மக்கள் சொல்லிட்டாங்க.. என்ன செய்ய போரீங்க எலான் மஸ்க்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலான் மஸ்க்-ன் நிர்வாகத்தின் கீழ் டிவிட்டர் பல மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களில் அதிகப்படியான நெருக்கடிக்கு மஸ்க் தள்ளப்பட்டு உள்ளார்.

இதில் கடுப்பான எலான் மஸ்க் வழக்கம் போல் மக்களிடமே தனது குழப்பத்திற்கான முடிவை கேட்டு உள்ளார். எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கிய முதல் நாளில் இருந்து அதிரடியான மாற்றங்கள், முடிவுகள் என நகர்ந்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு டெஸ்லா நிர்வாகக் குழுவில் இருந்தும் அதிகப்படியான நெருக்கடி உருவாகியுள்ளது.

இந்த நிலையில் தான் டிவிட்டர் நிறுவனத்தில் இருக்க வேண்டுமா..? வேண்டாமா..? என்ற குழப்பத்தில் மூழ்கியுள்ளார்.

 டிவிட்டரை விட்டு வெளியேறும் எலான் மஸ்க்..? அனல் பறக்கும் வாக்கெடுப்பு..! டிவிட்டரை விட்டு வெளியேறும் எலான் மஸ்க்..? அனல் பறக்கும் வாக்கெடுப்பு..!

 எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் டிவிட்டர் தளத்தில் புதிய speech restrictions மற்றும் பிற சமூக வலைத்தளங்களின் இணைப்பிற்குத் தடை போன்ற அதிரடி கொள்கை மாற்றம் அறிவிக்கப்பட்டது.

இந்தக் கொள்கைகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஞாயிற்றுக்கிழமை தான் செய்த தவறு என்பதை ஒப்புக்கொண்டார்.

 ராஜினாமா..?

ராஜினாமா..?


இதைத் தொடர்ந்து டிவிட்டரில் எலான் மஸ்க் "தான் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டுமா..?" என்பதற்கான முடிவை மக்களிடம் கேட்க முடிவு செய்து டிவிட்டர் இதற்கான வாக்கெடுப்பை எடுக்க முடிவு செய்தார்.

 1.12 வாக்குகள்

1.12 வாக்குகள்

இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளது, சுமார் 1.7 கோடி பேர் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதில் 57.5 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என்று, 42.5 சதவீதம் பேர் இருக்க வேண்டாம் என்றும் பதில் அளித்துள்ளனர். நீங்க என்ன சொல்றீங்க..? மறக்காம கமெண்ட் பண்ணுங்க.

எலான் மஸ்க்

இந்த வாக்கெடுப்பு முடிந்த நிலையில் மக்கள் எலான் மஸ்க் டிவிட்டரின் தலைவர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்த நிலையில்,  எலான் மஸ்க் இப்போது என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பும், அவருடைய பதிலுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

ஒரு பக்கம் எலான் மஸ்க் ரசிகர்கள் அவர் அப்பணியை தொடர வேண்டும் என நினைக்கையில், மக்கள் கருத்து எதிராக வந்துள்ளது.

 எலான் மஸ்க் பை பை

எலான் மஸ்க் பை பை

இந்த வாக்கெடுப்பு முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதன் பட நடக்க உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எலான் மஸ்க் ராஜினாமா செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது. சரி என்ன தான் பிரச்சனை..?

 கொள்கை மாற்றம்

கொள்கை மாற்றம்

டிவிட்டர் தளத்தில் இனி சக போட்டி சமுகவலைத்தளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், Mastodon, Tribel, Nostr, Post, டிரம்ப்-ன் Truth Social ஆகியவற்றை இணைக்கக் கூடாது என்றும், இதன் லிங்க்-களை டிவிட்டர் தளத்தில் பதிவிடக் கூடாது என்ற மிகப்பெரிய கொள்கை மாற்றத்தை எலான் மஸ்க் தலைமையிலான நிர்வாகம் கொண்டு வந்தது.

 மக்கள் எதிர்ப்பு

மக்கள் எதிர்ப்பு

இந்தக் கொள்கை வெளியிட்ட உடனே மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு உருவானது, இதனால் எலான் மஸ்க் இனி வரும் காலத்தில் முக்கியக் கொள்கை மாற்றங்களுக்கான வாக்கெடுப்பு நடைபெறும்.

மன்னிப்பு

மன்னிப்பு

என்னை மன்னித்துவிடுங்கள், மீண்டும் இதுபோன்ற ஒன்று நடக்காது என டிவிட் செய்தார், இதைத் தொடர்ந்து தான் டிவிட்டரில் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா என வாக்கெடுப்பு நடத்தினார்.

 தடை பட்டியல்

தடை பட்டியல்

எலான் மஸ்க் தடை பட்டியலில் Parler, TikTok, LinkedIn போன்றவை இல்லை என்பது முக்கியமான விஷயமாக உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் மொத்தமாக டிக்டாக் எதிரான நிலைப்பாடு அரசு அதிகாரிகள் மத்தியில் இருக்கும் போது டிவிட்டர் தடை பட்டியலில் டிக்டாக்-ஐ சேர்க்காதது அதிர்ச்சியை அளிக்கிறது.

 Mastodon கணக்கு

Mastodon கணக்கு

இதேபோல் சோஷியல் மீடியா லிங்க் அக்ரிகேட்டர் நிறுவனமான லின்க்ட்ரீ (Linktree)-ம் தடை செய்யப்பட்டு உள்ளது. சமீபத்தில் எலான் மஸ்க் தலைமையிலான டிவிட்டரில், இதன் சக போட்டி நிறுவனமான Mastodon கணக்கு சர்ச்சைக்கு உரிய @ElonJet குறித்து டிவீட் செய்த போது அக்கணக்கைத் தடை செய்தது.

 ஐபோன், ஆண்டுராய்டு

ஐபோன், ஆண்டுராய்டு

இதேபோல் டிவிட்டரில் இனி எந்தப் போனில் இருந்து டிவீட் செய்யப்பட்டது என்பது குறித்த விபரம் நீக்கப்பட்டு உள்ளது. உதாரணமாகப் பதிவுகளில் Twitter for iPhone, Twitter for Android பார்த்திருப்போம், இனி இது இருக்காது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Elon Musk might leave Twitter Soon; Twitter poll results create another chaos on Twtr

Elon Musk might leave Twitter Soon; Twitter poll results create another chaos in Twtr
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X