அம்பலமான மோசடிகள்.. 1 லட்சம் போலி கணக்குகள்.. ரூ.12,773 கோடி அபேஷ்.. ..டிஹெச்எஃப்எல் பலே சாதனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் 1 லட்சம் போலியான சில்லறை வாடிக்கையாளர்களுக்கு 12,773 கோடி ரூபாய் கடனை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் கண்டு பிடித்துள்ளது.

உண்மையில் இந்த போலியான கணக்குகள் மூலம் வழங்கப்பட்ட கடன்கள், டிஹெச்எஃப்எல் தொடர்புடைய 79 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

சில ஆதாரங்களின் படி, இந்த கற்பனையான போலி கணக்குகள் சில இறந்தவர்களின் பெயரில் கூட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிறுவனங்கள் இணைப்பு

நிறுவனங்கள் இணைப்பு

ஐந்து நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 2,186 கோடி ரூபாய் கடன் தொடர்பான நிதி புத்தகத்தினை ஆய்வும் செய்யப்பட்டது. இதில் ஃபெய்த் ரியால்டர்ஸ் பிரைவேட் லிமிடெட், மார்வெல் டவுன்சிப் பிரைவேட் லிமிடெட், ஏபிள் ரியால்டி பிரைவேட் லிமிடெட், போஸிடான் ரியால்டி பிரைவேட் லிமிடெட், ரேண்டம் ரியால்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஜூலை 2019ல் சன்பிளிங்க் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

சொத்து பரிமாற்றம்

சொத்து பரிமாற்றம்

இந்த சன் பிளிங்க் நிறுவனம் கடந்த 2010லியே மறைந்த இக்பால் மேவம் அல்லது இக்பால் மிர்ச்சிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ரபியா மேன்சன், சி வியூ மற்றூம் மரியல் லாட்ஜ் ஆகிய மூன்று வெர்லொய் சார்ந்த சொத்துக்களை முயன்றதாக கூறப்பட்ட நிலையில், சன் பிளிங்க் நிறுவனம் பற்றி அந்த சமயத்திலேயே ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒன்றுடன் ஒன்று பிணைப்பு
 

ஒன்றுடன் ஒன்று பிணைப்பு

சன்பிளிங்குடன் மேற்கூறிய ஐந்து நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படும்போது, வெர்லி சார்ந்த சொத்துகள் அடமானம் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது 2,186 கோடி ரூபாய்கான பாதுகாப்பாகவும் கூறப்படுகிறது. ஆக இவை அனைத்தும் ஒன்றொன்று பிணைக்கப்பட்டுள்ளது என்றும் அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

சட்ட விரோதமாக கடன்

சட்ட விரோதமாக கடன்

மேலும் கடந்த 2011 - 2012ல் மேற்கூடிய ஐந்து ரியால்டி நிறுவனங்களுக்கும் எந்த வித சரியான ஆதாரமும் இல்லாமல் 1,500 கோடி ரூபாய் பணத்தினை கடனாக, டிஹெச்எஃப்எல் திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சட்டவிரோதமாக இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

 கபில் வாதவன் கைது

கபில் வாதவன் கைது

டிஹெச்எஃப்எல் நிறுவனத்திலிருந்து முறைகேடாக பணத்தினை மற்ற நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டதில் கபில் வாதவனுக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இவர் கடந்த திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிஹெச்எஃப்எல் நிறுவனத்தின் சொத்துகள் குறித்தான சில டிஜிட்டல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இடி தெரிவித்துள்ளது.

திவால் சட்டம்

திவால் சட்டம்

இதே கபில் வாதவன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய்க்கு மிர்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவரை கை செய்துள்ளதை அதிகார துஷ்பிரயோகம் என்றும் குற்றம் சாட்டியுள்ளாராம். மேலும் டிஹெச்எஃப்எல் தொடர்பாக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். கடன் வழங்குனர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது திவால் சட்டத்தின் முன் உள்ளது என்றும் கூறியுள்ளாராம். எனினும் ஜனவரி 31 வரை சிறப்பு நீதிமன்றம் வாதவனை காவலில் வைக்க அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: dhfl
English summary

ED said DHFL diverted Rs.12,773 crore to 79 companies through 1 lakh fictious customers

Enforcement Directorate found that till 2015 DHFL diverted Rs.12,773 crore to 79 companies through 1 lakh fictious customers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X