யாருசாமி நீ.. அடுத்த திட்டத்தில் இறங்கும் எலான் மஸ்க்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் டெக்னாலஜியில் பெரும் புள்ளியாக உயர்ந்திருக்கும் எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் மூலம் பல மாற்றங்களை ஆட்டோமொபைல் மற்றும் விண்வெளி பயணத்தில் செய்துள்ளார்.

 

தமிழ்நாட்டில் 100ஐ கடந்த டீசல் விலை.. 2 வருடத்தில் பெட்ரோல் ரூ.35, டீசல் ரூ.30 உயர்வு..!

இதேபோல் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தையும் சேவைகளையும் விரிவாக்கம் செய்யச் சிறிதும் பெரிதுமாகப் பல திட்டங்களை வைத்திருக்கும் எலான் மஸ்க், உலகின் பிராட்பேன்ட் சேவைத் தளத்தை மொத்தமாக மாற்றக் காத்திருக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் சேவையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார்.

ஸ்டார்லிங்க் சேவை

ஸ்டார்லிங்க் சேவை

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் என்பது செயற்கைக்கோள் மூலம் நேரடியாக இயங்கும் பிராட்பேன்ட் சேவை. இந்தச் சேவை மூலம் யாருடைய உதவியும் இல்லாமல் உலகம் முழுவதும் ஒரே நபரால் அதிவேக பிராட்பேன்ட் சேவையை எவ்விதமான தடையும் இல்லாமல் கொடுக்க முடியும்.

இந்தியா மற்றும் சீனா

இந்தியா மற்றும் சீனா

இந்தச் சேவை ஏற்கனவே அமெரிக்கா, கனடா, பல ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்டு வரும் நிலையில் விரைவில் இந்தியா மற்றும் சீனாவில் ஸ்டார்லிங்க் சேவையைக் கொண்டு வர எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இந்தியா மற்றும் சீனா அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேவையான ஒப்புதல்களைப் பெற்று வருகிறது.

விமான நிறுவனங்கள்
 

விமான நிறுவனங்கள்

இந்த நிலையில் எலான் மஸ்க் இந்த ஸ்டார்லிங்க் பயன்பாட்டை அதிகரிக்க விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளார். ஒரு பொருளை எங்கு எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் கில்லாடியாக இருக்கும் எலான் மஸ்க் விமானத் துறையில் இத்திட்டம் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைஃபை சேவை

வைஃபை சேவை

விமானங்களில் தற்போது வைஃபை சேவை அளிக்கப்பட்டு வருவது வழக்கமாகியுள்ளது, இந்தியாவில் சில விமானங்களில் மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில் எவ்விதமான பிரச்சனையும் குழப்பமும் இல்லாமல் அனைத்து பயணிகளுக்கும் அதிவேக இண்டர்நெட் சேவை இந்த ஸ்டார்லிங்க் இணைப்பு மூலம் அளிக்க முடியும் என்பது எலான் மஸ்க் திட்டம்.

Gogo பங்குகள் சரிவு

Gogo பங்குகள் சரிவு

இதற்காக எலான் மஸ்க் தற்போது சில முக்கியமான விமானச் சேவை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளார். இந்தச் செய்தி வெளியான உடனேயே விமானத்தில் இண்டர்நெட் சேவை அளிக்கும் Gogo Inc பங்குகள் 5.7 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

12,000 செயற்கைக்கோள்கள்

12,000 செயற்கைக்கோள்கள்

எலான் மஸ்க் தனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் வாயிலாகச் சுமார் 12,000 செயற்கைக்கோள்களை ஸ்டார்லிங்க் சேவைக்காக விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளது. கிட்டதட்ட 10 பில்லியன் டாலர் மதிப்பிலான இத்திட்டம் முழுமை அடையும் போது பூமி முழுவதும் அனைவருக்கும் அதிவேக இண்டர்நெட் சேவையை எலான் மஸ்க் மூலம் அளிக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Elon Musk discussion With Airlines To provide in-flight internet with Starlink Broadband

Elon Musk discussion With Airlines To provide in-flight internet with Starlink Broadband
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X