ஓரே வீடியோ.. நெட்டிசன்களைத் திணறடிக்க வைத்த ரத்தன் டாடா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரத்தன் டாடா மீது அளவு கடந்த பாசமும், அன்பும் டாடா குழும ஊழியர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் சக போட்டி நிறுவனங்களின் ஊழியர்கள், தலைவர்கள் என அனைத்து தரப்பினர் மத்தியிலும் உள்ளது.

 

ரத்தன் டாடாவின் ஒவ்வொரு பதிவும், ஒவ்வொரு பேச்சும் சமீபத்தில் நெட்டிசன்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தற்போது ஒரு வீடியோ பெரிய அளவில் வரலாகியுள்ளது.

டிவிட்டர்

டிவிட்டர்

டிவிட்டரில் எந்த அளவிற்கு ஆனந்த் மஹிந்திரா ஆக்டிவ் ஆக இருக்கிறாரோ அதே அளவிற்கு RPG குரூப்-ன் தலைவர் ஹர்ஷ் கோயங்கா-வும் ஆக்டிவ் ஆக உள்ளார். சமுக வலைத்தளத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் போது மக்கள் எதை விரும்புகிறார், மக்களின் எதிர்பார்ப்புகளை ஒரு தொழிலதிபரால் தெரிந்துகொள்ள முடியும்.

ஹர்ஷ் கோயங்கா

ஹர்ஷ் கோயங்கா

இப்படி ஹர்ஷ் கோயங்கா சமீபத்தில் பதிவிட்ட ரத்தன் டாடா-வின் ஒரு வீடியோ இணையத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. ஹர்ஷ் கோயங்கா பதிவிட்ட வீடியோவை மட்டும் சுமார் 5,44,000 அதிகமானோர் பார்வையிட்டும், 2500க்கும் அதிகமானோர் லைக் செய்தும் உள்ளனர்.

ரத்தன் டாடா
 

ரத்தன் டாடா

இந்த வீடியோவில் ரத்தன் டாடா மற்றவர்களால் இயலாது என்று முத்திரை குத்தப்பட்ட காரியங்களைச் செய்ய முயற்சிப்பதே தனது வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது என்று கூறியுள்ளார். இவர் பேசியதில் அனைத்து தரப்பினரும் தங்கள் வாழ்க்கையில் அடுத்த தளத்திற்குச் செல்வதற்கு முக்கியமான ஊந்துக்கோலாக இருக்கும்.

ஆட்டோமொபைல் சந்தை

ஆட்டோமொபைல் சந்தை

ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் சந்தையும் 1 லட்சம் ரூபாயில் கார் தயாரிக்க முடியாது எனவும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தையும் கிண்டல் செய்த நிலையில், ரத்தன் டாடா தான் டிசைன் செய்து தேவையில்லாத செலவுகளைக் குறைத்து 1 லட்சம் ரூபாயில் டாடா நேனோ கார்-ஐ அறிமுகம் செய்தார்.

 டாடா நோனோ கார்

டாடா நோனோ கார்

இந்தக் கார் குறித்துப் பல விமர்சனம் இருந்தாலும் 2 சக்கர வாகனத்தில் தந்தை, மகன், மகள் எனக் குடும்பமாகச் செல்லும் நிலையைக் காட்டிலும் இந்த 1 லட்சம் ரூபாயில் கிடைக்கும் டாடா நோனோ காரின் பாதுகாப்பு மிகவும் அதிகம். இவருடைய வாழ்க்கையும், வர்த்தக முடிவுகளும் பலருக்குப் பாடமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do you know what Ratan gives greatest pleasure? Trending video of ratan tata shared by RPG group Harsh Goenka

Do you know what Ratan gives the greatest pleasure? Trending video of ratan tata shared by RPG group Harsh Goenka
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X