டிடிஎச், கேபிள் கட்டணம் 14சதவீதம் குறைப்பு.. மார்ச் 1 முதல் அமர்க்களம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் கேபிள் மற்றும் ஒலிபரப்பு சேவைகளுக்காகப் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டண மாற்றங்களை அறிவித்துள்ளது. இப்புதிய அறிவிப்பின் மூலம் டிடிஎச், கேபிள் கட்டணங்கள் தற்போதைய அளவை விடவும் சுமார் 14 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மக்களுக்குப் பெரிய அளவிலான நன்மையைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 5%.. வாழ்க பாரதம்..!இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 5%.. வாழ்க பாரதம்..!

டிராய்

டிராய்

கடந்த வாரம் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் கேபிள் மற்றும் ஒலிபரப்பு சேவைகளுக்காகப் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டண மாற்றங்களை அறிவித்தது. இப்புதிய மாற்றத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டணங்களை விடவும் குறைவான கட்டணத்தில் அதிகச் சேனல்களை டிடிஎச், கேபிள் வாடிக்கையாளர்கள் பார்க்க முடியும்.

இதுமட்டும் அல்லாமல் தற்போது இருக்கும் கட்டண அளவை விடவும் சுமாப் 14 சதவீதம் வரை சரிந்து புதிய கட்டணங்களை டிராய் அறிவித்துள்ளது.

கட்டண விபரம்

கட்டண விபரம்

அனைத்து இலவச சேனல்களையும் பார்க்க மாதம் 160 ரூபாய் நிலையான கட்டணமாக அறிவித்துள்ளது டிராய். அதுபோல 200 சேனல்களைப் பார்க்கும் திட்டத்திற்கு அதிகப்படியான Network Capacity Fee அடிப்படையில் 130 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மக்கள் மகிழ்ச்சி
 

மக்கள் மகிழ்ச்சி

14 சதவீதம் வரையிலான கட்டணம் குறைக்கப்பட்டது மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான சேனல்களைத் தாமே தேர்வு செய்து கண்டு மகிழும் வசதி இருப்பதால் சமானிய மக்களுக்கு இது டபுள் கொண்டாட்டம்.

மேலும் சில முக்கியமான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுச் சேனல்களுக்கு மக்கள் அதிகக் கட்டணத்தைக் கொடுக்க வேண்டிய நிலை தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலையையும் மாற்ற டிராய் திட்டமிட்டும் தொடர்ந்து இதுகுறித்து ஆலோசனை செய்தும் வருகிறது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இந்நிலையில் தற்போது டிராய் குறைக்கப்பட்டு உள்ள கட்டணத்தைத் தொடர்ந்து முன்னணி பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுச் சேனல்கள் தனது கட்டணத்தை மாதத்திற்கு 19 ரூபாயில் இருந்து 12 ரூபாயாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இண்டர்நெட் டிவி

இண்டர்நெட் டிவி

மேலும் அடுத்தச் சில மாதங்கள் அல்லது வருடங்களில் இந்தியா முழுவதும் இண்டர்நெட் டிவி தான் ஆதிக்கம் செலுத்தப்போகிறது. அப்போது டிடிஎச், கேபிள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் குறையும். இக்காலகட்டத்தில் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளக் கட்டணங்களை அதிகளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

DTH/cable bills may fall by up to 14 pc post Trai's amendments: Icra

Trai's amendments to the new regulatory framework for cable and broadcasting services could potentially lower DTH/cable bills by up to 14 per cent from the present levels, rating agency Icra said on Tuesday.
Story first published: Wednesday, January 8, 2020, 9:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X