எலான் மஸ்க் புதன்கிழமை நீதிமன்றத்தில் டெஸ்லா நிறுவனத்தில் சில முடிவுகளை நிறுவனத்தின் இயக்குநர்களின் ஒப்புதல் இல்லாமல் எடுத்ததாக ஒப்புக்கொண்டார்.
எலான் மஸ்க் தனது 56 பில்லியன் டாலர் ஊதிய திட்டத்தைத் தானே உருவாக்கி நிர்வாகக் குழுவிடம் கொடுத்துப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடுத்து விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையில் போதும் கண்கலங்கி பதில் அளித்துள்ளார்.

டெஸ்லா
டெஸ்லா நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரராக இருக்கும் ரிச்சர்ட் டோர்னெட்டா 2018 இல் எலான் மஸ்க் மற்றும் டெஸ்லா நிர்வாகக் குழுவிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சி ஒருபக்கம் வியக்க வைக்கும் அளவுக்கு இருந்தாலும் 2018 முதல் இந்த வழக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது

எலான் மஸ்க்
மேலும் எலான் மஸ்க் டெஸ்லா நிர்வாகக் குழுவின் மீது தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி மின்சாரக் கார் தயாரிப்பாளரிடம் முழுநேர வேலை செய்யத் தேவையில்லாத ஒரு பெரிய தொகையைச் சம்பளமாக அளிக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள் வைத்துள்ளார் எனத் தொகுப்பைப் பெறுவதை நிரூபிக்க நம்புகிறார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ரிச்சர்ட் டோர்னெட்டா
ரிச்சர்ட் டோர்னெட்டாவின் வழக்கறிஞர் கிரெக் வரல்லோ, 56 பில்லியன் டாலர் ஊதிய திட்டத்தை மிகவும் எளிதாக டெஸ்லா நிர்வாகக் குழுவை மிகவும் எளிதாக ஒப்புதல் அளித்ததா என்ற கேள்வி எழுப்பப்பட்டது, அப்போது எலான் மஸ்க் முற்றிலும் மறுத்தார்.

கண்கலங்கிய எலான் மஸ்க்
"வலியின் அளவு, வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது," என்று எலான் மஸ் கண்கலங்கிக் கூறினார், 2017 இல் நிறுவனத்தைத் திவாலாவதில் இருந்து காப்பாற்றி வியக்க வைக்கும் வளர்ச்சிக்குக் கொண்டு வர தேவையான முயற்சியை விவரித்தார். மேலும் டெஸ்லா "இது ஒரு வலி, நான் யாருக்கும் திணிக்க விரும்பவில்லை." எனத் தெரிவித்தார்.

வழக்கறிஞர் கிரெக் வரல்லோ
மேலும் ரிச்சர்ட் டோர்னெட்டாவின் வழக்கறிஞர் கிரெக் வரல்லோ, எலான் மஸ்க் டெஸ்லா தனது இருக்கமான கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருவதை உலகிற்கும், முதலீட்டாளர்களுக்கும், நிர்வாகக் குழுவிற்கும் காட்டினார். இதை வைத்தே பல முறை நிர்வாகக் குழுவின் அனுமதியின்றிப் பல விஷயங்களைச் செய்துள்ளார்.

பிட்காயின், 10 பில்லியன் டாலர் பைபேக்
எலான் மஸ்க் தன்னிச்சையாக டெஸ்லா-வில் பிட்காயினைப் பேமெண்ட் ஆக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது, அக்டோபர் மாதம் டெஸ்லா நிர்வாகக் குழு 10 பில்லியன் டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்குகளைப் பைபேக் செய்வது போன்றவற்றை டெஸ்லா நிர்வாகக் குழுவிடம் அனுமதியின்றி அறிவித்தது என நீதிமன்றத்தில் ரிச்சர்ட் டோர்னெட்டாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

டிவிட்டர்
டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றிய எலான் மஸ்க் பல வகையில் போராடி வரும் வேளையில் இந்த 5 நாள் வழக்கு விசாரணை பெரும் சுமையாகவும், பாதிப்பாகவும் அமைந்தது. இந்த நிலையிலும் எலான் மஸ்க் டிவிட்டர் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய ஈமெயில்
நவம்பர் 16 ஆம் தேதி பொறுமையை இழந்த எலான் மஸ்க் டிவிட்டர் ஊழியர்களுக்கு, வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள், டிவிட்டரின் புதிய hardcore ஆக நீங்க இரு வேண்டுமா என்பதை. இல்லையெனில் 3 மாதம் severance pay உடன் தாராளமாக வெளியேறலாம் என ஈமெயில் அனுப்பியுள்ளார்.