102.4% எட்டிய நிதிப் பற்றாக்குறை.. கவலையில் மத்திய அரசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் பொருளாதார நிலைதான் நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு வருகிறது எனில், மறுபுறம் மற்றொரு பிரச்சனை பூதாகரமாக கிளம்பியுள்ளது. அப்படி என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா?

அது நிதி பற்றாக்குறை தான். அதுவும் அரசு ஒரு வருடத்திற்கு நிர்ணயித்த இலக்கில், நடப்பு நிதியாண்டில் பாதியிலேயே எட்டியுள்ளது தான்.

102.4% எட்டிய நிதிப் பற்றாக்குறை.. கவலையில் மத்திய அரசு..!

நாட்டின் நிதிப்பாற்றாக் குறையானது 102.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டு அக்டோபர் 31ம் தேதி நிலவரப்படி, வருவாய் மற்றும் செலவினங்கள் இவற்றிற்கு இடையேயான நிதி பற்றாக் குறையானது 7.2 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. எனினும் இது கடந்த 2018 - 2019ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறையானது 103.9 சதவிகிதமாக இருந்தது.

எனினும் 2019 - 2020 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 102.4 சதவிகிதத்தை தற்போது எட்டியுள்ளது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்த செலவினம் 27.86 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பட்டுள்ளது. எனினும் நடப்பு நிதியாண்டில் முதல் ஏழு மாதங்களிலேயே செலவினங்கள் 16.54 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது பட்ஜெட்டில் அரசு நிர்ணயித்த இலக்கில் 59.4 சதவிகிதம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் பஞ்சாப் மட்டும் 4,100 கோடி ரூபாய் இழப்பு கோரியுள்ளது.

நிதிபற்றாக்குறை அதிகரித்து வரும் இந்த சூழலில், மத்திய அரசின் வருவாயு மறுபுறம் குறைந்து கொண்டே வருகிறது. சொல்லப் போனால் ஒரு புறம் இந்த நிதி பற்றாக்குறைக்கு காரணம் இந்த வரி குறைப்பே காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஏனெனில் கடந்த செப்டம்பரில் மத்திய அரசின் கார்ப்பரேட் வரி குறைப்பு இதற்கு முக்கியமாக வழிவகுத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம்,மத்திய அரசுக்கு 1.45 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் காலாண்டுகளிலேயே ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இது இரண்டாவது காலாண்டில் இன்னும் வீழ்ச்சி கண்டுள்ளது கவலையளிக்கும் விதமாகவே உள்ளது. எனினும் நிலவி வரும் மந்த நிலையை போக்க இது போன்ற வரிச் சலுகைகளை அளித்து வருவது, அரசின் வருவாயை குறைத்தாலும், மறுபுறம் அடுத்து வரும் காலாண்டுகளில் ஆவது உற்பத்தியை இது மேம்படுத்தும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Economic crisis: India’s fiscal deficit reached 102.4% to first half of this financial year

India’s fiscal deficit reached 102.4% to first half of this financial year. Punjab alone has claimed compensation to the tune of Rs.4,100 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X