டிசம்பர் 31-க்குள் மறக்காமல் இந்த 4ம் செய்திடுங்க.. இல்லாட்டி பிரச்சனை தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு ஆண்டு முடிந்து புத்தாண்டு தொடங்கவுள்ள நிலையில், டிசம்பர் 31-க்குள் மறக்காமல் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

 

நடப்பு காலாண்ட ர் ஆண்டு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஜனவரி 1ல் இருந்து பல நிதி ரீதியிலான மாற்றங்கள் வரவுள்ளன.

ஆக இதனை செய்யாமல் தவறும் பட்சத்தில் அபராதம் கட்ட நேரிடலாம். பணம் மட்டும் அல்ல, இதனால் மீண்டும் உங்களது கடமைகளை செய்ய கூடுதலாக நேரம் செலவழிக்க நேரலாம். ஆக சரியான நேரத்தில் இந்த 4 விஷயங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

மாதம் மாதம் பென்ஷன் வேண்டுமா.. எல்ஐசி-யின் ஜீவன் அக்ஷய் திட்டம். தான் ஏற்றது..!

கட்டாயம் PF நாமினியை அப்டேட் செய்யுங்கள்

கட்டாயம் PF நாமினியை அப்டேட் செய்யுங்கள்

முதல் நாம் பார்க்கவிருப்பது உங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் நாமினியின் பெயரை அப்டேட் செய்வது. இது குறித்து EPFO ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் கட்டாயம் டிசம்பர்31, 2021-க்குள் நாமினியை அப்டேட் செய்ய வேண்டும். அப்படி அப்டேட் செய்யாவிடில் பின்னாளில் உங்களுக்கு இது பிரச்சனைகளாக மாறக்கூடும். உதாரணத்திற்கு இன்சூரன்ஸ், பென்சன் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்காமல் போகலாம். ஆக டிசம்பர் 31க்குள் கட்டாயம் ஊழியர்கள் இதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை ஆன்லைனிலேயே கூட அப்டேட் செய்து கொள்ள முடியும். இதனை எப்படி அப்டேட் செய்வது என https://tamil.goodreturns.in/classroom/how-to-add-or-change-nominee-in-epf-account-online-check-details/articlecontent-pf135303-025706.html என்ற பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ITR தாக்கல் கடைசி தேதி

ITR தாக்கல் கடைசி தேதி

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தால், மத்திய அரசு 2020 - 2021ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யச் செப்டம்பர் வரையில் கால நீட்டிப்பு செய்திருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு, வருமான வரி தளத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் என பல காரணிகளினால் இது தாமதமாகி வந்தது. இந்த நிலையில் தான் இதற்கான கால அவகாசத்தினை டிசம்பர் 31 வரையில் அரசு நீட்டித்தது.

ஜீவன் பிரமாண் பத்திரம்
 

ஜீவன் பிரமாண் பத்திரம்

பென்சன் வாங்கிக் கொண்டிருக்கும் நபர்கள் மறக்காமல் டிசம்பர் 31-க்குள் தங்களது ஜீவன் பிரமாண் பத்திரம் எனப்படும் வாழ்வு சான்றிதழை அவசியம் வழங்க வேண்டும். இந்த சான்றிதழ் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30-க்குள் செய்திட வேண்டும். பென்சன் பெற ஓய்வூதியதாரர்கள் இதனை கொடுக்க வேண்டியது மிக அவசியமானதாகிறது. இதனையும் ஆன்லைனிலேயே பெறும் வசதிகள் வந்துவிட்டது.

ஆதார் + UAN இணைப்பு

ஆதார் + UAN இணைப்பு

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சம்பளம் பெறும் நபர்களின் ஆதார் எண்ணை அவர்களின் ஈபிஎஃப் கணக்குடன் இணைப்பதற்கான காலக்கெடுவை பலமுறை முன்னதாக நீட்டித்துள்ளது. இது குறித்து பல முறை எச்சரித்தும் உள்ளது. இந்த் நிலையில் கடைசியாக டிசம்பர் 31, 2021 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி அப்டேட் செய்யாவிடில் பின்னர் பிஎஃப் தொகை எடுக்கும்போதோ அல்லது வேறு ஏதேனும் முக்கிய பரிவர்த்தனையின்போது பிரச்சனைகள் எழலாம். ஆக மறக்காமல் டிசம்பர் 31-க்குள் இதனை அப்டேட் செய்து விடுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Don't forget to do this by December 31st, 2021

Don't forget to do this by December 31st, 2021/டிசம்பர் 31-க்குள் மறக்காமல் இந்த 4ம் செய்திடுங்க.. இல்லாட்டி பிரச்சனை தான்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X