350 ஊழியர்களை வேலைநீக்கம் செய்யும் இ-காமர்ஸ் நிறுவனம்.. என்ன காரணம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் மற்றும் கரன்சி மதிப்பு சரிவு ஆகியவை பல தொழில் நிறுவனங்களை நஷ்டத்திற்கு கொண்டு சென்று கொண்டிருப்பதாக வெளிவரும் செய்திகளை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் நஷ்டத்தை தவிர்க்கவும், செலவுகளை குறைக்கவும் கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட பல நிறுவனங்கள் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் தற்போது உடான் என்று கூறப்படும் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமும் தனது பணியாளர்களை 10 சதவீதம் பேரை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 உடான் நிறுவனம்

உடான் நிறுவனம்

இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான உடான் நிறுவனம் சுமார் 300 முதல் 350 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிறுவனத்தின் மொத்தம் 3000 பணியாளர்கள் பணி செய்து கொண்டிருக்கும் நிலையில் 10 சதவீத த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செலவை குறைக்க

செலவை குறைக்க

இது குறித்து இந்நிறுவனம் கூறியபோது செலவை குறைக்கவும் லாபத்தை இலக்காக கொண்டும் இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து துறைகளிலும் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உடான் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த வாரம் பணி நீக்கம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்களை விரைவில் மனிதவளத்துறை அணுகும் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

ஊழியர்கள் அதிர்ச்சி

ஊழியர்கள் அதிர்ச்சி

உடான் நிறுவனத்தின் இந்த முடிவால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கள் நிறுவனத்திற்காக தாங்கள் இரவு பகலாக வேலை பார்த்த நிலையில் இந்த முடிவு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஐபிஓ

ஐபிஓ

இந்த நிலையில் உடான் நிறுவனம் ஒரு வருடத்தில் ஐபிஓ தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில் இந்த பணி நீக்கம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. பெங்களூரை தளமாக கொண்ட உடான் நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஏற்கனவே 180 ஊழியர்களை பணி செய்த நிலையில் தற்போது மீண்டும் பணி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

 அனைத்து உதவிகள்

அனைத்து உதவிகள்

இதுகுறித்து உடான் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியபோது, 'எங்கள் நிறுவனத்தை லாபகரமாக மாற்றுவதற்கு எங்கள் பயணத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. செயல் திறன் மேம்பாடு மற்றும் வணிக ரீதியான பரிணாமம் ஆகியவை காரணமாக பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில துறைகளில் சில ஊழியர்கள் தேவை இல்லை என்ற நிலை ஏற்படும்போது இந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால் அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எங்கள் நிறுவனம் வழங்கும் என்று கூறியுள்ளார்.

செலவு கட்டமைப்புகள்

செலவு கட்டமைப்புகள்

நாங்கள் லாபகரமான எங்கள் நிறுவனத்தை கொண்டு செல்ல உந்துசக்தியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தின் செலவு கட்டமைப்புகளை செம்மைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். உடான் நிறுவனத்தின் மற்ற ஊழியர்கள் சுறுசுறுப்பாக மாறுவதற்கும் சந்தையில் போட்டி தன்மையை சமாளிக்கவும் டிஜிட்டல் திறனுள்ள நிறுவனத்தை நடத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றும் உடான் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

5 மில்லியன் பரிவர்த்தனைகள்

5 மில்லியன் பரிவர்த்தனைகள்

உடான் நிறுவனம் 3 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களின் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. மேலும் 25,000 முதல் 30,000 வரை விற்பனையாளர்களை நாட்டில் உள்ள 900 நகரங்களில் கொண்டுள்ளது. 1.7 மில்லியனுக்கும் அதிகமான சில்லறை விற்பனையாளர்கள் மாதத்திற்கு 4.5 மில்லியன் பரிவர்த்தனைகளை இணையவழி வணிகத்தில் செய்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

E-commerce Firm Udaan Lays Off 350 Employees To Shore Up Profitability

We are seeing news coming out that the economic slowdown, inflation and currency depreciation around the world are causing many companies to incur losses. Shocking information is coming out that many companies including Google and Microsoft are laying off employees to avoid losses and reduce costs.
Story first published: Monday, November 7, 2022, 6:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X