உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டை அதிகளவில் ஆதரித்து வரும் நிலையில் எலக்ட்ரிக் கார் விற்பனை யாரும் எதிர்பார்க்காத வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
குறிப்பாக எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் டெஸ்லா நிறுவனம் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையைப் பிடித்துள்ளது.
எலக்ட்ரிக் கார் விற்பனை
2021ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 65 லட்சம் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதில் முழு எலக்ட்ரிக் கார் மற்றும் ஹைபிரிட் கார்களும் அடக்கம். 2020ஆம் ஆண்டு விற்பனையை ஒப்பிடுகையில் 2021ல் எலக்ட்ரிக் கார் விற்பனை சுமார் 109 சதவீதம் அதிகரித்துள்ளது.
டெஸ்லா
மேலும் உலகளவில் எலக்ட்ரிக் கார் விற்பனையில் டெஸ்லா நிறுவனம் மட்டும் சுமார் 14 சதவீத வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றியுள்ளது. 2021ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த எலக்ட்ரிக் கார்களில் 85 சதவீத எலக்ட்ரிக் கார்கள் சீனா மற்றும் ஐரோப்பியாவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
சீனா, கொரியா, ஜப்பான்
டெஸ்லா நிறுவனத்திற்குப் போட்டியாகச் சீனா, கொரியா, ஜப்பான் நாட்டின் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கத் துவங்கியுள்ளதாலும், டெஸ்லா கார்களின் விலை சற்று அதிகமாக உள்ளதாலும் இதன் விற்பனை பெரிய அளவில் அதிகரிக்க முடியாமல் உள்ளது.
கொரோனா தொற்று, சிப் தட்டுப்பாடு
2021ஆம் ஆண்டில் மொத்த கார் விற்பனை சந்தை வெறும் 4 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில் எலக்ட்ரிக் கார் விற்பனை 109 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2021ஆம் ஆண்டில் கொரோனா தொற்று, சிப் தட்டுப்பாடு, உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் கார் உற்பத்தியும் தொய்வு அடைந்துள்ளது, அதேபோல் விற்பனையும் சரிந்துள்ளது.
சீனா ஆதிக்கம்
சீனாவில் 2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 32 லட்சம் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது, இது உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு உள்ள மொத்த எலக்ட்ரிக் கார்களில் 50 சதவீதமாகும். 2020ல் சீனாவில் 20 லட்சம் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பா
ஐரோப்பாவில் டெஸ்லா மாடல் 3 கார் 2021ஆம் ஆண்டின் best-selling electric car எனப் பெயர் எடுத்தாலும் வோக்ஸ்வாகன் குழுமம் நிறுவனங்கள் தயாரிக்கும் எலக்ட்ரிக் கார்கள் ஆதிக்கம் செலுத்துகிறது. வோக்ஸ்வாகன், ஆடி, ஸ்கோடா ஆகிய பிராண்டுகள் தனித்தனியே எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கிறது.
டாடா மோட்டார்ஸ்
இந்தியாவில் அதிகளவிலான எலட்ரிக் கார்களை விற்பனை செய்யும் டாடா மோட்டார்ஸ் 2021ஆம் நிதியாண்டில் வெறும் 1300 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ள நிலையில் 2022ஆம் நிதியாண்டில் 17,000 முதல் 18000 கார்களை விற்பனை செய்யும் எனக் கணித்துள்ளது. டிசம்பர் 2021ல் டாடா சுமார் 2,255 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications