know how Asian Paints came to be? india's largest paint company/ஏசியன் பெயிண்ட்ஸ் உருவானது எப்படி தெரியுமா.. ஊருக்கு நாலு பேர்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X