துபாய் வேலை.. இந்தியா திரும்பிய இளைஞர்.. லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தொழிலதிபர்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்த இளைஞர் ஒருவர் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பி சொந்த தொழில் தொடங்கினார்.

அவர் ஆரம்பித்த ஸ்ட்ராபெரி விவசாயம் என்ற தொழில் மிகச்சிறந்த வகையில் அவருக்கு கைகொடுக்க தற்போது அவர் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தொழில் அதிபராக உள்ளார்.

துபாயில் இருந்து இந்தியா திரும்பி ஸ்ட்ராபெரி தொழிலில் வெற்றி பெற்று, வெற்றிகரமான தொழிலதிபராக இருக்கும் இளைஞர் குறித்து தற்போது பார்ப்போம்.

துபாயில் இருந்தவர், மேனேஜராக இந்தியா திரும்பிய பிறகு தனது தொழிலைத் தொடங்கி லட்சக்கணக்கில் சம்பாதித்தார்.

 ஈஷா அம்பானி-யின் ஸ்மார்ட்டான ஐடியா.. ரிலையன்ஸ் சென்ட்ரோ புதிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்..! ஈஷா அம்பானி-யின் ஸ்மார்ட்டான ஐடியா.. ரிலையன்ஸ் சென்ட்ரோ புதிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்..!

ஸ்ட்ராபெரி விவசாயம்

ஸ்ட்ராபெரி விவசாயம்

கடந்த சில ஆண்டுகளாக இந்திய இளைஞர்கள் விவசாயத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். நவீன தொழில்நுட்பத்தை விவசாயத்தில் பயன்படுத்தி விவசாயம் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் நவீன் மோகன் ராஜ்வன்ஷி என்ற இளைஞர் துபாயில் நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் அந்த வேலையை விட்டுவிட்டு தனது சொந்த ஊருக்கு வந்து ஸ்ட்ராபெர்ரி பயிரிட ஆரம்பித்தார். நவீன தொழில் நுட்பத்தில் இப்பழத்தை பயிரிட்ட அவர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

சென்னையில் எம்.பி.ஏ பட்டம்

சென்னையில் எம்.பி.ஏ பட்டம்

சென்னையில் எம்பிஏ படித்துவிட்டு துபாய் சென்ற நவீன், அங்கு பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜராக பணியாற்றத் தொடங்கினார். ஆனால் சிறிது காலத்திற்கு பிறகு அவரது வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நவீன் துபாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, ​​ஒருமுறை ஒரு ஸ்ட்ராபெரி பண்ணைக்கு சென்றிருந்தார். அங்கு தான் அவருக்கு நாமும் ஸ்ட்ராபெரி விவசாயம் செய்யலாம் என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியது.

இந்தியா திரும்பினார்

இந்தியா திரும்பினார்

அதன் பிறகு அவர் இந்தியா திரும்பினார். கோவிட் சமயத்தில் நவீன் தனது சொந்த ஊரான சிதார்பூருக்கு திரும்பினார். அங்குள்ள கிருஷி விக்யான் கேந்திராவில் நவீன தொழில்நுட்பத்துடன் ஸ்ட்ராபெர்ரி பயிரிட கற்றுக்கொண்டார். இதையடுத்து நவீன் ஒரு ஏக்கரில் சுமார் 20 ஆயிரம் ஸ்ட்ராபெரி மரக்கன்றுகளை நட்டார். 3 லட்சம் செலவானது. இதன் மூலம் 150 முதல் 160 குவிண்டால் வரை மகசூல் கிடைத்தது. அவரது ஆண்டு செலவு ரூ.3 லட்சம் என்ற நிலையில் சில மாதங்களிலேயே அவருக்கு பல லட்சம் லாபம் கிடைத்தது.

6 லட்சம் வருமானம்

6 லட்சம் வருமானம்

நவீன் ரூ.3 லட்சம் முதலீடு செய்து தொடங்கிய ஸ்ட்ராபெரி சாகுபடியில் 6 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கிறார். ஸ்ட்ராபெரி மட்டுமின்றி வேறு பயிர்களும் அவர் பயிரிட்டதால் கூடுதல் வருமானமும் கிடைக்கின்றது. குறிப்பாக சாமந்தி செடிகள் மூலம் 50 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வருகிறார். சாமந்தி அறுவடைக்கு பின் அவர் முலாம்பழங்களை பயிரிட்டு அதிலும் வருமானம் பெற்றார்.

ஸ்ட்ராபெரி சாகுபடியின் முக்கியத்துவம்

ஸ்ட்ராபெரி சாகுபடியின் முக்கியத்துவம்

ஸ்ட்ராபெர்ரிகளை வளர்க்க விரும்பினால், களிமண் மற்றும் களிமண் சார்ந்த மண்ணில் பயிரிட வேண்டும் என்று அவர் இந்த தொழிலை தொடங்குபவர்களுக்கு ஆலோசனை கூறுகிறார். இரண்டாவது விஷயம் வெப்பநிலை, இது 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரம்பில் இருப்பது சிறந்தது என்று கூறுகிறார். ஒரு பாலி ஹவுஸ் அல்லது திறந்தவெளியில் ஸ்ட்ராபெர்ரிகளை வளர்க்கலாம் என்றும், நல்ல முறையில் ஸ்ட்ராபெரி விவசாயம் கிடைத்தால் ஐடி நிறுவனத்தில் கிடைக்கும் வருமானத்தை விட பல மடங்கு சம்பாதிக்கலாம் என்றும் நவீன் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dubai return youth starts business earning lakhs!

Dubai return youth starts business earning lakhs! | துபாய் வேலை.. இந்தியா திரும்பிய இளைஞர்.. லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தொழிலதிபர்
Story first published: Wednesday, September 28, 2022, 6:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X