நயன்தாரா - விக்னேஷ் ஷிவன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நயன்தாரா, விக்னேஷ் ஷிவன் இருவருக்கு ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் முடிந்தது. இவர்களது திருமணம், அவர்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 

ஷாருக் கான், அட்லீ, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட மிக முக்கிய நபர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் பங்கேற்றனர். இவர்களது திருமணம் வீடியோ நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திருமணத்தை முடித்து கையோடு, தாய்லாந்துக்குத் தேன் நிலவும் இந்த ஜோடி சென்று திரும்பியுள்ளது. இவர்களது இணைவுக்கு பிறகு அவர்களது சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

சொத்து பிரச்சனை உள்பட பல வருட பகை மறந்து இணைந்த அம்பானி பிரதர்ஸ்.. மருமகளுக்காக ஆஜர்!

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

நயன்தாரா சொத்து மதிப்பு 165 கோடி ரூபாய். விக்னேஷ் ஷிவன் சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய். மொத்தம் 215 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

ஃபோர்ப்ஸ்

ஃபோர்ப்ஸ்

ஃபோர்ப்ஸ் பட்டியலில் விக்னேஷ் ஷிவனின் சொத்து மதிப்பு 33 மில்லியன் சாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு சொந்தமாக 20 கோடி ரூபாய் மதிப்பிலான வீடும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் விக்னேஷ் ஷிவன், நயன்தாரா பெயரில் போயஸ் கார்டனிலும் ஒரு வீடு உள்ளது.

நயன்தாரா
 

நயன்தாரா

நயன்தாராவுக்கு ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விளம்பரங்களில் நடிக்க 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். 100 கோடி ரூபாய் வரையில் நயன்தாரவுக்கு அசையா சொத்துக்கள் உள்ளன. ஹைதராபாத்தில் இவருக்கு 15 கோடி ரூபாய் மதிப்பில் சொந்தமாக ஒரு வீடும். சென்னையில் 4 படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீடும், கேரளாவில் ஒரு வீடும் இவருக்கு உள்ளதாம்.

ஜெட் விமானம்

ஜெட் விமானம்

அண்மையில் நயன்தாரா தனது சொந்த பயன்பாட்டுக்காகத் தனியார் ஜெட் விமானம் ஒன்றைச் சொந்தமாக வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றனர்.

பிஸ்னஸ்

பிஸ்னஸ்

நடிகை நயன்தாரா காஸ்மெடிக் ரீடெய்ல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் உலகின் பிராலமான லிப்ஸ்டிக் தயாரிப்புகள் அனைத்தும் கிடைக்கும் என்ற கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் சாய் வாலே ரெஸ்டாரண்ட் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் ஏஞ்சல் முதலீட்டாளராகவும் நயன்தாரா உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do You Know Nayanthara and Vignesh Shivan’s Combined Net Worth After Marriage?

Nayanthara and Vignesh Shivan’s Combined Net Worth After Marriage? | நயன்தாரா - விக்னேஷ் ஷிவன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X