மின் கட்டணம், சொத்து வரி, வாகன வரி விரைவில் உயருமா..? பிடிஆர் சொல்வது என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டின் கடன் சுமை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில் வருவாய் ஈட்டு வாய்ப்புகளும் பல பிரிவுகளில் குறைந்துள்ளது. இதனால் பல பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்திலும் இயங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

 

இந்த நிலையில் பல வருடங்களாகச் சொத்து வரி, மின்கட்டணம், வாகன வரி உயர்த்தப்படாமல் இருப்பது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது.

தங்கம் விலை பலத்த வீழ்ச்சி.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

இது மட்டும் அல்லாமல் அரசின் பல திட்டங்கள் ஏழை மக்களுக்குப் பலன் அளிப்பதை விடவும் பணக்காரர்கள் அதிக பலனை அடைந்து வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கை வெளியீடு கூட்டத்தில் தெரிவித்தார்.

ஒன்றிய அரசின் வரிப் பாக்கி

ஒன்றிய அரசின் வரிப் பாக்கி

ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு மறைமுக வரி விதிப்பில் பெரும் பகுதியை மத்திய அரசு வசூலித்து வருகிறது. அதனால் ஒவ்வொரு வருடமும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் பார்மூலாவை வைத்து மாநிலத்திற்கான வரி பணத்தை கணக்கிட்டுக் கொடுக்கும்

இதன் படி தமிழகத்துக்கு வரி வருவாயாக மத்திய அரசு தர வேண்டிய பணம் 20,033 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள்

பொதுத்துறை நிறுவனங்கள்

தமிழ்நாட்டில் பல பொதுத்துறை நிறுவனங்கள் போதுமான வருமானம் இல்லாமல் இருக்கும் காரணத்தால் பல துறைகளைக் கடன் பெற்று இயக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் வாயிலாகக் கடந்த 5 வருடத்தில் தமிழகத்தின் கடன் அளவு பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடி வட்டி
 

ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடி வட்டி

2021-ல் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டது. இதற்கு தமிழக அரசு ஒரு நாளைக்கு ரூபாய் 87.31 கோடி வட்டியாக செலுத்தி வருகிறது என தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார்.

69 பொதுத்துறை நிறுவனங்கள்

69 பொதுத்துறை நிறுவனங்கள்

தமிழ்நாட்டில் இருக்கும் சுமார் 69 பொதுத்துறை நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. இந்த நிலைக்கு மிக முக்கிய காரணம் முறையற்ற நிர்வாகம், 15 வருடங்களாகப் பல துறைகளில் கட்டணங்கள், வரிகள் உயர்த்தப்படாமல் உள்ளது தான் என்று தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார்.

2 லட்சம் கோடி கடன்

2 லட்சம் கோடி கடன்

தமிழ்நாட்டின் மிக முக்கியமான பொதுத்துறை நிறுவனமான மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம் ரூ2 லட்சம் கோடி கடன் வைத்துள்ளது. இதனால் இவ்விரு துறையும் ஒவ்வொரு நாளும் பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

3 முக்கிய துறையில் ஏற்படும் நஷ்டம்

3 முக்கிய துறையில் ஏற்படும் நஷ்டம்

உதாரணமாக அரசு பஸ் ஒரு கிலோ மீட்டர் ஓடினால் ரூபாய் 59 நஷ்டத்தில் தான் இயங்குகிறது. இது மகளிருக்கு இலவச பஸ் கட்டணம் வருவதற்கு முன்பே இந்த நிலைமை இருந்தது.

இதேபோல் மின்சாரத்துக் கோப்பை திறந்தால் எத்தனையோ பிரச்சனை இருக்கு. ஒரு யூனிட் வாங்கி பயன்படுத்தினால், ரூ.2.36 இழப்பு ஏற்பட்டு வருகிறது.

மேலும் 1000 லிட்டர் நீரை உற்பத்தி செய்து வினியோகம் செய்ய ரூ.20.81 செலவு. ஆனால், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் பில் போடுவது ரூ.10.42 மட்டுமே என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்

இதேபோல் சொத்து வரி, வாகன வரியும் 10 முதல் 15 வருடங்களாக உயர்த்தப்படவில்லை எனவும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல் வரி

பெட்ரோல், டீசல் வரி

பெட்ரோல், டீசல் வரியில் ஒன்றிய அரசுக்கே பெரும்பங்கு, பெட்ரோல் விற்பனை மூலமாக மாநிலங்களுக்குக் கிடைத்த வருவாயை ஜிஎஸ்டி மூலம் பறித்து கொண்டது மத்திய அரசு.

பெட்ரோல் விற்பனை மூலமாக செஸ் வரியால் மத்திய அரசுக்கு ரூ31.50 கிடைக்கிறது, மாநில அரசுக்கு 2 பைசாதான் கிடைக்கிறது. செஸ் வரி என்ற பெயரில் மாநிலங்களுக்கான வரி பங்கீட்டைப் பெருமளவு குறைத்துவிட்டது மத்திய அரசு

அதிமுக அரசு

அதிமுக அரசு

அதிமுக அரசின் வீண் செலவால் தனிநபர் ஒருவருக்கு ரூ.50000 இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் வருமானம் மட்டுமே அதிகரித்துள்ளது, பிற அனைத்து துறையிலும் வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளது என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் பணக்கார மாநிலம்

தமிழகம் பணக்கார மாநிலம்

இந்த வெள்ளை அறிக்கை வெளியீடு கூட்டத்தில் தமிழகம் பணக்கார மாநிலம் சரியாக ஆட்சி நடத்தினால் வருவாயைப் பெருக்கமுடியும். இங்கு ஐடி, ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், ஏற்றுமதி, சப்ளை, உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி எனப் பல துறை வர்த்தகம் தமிழ்நாட்டில் உள்ளது. எனவே சரியாகத் திட்டமிட்டால் தமிழ்நாடு மீண்டும் பணக்கார மாநிலமாக மாறும் என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கட்டணம், வரி உயரும்..?

கட்டணம், வரி உயரும்..?

இதனால் தமிழ்நாட்டில் கட்டணம், வரி உயருமா என்ற கேள்விக்கு உடனே தடாலடியாக எதையும் உயர்த்த திட்டம் இல்லை. மாநிலத்தின் நிதிநிலையை ஏற்ற வகையில் குறித்த காலத்தில் குறித்த நேரத்தில் பொருளாதார வல்லுனர்கள் அறிவுரை, முதல்வர் ஒப்புதல் உடன் செய்யப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Does Property tax, electricity price, vechile tax increase? FM ThiagaRajan explains

Does Property tax, electricity price, vehicle tax increase? FM Thiagarajan explains
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X