இந்தியாவில் பெரும்பாலான விமான நிலையங்கள் தற்போது தனியார் நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், பிரைவேட் ஏர்போர்ட் ஆப்ரேஷன் அமைப்பு மத்திய அரசிடம் முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளது.
உலகிலேயே விமானப் போக்குவரத்துத் துறை வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பு கொண்டுள்ள நாடாக இந்தியா இருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பு இத்துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. ஆனாலும் அடுத்த சில காலாண்டுகளில் இந்திய விமானப் போக்குவரத்துத்துறை புதிய உச்சத்தை அடைய உள்ளது.

முக்கியக் கோரிக்கை
அதிலும் முக்கியமாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து எப்போதும் இல்லாத வகையில் பெரிய அளவிலான வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் இந்த வளர்ச்சியை வர்த்தகமாக மாற்றும் முயற்சியில் பிரைவேட் ஏர்போர்ட் ஆப்ரேஷன் அமைப்பு முக்கியக் கோரிக்கை விடுத்துள்ளது.

மதுபானம் அளவீடு
2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பில் பிசியாக இருக்கும் மத்திய அரசுக்கும், நிதியமைச்சகத்திடமும் பிரைவேட் ஏர்போர்ட் ஆப்ரேஷன் அமைப்பு duty free கடைகளில் தற்போது 2 லிட்டர் மதுபானம் மட்டுமே வாங்கப்படும் நிலையில், இந்த அளவீட்டை 4 லிட்டராக உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளது.

ஷாப்பிங் அளவீடு
இதுமட்டும் அல்லாமல் இந்திய விமான நிலையத்தில் duty free கடைகளில் அதிகப்படியாக ஒருவர் 50,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை மட்டுமே வாங்க முடியும் அளவீடு உள்ளது. இதை 1 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தவும் இந்த அமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது.

பிற நாடுகள்
இந்தியாவை விடவும் அண்டை நாடுகளிலும், பிற ஆசிய பசிபிக் நாடுகளில் மதுபானம் வாங்குவதற்கான அளவீடு அதிகமாகவே உள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஷாப்பிங் செய்வதற்கான அளவீடும் அதிகமாக உள்ளதால், இந்தியா விமான நிலைய வர்த்தகத்தில் பெரும் பகுதியை வெளிநாடுகளிடம் இழந்து வருகிறது. இதை முறையாக இந்தியா கைப்பற்ற மதுபானம் மற்றும் ஷாப்பிங் அளவீடுகள் உயர்த்தப்பட வேண்டும் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நிர்மலா சீதாராமன்
இந்நிலையில் பிரைவேட் ஏர்போர்ட் ஆப்ரேஷன் அமைப்பின் கோரிக்கையை ஏற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையில் விமான நிலையத்தில் மதுபானம் மற்றும் ஷாப்பிங் அளவீடுகளை உயர்த்த அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.