நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி -7.7 சதவீதம் வீழ்ச்சி காணலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அடுத்த ஆண்டில் வி வடிவ வளர்ச்சி இருக்கலாம் என்றும் ஆய்வ்றிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
இது முன்னதாக ஒரு ஆய்வில், இந்த கணிப்பு 2021 - 22ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 11 சதவீதம் வளர்ச்சி காணும் என்றும் மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையிலும் அப்படியே வந்துள்ளது.

கொரோனாவின் காரணமாக பொருளாதாரம் மோசமான நிலையினை எட்டியுள்ளது. இதனை மீட்டெடுக்க கடந்த ஆண்டிலேயே 4 - 5 மினி பட்ஜெட்டுகள் கொண்டு வரப்பட்டதாக, பட்ஜெட் கூட்டதொடருக்கு முன்பு தான், பிரதமர் நரேந்திரமோடி கூறியிருந்தார். இந்த நிலையில் இது வரவிருக்கும் ஆண்டிலும் தொடரும் என்றும் கூறியிருந்தார்.
இதன் காரணமாக பொருளாதாரம் நிச்சயம் சரிவிலிருந்து மீண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் நாடு தழுவிய லாக்டவுன் காரணமாக பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியினை கண்டது. எனினும் தற்போது பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது அடுத்த ஆண்டில் நிச்சயம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சரிவினைக் கண்டு இருந்த தொழில் துறைகளும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வந்து கொண்டுள்ளன.
அதோடு நடப்பு நிதியாண்டில் முதல் பாதியில் முடங்கியிருந்த நிலையில், முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் கிட்டதட்ட -24% வீழ்ச்சி கண்டிருந்தது. இதே இரண்டாவது காலாண்டில் -7.5% சரிவினைக் கண்டிருந்தது. மூன்றவாது காலண்டிலும் இது சற்று வீழ்ச்சியை காணலால் என்றும், கடைசிக் காலாண்டில் பெரிய மாற்றமின்றி வளர்ச்சி பாதைக்கு திரும்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இது நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் சாதகமான வளர்ச்சி பாதைக்கு திரும்ப வழிவகுத்தாலும், மொத்தமாக பார்க்கும்போது நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி சரிவில் இருக்கும் என்பது தெரிந்த ஒரு விஷயமே. எனினும் இது எவ்வளவு சரிவு என்பது தான் கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் பல கட்டங்களாக ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது. இந்த ஊக்கத்தொகையானது 2022ம் நிதியாண்டிலும் தொடரும் என கூறப்பட்டுள்ள நிலையில், இது அடுத்து வரவிருக்கும் ஆண்டில் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட இருக்கும் அறிவிப்புகள் மேலும் ஊக்கத்தினை அளிக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக அடுத்த நிதியாண்டில் கொரோனா தடுப்பூசிகள் அமலுக்கு வரும் நிலையில், அது பொருளாதார சரிவினைக் தடுக்க வழிவகுக்கும். இது எளிதில் பொருளாதாரம் மீண்டு வர வழிவகுக்கும். ஆக அந்த சமயத்தில் இந்த 11% என்பது நிறைவேறக்கூடிய ஒன்று தான்.