மீண்டும் மீண்டும் அடி வாங்கும் தொழில்துறை.. வீழ்ச்சியை நோக்கி செல்லும் முக்கிய 8 துறைகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் கடந்த 2019ல் தான் எது எடுத்தாலும் வீழ்ச்சி, மந்தம், பற்றாக்குறை என நிலவி வந்தாலும், 2020-ம் விட்ட குறை தொட்ட குறையாக மீண்டும் தொடர ஆரம்பித்துள்ளது.

 

இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமே மந்த நிலையில் இருக்கும் இந்த நிலையில், இந்தியாவின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி கடந்த நவம்பர் மாதத்தில் 1.5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

இது ஒரு முறை இரு முறை அல்ல. தொடர்ச்சியாக நான்காவது மாதமாக வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் நடப்பு கணக்கு பற்றாக்குறை.. வருவாயை பெருக்க என்ன வழி.. திணறும் மத்திய அரசு..!

வளர்ச்சி வீழ்ச்சி

வளர்ச்சி வீழ்ச்சி

நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சியை பதிவு செய்யும் விதமாக ஐஐபி குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த விகிதமானது கடந்த நவம்பர் மாதத்தில் 1.5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த முக்கிய துறைகளின் குறியீடானது 126.3 ஆக நவம்பரில் இருந்துள்ளது. இது கடந்த நவம்பர் 2018வுடன் ஒப்பிடும்போது 1.5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது என்று வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேக்க நிலை

தேக்க நிலை

நடப்பு நிதியாண்டின் பாதியில் இந்த முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி தேக்க நிலையில் தான் உள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது மிக வீழ்ச்சி கண்டுள்ளது என்றும் அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தான் இப்படி எனில் வரவிருக்கும் மாதங்களில் ஆவது இது சீரடையுமா? இல்லையா என்றும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதென்ன முக்கிய 8 துறைகள்
 

அதென்ன முக்கிய 8 துறைகள்

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமென்ட், மின்சாரம், பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், உருக்கு உள்ளிட்ட துறைகளில் உற்பத்தி சரிவு ஏற்பட்டதால் இந்த வளர்ச்சி குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த எட்டு துறைகளும் இந்தியாவின் முக்கிய எட்டு துறைளாக உள்ளன. இதன் வளர்ச்சி இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி உற்பத்தி

நிலக்கரி உற்பத்தி

நாட்டின் நிலக்கரி உற்பத்தியானது கடந்த 2018வுடன் ஒப்பிடும்போது, நவம்பர் 2019ல் 2.5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே அதன் ஒட்டுமொத்த குறியீடு முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியை விட 2019- 2020ல் ஏப்ரல் - நவம்பர் வரை 5.3 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய் உற்பத்தி

கச்சா எண்ணெய் உற்பத்தி

கச்சா எண்ணெய் உற்பத்தியானது கடந்த நவம்பர் மாதத்தில் முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது 6 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த குறியீடானது ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் 5.9 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இயற்கை எரிவாயு உற்பத்தி

இயற்கை எரிவாயு உற்பத்தி

முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது கடந்த நவம்பர் 2019வுடன் ஒப்பிடும்போது 6.4 சதவிகிதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சியும் 3.1 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சுத்திகரிப்பு பொருட்கள் உற்பத்தி

சுத்திகரிப்பு பொருட்கள் உற்பத்தி

கடந்த நவம்பர் 2018வுடன் ஒப்பிடும்போது நவம்பர் 2019ல் பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் உற்பட்ந்தியானது 3.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதே இதன் ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சியானது 1.1 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. நவம்பர் மாதத்தில் வளர்ச்சி அதிகரித்திருந்தாலும், ஒட்டுமொத்த வளர்ச்சி வீழ்ச்சி கண்டுள்ளது கவனிக்கதக்கது.

உரங்கள் உற்பத்தி

உரங்கள் உற்பத்தி

உரங்களின் உற்பத்தியானது நவம்பர் 2018வுடன் ஒப்பிடும்போது, நவம்பர் 2019ல் 13.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சியானது 4 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நடப்பு நிதியாண்டில் பரவாலாக பெய்த பருவமழையே காரணம் என்றும் கருதப்படுகிறது.

ஸ்டீல் துறை எப்படி?

ஸ்டீல் துறை எப்படி?

கடந்த நவம்பர் மாதத்தில் ஸ்டீல் உற்பத்தியானது 3.7 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி 5.2 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிமெண்ட் உற்பத்தி

சிமெண்ட் உற்பத்தி

முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது சிமெண்ட் உற்பத்தியானது கடந்த நவம்பரில் 4.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுவே ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சியானது 0.02 சதவிகிதம் குறைந்துள்ளது. எனினும் முந்தைய காலத்தோடு ஒப்பிடும்போது தற்போது தான் வளர்ச்சி சற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

மின்சார உற்பத்தி

மின்சார உற்பத்தி

கடந்த நவம்பர் 2018வுடன் ஒப்பிடும்போது, நவம்பர் 2019ல் மின்சார உற்பத்தி 5.7 சதவிகிதம் குறைந்துள்ளது. இதுவே ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான ஒட்டுமொத்த வளர்ச்சியானது 0.7 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Eight core industries output down in 1.5 percent in November

Eight core industries output down in 1.5 percent in November. The combined eight core sector industries stood at 126.3 in November 2019. Particularly coal production declined 2.5%, crude production alsp down 6% in November, and other index also declined.
Story first published: Wednesday, January 1, 2020, 12:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X