கொரோனா பாதிப்பில் இருக்கும் இந்திய பொருளாதாரத்தின் முதல் படி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திங்கட்கிழமை முதல் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குப் பிள்ளையார் சுழி போடும் வகையில் சில முக்கியத் துறைகள் இயங்க உள்ளது. மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதி கொடுத்துள்ள போதிலும், குறைவான போக்குவரத்து மற்றும் பிற துறைகள் மீது இருக்கும் கட்டுப்பாடுகளின் காரணமாகத் தற்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ள துறைகள் வேகமாக இயங்க முடியாத சூழ்நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

 

ஆனால் வர்த்தகச் சந்தைக்கு இது சிறந்த துவக்கமாக இருக்கும் எனப் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய தேவைகள்

அத்தியாவசிய தேவைகள்

கடந்த வாரம் மத்திய அரசு கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளைக் கண்டறிந்து, அதில் தொழிற்துறை மற்றும் ஊரகப் பகுதிகளில் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு வர்த்தக அமைப்புகளை இயங்க உள்ளது. அதிலும் குறிப்பாக மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் உணவு மளிகை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், சரக்கு போக்குவரத்து ஆகியவை இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தொழிற்துறைகள்

தொழிற்துறைகள்

இதேபோல் நகரத்திற்கு வெளி பகுதியில் இருக்கும் தொழிற்துறைகள், SEZ எனபடும் சிறப்புப் பொருளாதாரப் பகுதிகள், ஏற்றுமதி துறை சார்ந்த தொழிற்துறைகள் சில அடிப்படை கட்டுப்பாடுகளுடன் இயங்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.

அவை கண்டிப்பாக நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு சந்தையை மேம்படுத்தவும், மக்கள் மத்தியில் கணிசமான பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் ஒரு துவக்கமாக இருக்கும்.

விவசாயம் மற்றும் முக்கியப் பணிகள்
 

விவசாயம் மற்றும் முக்கியப் பணிகள்

மக்கள் தங்களின் முக்கியத் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் கொரியர், பிளம்பர், எலக்ட்ரீஷியன், தச்சு, ஐடி பழுது, சாலை மற்றும் கட்டுமான பணிகளில் ஈடுப்பட்டவர்கள் அனைவரும் பணிக்கு திரும்பவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் விவசாயத் துறை மீட்டு எடுக்க இத்துறை சார்ந்த அனைத்துப் பரிவு மற்றும் அதிகாரிகளையும் இயங்க அனுமதி கொடுத்துள்ளது மத்திய அரசு.

இதர துறைகள்

இதர துறைகள்

50 சதவீத ஊழியர்களுடன் ஐடி நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் துறை, பேக்கிங் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், செங்கல் உற்பத்தி, ஜூட் உற்பத்தி, மருத்துவத் துறை (முழுவதும்), மீன்பிடித்தல், டீ, காபி ரப்பர் எனப் பல்வேறு முக்கியத் துறைகள் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனங்கள் இயங்கும் போது துறைவாரியான, பகுதி வாரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் தான் அனைத்து துறைகளும் இயங்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு

பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு

தற்போது கொடுக்கப்பட்டுள்ள அனுமதியின் மூலம் கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்ட வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பாதிப்பு வேகமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு திரும்பும் பக்கம் எல்லாம் கேட்கப்பட்டு வந்த வேலைவாய்ப்பு இழப்பு, சம்பளம் குறைப்பு ஆகியவை இனி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுநாள் வரையில் கொரோனாவால் இந்தியாவில் 1.5 முதல் 2.8 சதவீதம் வரையிலான பொருளாதாரம் பாதிப்பு அடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Economy gears up for limited restart: Hope for Good

Several key sectors of the economy are expected to begin operations from Monday as the Centre has given its nod for a limited start to jumpstart activities in some segments but industry representatives say it would be a tough task given the lack of public transport and several other restrictions such as movement of inter-state labour.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X