ஏற்கனவே வெங்காயமே பெரும் 'காயத்தை" தந்திருக்கு.. இதுல புதுசா இந்த பிரச்சனை வேறயா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சேலம்: வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழையால், 50% லாரிகளுக்கு மளிகை சரக்குகள் போதிய அளவில் கிடைக்கவில்லை. எனவே தீபாவளி பண்டிகையின் போது மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் கூறினர்.

 

தமிழகத்திற்கு தேவையான பல்வேறு மளிகை பொருட்கள் டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகின்றன.

குறிப்பாக பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, பூண்டு, சீரகம், கொத்தமல்லி, மிளகாய், சாத்துக்குடி போன்றவை மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தான் வருகின்றன. இதேபோல் காஷ்மீர், இமாசல பிரதேசத்தில் இருந்து ஆப்பிளும் வருகின்றன.

மளிகை பொருட்கள் தட்டுப்பாடு

மளிகை பொருட்கள் தட்டுப்பாடு

சில நாட்களாக மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழையும் வெள்ளமும் ஏற்பட்ட காரணத்தால் வடமாநிலங்களுக்கு சென்ற 50 சதவீத லாரிகளுக்கு சரக்குகள் கிடைக்கவில்லை. இதனால் தீபாவளி நேரத்தில் மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

லாரி உரிமையாளர்கள்

லாரி உரிமையாளர்கள்

இது குறித்து, சேலம் லாரி உரிமையாளர்கள் கூறுகையில். தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு தினசரி 25,000க்கும் மேற்பட்ட லாரிகள் செல்கிறது. வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், அங்கிருந்து தமிழகத்திற்கு மளிகைப் பொருட்கள் வரத்து குறைந்திருக்கிறது.

வெங்காயம் உளுந்து
 

வெங்காயம் உளுந்து

உளுந்தம்பருப்பு, பெரிய வெங்காயம், துவரம்பருப்பு, உள்பட பல்வேறு பொருட்கள் வரத்து குறைந்துள்ளது., தீபாவளி பண்டிகை நேரத்தில் மேற்கண்ட பொருட்களுக்கு இன்னமும் தட்டுப்பாடு ஏற்படும். அதேபோல் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் மஞ்சள், ஜவ்வரிசி, இரும்புப்பொருட்கள், பிவிசி பைப்புகள் தேக்கமடைந்திருக்கிறது.

அங்கேயே நிற்கும் லாரிகள்

அங்கேயே நிற்கும் லாரிகள்

வடமாநிலத்தில் இருந்து கொண்டு வர சரக்குகள் கிடைக்காததால், தமிழகத்தில் 50 சதவீதம் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது " என்றார்கள். லாரி ஓனர்களின் கருத்துப்படி பார்த்தால், தீபாவளி நேரத்தில் மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வெங்காயம் விலை எப்போது குறையும் என்றே தெரியவில்லை. இந்த சூழலில் உளுந்து, துவரை உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்தால் அது மக்களை நிச்சயம் அதிக அளவில் பாதிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Due to heavy rains in the northern states, 50% of lorries are not getting enough groceries

Due to heavy rains in the northern states, 50% of lorries are not getting enough groceries. So the lorry owners said there was a risk of shortage of groceries during the Deepavali festival.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X