2 நாள் கெடு.. முடிச்சா இருங்க, இல்லாட்டி கிளம்புங்க.. எலான் மஸ்க் திடீர் ஈமெயில்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிவிட்டர் நிறுவனத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு வரும் எலான் மஸ்க் ஊழியர்கள் பணிநீக்கம் மற்றும் ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் நெருக்கடி கடுமையான வேலை பளு ஆகியவற்றின் மூலம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறார்.

 

இந்த நிலையில் இன்று காலை டிவிட்டர் ஊழியர்களுக்கு முக்கியமான மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

பொதுவாக எலான் மஸ்க் துவங்கிய அனைத்து நிறுவனங்கள் அனைத்தும் தனது உத்தரவுகளுக்கு இணங்க ஊழியர்கள் பணியாற்றுவது வழக்கமாகக் கொண்டு இருக்கும் நிலையில் டிவிட்டர் நிறுவனத்தில் ஆரம்பம் முதல் பல்வேறு பிரச்சனைகளை முதல் நாளில் இருந்தே எதிர்கொண்டு வருகிறார்.

உயர் அதிகாரிகள்

உயர் அதிகாரிகள்

இதிலும் குறிப்பாக முக்கியமான உயர் அதிகாரிகள் அனைவரும் அடுத்தடுத்து வெளியேறியது மூலம் டிவிட்டர் ஊழியர் கட்டமைப்பு மொத்தமாக உடைந்துள்ளது. சில முக்கிய அதிகாரிகளைத் திரும்ப அழைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

டிவிட்டர் எதிர்காலம்

டிவிட்டர் எதிர்காலம்

எலான் மஸ்க் டிவிட்டரை வைத்துப் பல முக்கியமான திட்டங்களைத் திட்டமிட்டு இருப்பது மட்டும் அல்லாமல் உலக மக்கள் இதுவரையில் யாரும் பார்த்திடாத வகையிலா சமூகவலைத்தளத்தை மக்களுக்கு அளிக்கத் திட்டமிட்டு உள்ளார்.

வேகம்
 

வேகம்

 

சொல்லப்போனால் எலான் மஸ்க் வேகத்திற்கு டிவிட்டர் ஊழியர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதே பலரும் கூறும் கருத்தாக உள்ளது.

நவம்பர் 16 ஈமெயில்

நவம்பர் 16 ஈமெயில்

இந்த நிலையில் நவம்பர் 16 ஆம் தேதி பொறுமையை இழந்த எலான் மஸ்க் டிவிட்டர் ஊழியர்களுக்கு, வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள், டிவிட்டரின் புதிய hardcore ஆக நீங்க இரு வேண்டுமா என்பதை. இல்லையெனில் 3 மாதம் severance pay உடன் தாராளமாக வெளியேறலாம் என ஈமெயில் அனுப்பியுள்ளார்.

A Fork in the Road தலைப்பு

A Fork in the Road தலைப்பு

எலான் மஸ்க் இந்த ஈமெயில் A Fork in the Road என்ற தலைப்பில் அனுப்பியுள்ளார். மேலும் நிறுவனத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள், வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் கிளிக் செய்யாதவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாகக் கருதப்படும் எனவும் இந்த ஈமெயிலில் தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் 2.0

டிவிட்டர் 2.0

மேலும் இந்த ஈமெயிலில் எலான் மஸ்க் தான் டிவிட்டர் 2.0 உருவாக்கப்போவதாகவும், இந்தப் பாதையில் இருக்கும் ஊழியர்கள் extremely hardcore ஆக இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்தில் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டியிருக்கும், கடுமையாகப் பணியாற்ற வேண்டியிருக்கும்.

திறமையான ஊழியர்கள்

திறமையான ஊழியர்கள்

இதனால் மிகுந்த திறமையான ஊழியர்கள் மட்டுமே இந்தக் கட்டத்தைத் தாண்ட முடியும் எனத் தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். டிவிட்டர் 2.0 அதிகப்படியாக இன்ஜினியரிங் சார்ந்து இருக்கும், இதனால் சிறப்பாகக் கோடிங் செய்பவர்கள் மட்டுமே இந்தப் பயணத்தில் தாக்கு பிடிக்க முடியும் என்பதைப் பல முறை, பல வழியில் தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.

வியாழக்கிழமை மாலை 5 மணி

வியாழக்கிழமை மாலை 5 மணி

இதனால் இந்தப் பாதையில் இருக்க விரும்புவோர் கட்டாயம் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் இணைப்பை கிளிக் செய்து உறுதி செய்ய வேண்டும்.

சின்ன உதாரணம்

சின்ன உதாரணம்

எலான் மஸ்க்-ம் அவருடைய அணி எப்படிப்பட்டது என்பதைச் சொல்ல வேண்டும் என்றால் தானியங்கி கார் அதைத் தயாரிக்கக் கூகுள் முதல் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாரித்து வரும் நிலையில் டெஸ்லா சிறிய அணியை வைத்துக்கொண்டு குறுகிய காலகட்டத்தில் உருவாக்கியுள்ளார், இது மட்டும் அல்லாமல் இதில் பல வெர்ஷன் மேம்பாடுகள் செய்யப்பட்டுப் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளார் எலான் மஸ்க்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Elon Musk Email to Twitter employees; You have 2 Days time To Decide Want To Stay or not

Elon Musk Email to Twitter employees; You have 2 Days time To Decide Want To Stay or not by 5 p.m. ET on Thursday, if you want to go take three months severance pay.
Story first published: Wednesday, November 16, 2022, 18:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X