கொரோனா தொற்று குறைந்து மக்கள் பயணம் செய்வது தொடங்கியுள்ளதால், உள்நாட்டு விமானப் போக்குவரத்து மேம்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் கொரோனா தொற்றுக்கு முந்தைய நிலையை உள்நாட்டு விமான போக்குவரத்து எட்டும் என கூறப்படுகிறது.
2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், உள்நாட்டுப் போக்குவரத்து பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 10.5 மில்லியனாக இருந்தது. இப்போது அதிலிருந்து 5 சதவீதம் மட்டுமே குறைவாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு விமான பயணம்
2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சர்வதேச விமான போக்குவரத்து அதிகரித்து 1.85 மில்லியனாக உள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் குறைந்தால், விமான எரிபொருள் கட்டணம் குறைந்து விமான கட்டணமும் குறைந்தால் இது இன்னும் அதிகரிக்கும் என்ற ICRA ரேட்டிங் ஏஜன்ஸி கூறியுள்ளது.
உள்நாட்டு விமான பயணம்
2019-ம் ஆண்டு ஏரல் மாதம் உள்நாட்டு விமான பயணம் ஆண்டுக்கு 83 சதவீதம் அதிகரித்து 11.0 மில்லியனாக இருந்தது. 2022 ஏப்ரல் மாதம் 10.5 மில்லியனாஃப உள்ளது. இதுவே மார்ச் மாதம் 10.7 மில்லியனாக இருந்தது.
ஒரு விமானத்தின் பயணிகள் எண்ணிக்கை
ஏப்ரல் மாதம் சரசியாக ஒரு உள்நாட்டு விமானத்தில் 128 நபர்கள் பயணித்துள்ளனர். அதுவே மார்ச் மாதம் 133 ஆக இருந்தது.
சர்வதேச பயணிகள்
கொரோனா காலத்தில் சர்வதேச விமான பயணங்கள் தடை செய்யப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்கி வந்தது. தற்போது கொரோனா தொற்று சரிந்து வருவதால் மார்ச் 27-ம் தேதி சர்வதேச விமான பயணத்துக்கு இருந்துவந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அடுத்த ஒரு மாதத்தில் 1.85 நபர்கள் வெளிநாட்டுப் பயணம் செய்துள்ளார்கள். அதுவே 2019-ம் ஆண்டு 1.83 மில்லியனாக இருந்தது.
விமான எரிபொருள்
பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, மே மாதம் விமான எரிபொருள் 89 சதவீதம் அதிகரித்துள்ளது எனவே விமான கட்டணமும் அதிகரித்துக் காணப்படுகிறது.
ஆடம்பரம்
ஒரு காலத்தில் உள்நாட்டு விமான பயணம் என்பது செல்வந்தர்கள் மட்டுமே செய்யக்கூடிய ஒன்றாக பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது பயணத்தை முன் கூடிட்யே திட்டமிட்டு விமான டிக்கெட் புக் செய்தால் ராஜ்தானி, சதாப்தி ரயில் கட்டணங்களை விட குறைந்த செலவில் பயணிக்க முடிகிறது. எனவே இந்தியாவில் நாளுக்கு நாள் விமான டிராபிக் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications