ஒரு டாலர் கூட வரி செலுத்தாத பெரும் தலைகள்.. அமெரிக்க பில்லியனர்களின் தில்லாங்கடி வேலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் பல முன்னணி பணக்காரர்கள் வருமான வரிச் சட்டத்தில் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பல வருடங்களாக ஒரு டாலர் கூட வரி செலுத்தாமல் உள்ளனர் எனப் புதிய ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

 

பேஸ்புக்-ன் புதிய ஸ்மார்ட்வாட்ச் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் பிரம்மாண்ட திட்டம் அதிர்ச்சியில் ஆப்பிள்!

அமெரிக்காவின் பணக்காரர்கள் மற்றும் நிறுவனங்கள் வரி செலுத்தாமல் இருக்கும் நிலையை மாற்ற ஜோ பைடன் தலைமையிலான அரசு புதிய சட்டங்களைக் கொண்டு வர ஆலோசனை செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஆய்வறிக்கை வரி விதிப்புச் சட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.

ப்ரோபப்ளிகா ஆய்வறிக்கை

ப்ரோபப்ளிகா ஆய்வறிக்கை

நியூயார்க் நகரத்தை சேர்ந்த ப்ரோபப்ளிகா என்னும் லாபமற்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தான் தற்போது அமெரிக்கர்கள் மத்தியிலும் பணக்காரர்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

அமேசான் ஜெப் பைசோஸ்

அமேசான் ஜெப் பைசோஸ்

ப்ரோபப்ளிகா வெளியிட்டுள்ள அறிக்கையில் அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பைசோஸ் 2007 முதல் 2011 வரையிலான காலம் வரையில் ஒரு டாலர் கூட வருமான வரியாகச் செலுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

டெஸ்லா எலான் மஸ்க்

டெஸ்லா எலான் மஸ்க்

இதேபோல் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் 2018ல் எவ்விதமான வரியும் செலுத்தவில்லை என்றும், இவர்களைப் போல மைகெல் ப்ளூம்பெர்க், காரல் ஐகேன், ஜார்ஜ் சோரஸ் போன்ற பல பில்லியனர்கள் பல வருடங்கள் எவ்விதமான வரியும் செலுத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.

வருமான வரித் தரவுகள்
 

வருமான வரித் தரவுகள்

பெரும் பணக்காரர்களின் வருமான வரி செலுத்திய தரவுகளை எப்படிப் பெற்றது என விளக்கம் கொடுக்க மறுத்த ப்ரோபப்ளிகா, அமெரிக்காவின் பல பணக்காரர்கள் பல முறை சாமானிய அமெரிக்க மக்களை விடவும் குறைவான வரியும், பல முறை எவ்விதமான வரியும் செலுத்தாமல் இருந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

வரி ஏய்ப்பு இல்லை

வரி ஏய்ப்பு இல்லை

வரி செலுத்தாத காரணத்தால் இவர்கள் வரி ஏய்ப்பு-ஓ அரசை ஏமாற்றவோ இல்லை, ஆனால் வரி செலுத்தும் அளவீட்டைக் குறைக்கும் பல வழிகளைப் பயன்படுத்தி இந்த வேலையைச் செய்துள்ளனர். ஆனால் இந்த வழிகள் சாமானிய மக்களுக்குக் கிடைப்பது இல்லை என்பது தான் தற்போதைய பிரச்சனை.

பணக்காரர்கள் மீதான வரி

பணக்காரர்கள் மீதான வரி

அமெரிக்காவில் பணக்காரர்கள் மீது தனிப்பட்ட வருமான வரி விதிக்க வேண்டும் என்று குடியரசு கட்சியின் செனேட்டர் Elizabeth Warren ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் அமெரிக்கப் பணக்காரர்களின் வரி கணக்கீட்டு முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Elon Musk, Jeff Bezos, other US billionaires have paid zero income tax: Propublica Report

Elon Musk, Jeff Bezos, other US billionaires have paid zero income tax: Propublica Report
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X