டிவிட்டரில் அறிமுகம் செய்யப்படும் புதிய சேவை.. வாவ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிவிட்டரைக் கைப்பற்றிய எலான் மஸ்க் ஆரம்பம் முதல் பல தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், நிறுவனம் திவாலாவதில் இருந்து காப்பாற்றக் கூடுதல் வருமானத்தைப் பெறவும், செலவுகளைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

இதன் ஒரு பகுதியாக ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்து வந்த டிவிட்டர் தற்போது ஊழியர்களுக்கான சலுகைகளை மொத்தமாக நீக்கி செலவுகளைக் குறைத்துள்ளது.

எலான் மஸ்க்-ன் இந்த அறிவிப்பு டிவிட்டர் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இதற்கிடையில் புதிய சேவையை டிவிட்டரில் அறிமுகம் செய்ய உள்ளார்.

டிவிட்டரில் புதிய சேவை

டிவிட்டரில் புதிய சேவை

எலான் மஸ்க் டிவிட்டர் தளத்தில் நேரடி மெசேஜ் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்று அனைத்து டிவிட்டர் ஊழியர்களிடமும் தெரிவித்துள்ளார். 1200 ஊழியர்கள் வெளியேறிய பின்பு கோடிங் பிரிவில் இருக்கும் ஊழியர்களை அழைத்து பேசி எலான் மஸ்க் டிவிட்டர் தளம் எப்படியிருக்கும் என்ற முடிவிற்கு வந்தார்.

புதிய சேவைகள்

புதிய சேவைகள்

இந்த நிலையில் தான் நேரடி மெசேஜ் செயல்பாட்டை மேம்படுத்துவது முதல் DM-களை என்க்ரிப்ட் செய்வது, டிவிட்டர் கணக்குகளுக்கு இடையே என்க்ரிப்ட் செய்யப்பட்ட வீடியோ மற்றும் வாய்ஸ் கால் ஆகியவைகளை புதிய சேவைகளாகச் சேர்க்க வேண்டும் என்று எலான் மஸ்க் டிவிட்டர் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

டேட்டா ப்ரைவசி
 

டேட்டா ப்ரைவசி

டிவிட்டர் வாடிக்கையாளர்கள் தங்கள் ப்ரைவசி பற்றிக் கவலைப்படாமல், அல்லது டிவிட்டரில் ஒரு தரவு திருட்டு பற்றிக் கவலைப்படாமல் இத்தளத்தைப் பயன்படுத்தும் அளவிற்கு மேம்படுத்த வேண்டும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

 தகவல் திருட்டு

தகவல் திருட்டு

இதற்காக டிவிட்டர் தளத்தில் DMகள் திருடப்படுவது அல்லது டிவிட்டரில் யாராவது உளவு பார்க்கக்கூடும் என்று நினைக்கும் வகையில் பயனர்கள் இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என எலான் மஸ்க் சமீபத்திய டிவிட்டர் ஊழியர்கள் கூட்டத்தில் பேசினார்.

 எலான் மஸ்க் கனவு

எலான் மஸ்க் கனவு

எலான் மஸ்க் டிவிட்டரை வைத்துப் பல முக்கியமான திட்டங்களைத் திட்டமிட்டு இருப்பது மட்டும் அல்லாமல் உலக மக்கள் இதுவரையில் யாரும் பார்த்திடாத வகையில் சமூகவலைத்தளத்தை மக்களுக்கு அளிக்கத் திட்டமிட்டு உள்ளார். இதைச் சாத்தியப்படுத்த திறமையான ஊழியர்கள் மட்டும் டிவிட்டர் தளத்தில் இருந்தால் போதும் என்ற அளவிற்கு நிலை உருவாகியுள்ளது.

டிவிட்டர் 2.0

டிவிட்டர் 2.0

எலான் மஸ்க் தான் டிவிட்டர் 2.0 உருவாக்கப்போவதாகவும், இந்தப் பாதையில் இருக்கும் ஊழியர்கள் extremely hardcore ஆக இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்தில் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டியிருக்கும், கடுமையாகப் பணியாற்ற வேண்டியிருக்கும் என நவம்பர் 16 ஆம் தேதி ஈமெயில் அனுப்பினார். இதைத் தொடர்ந்து தான் 1200 ஊழியர்கள் ராஜினாமா செய்தனர்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய பின்பு சுமார் 4500 ஊழியர்களுக்கும் அதிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் முக்கியமாக எலான் மஸ்க் கடைசியாக அனுப்பிய ஈமெயில் மூலம் சுமார் 1200க்கும் அதிகமான ஊழியர்கள் 3 மாத சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு வெளியேறினர்.

 டிவிட்டர்

டிவிட்டர்

டிவிட்டர் நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்த நிலையில் தற்போது முக்கியமான அணி மற்றும் ஊழியர்கள் மட்டுமே இருக்கும் நிலையிலும் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகை குறைக்கப்பட்டு உள்ளது.

சலுகைகள் ரத்து

சலுகைகள் ரத்து

சில நாட்களுக்கு முன்பு எலான் மஸ்க் டிவிட்டர் அலுவலகத்தில் அதன் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் இலவச மதிய உணவை ரத்துச் செய்தார். இதைத் தொடர்ந்து தற்போது டிவிட்டர் தலைவரான எலான் மஸ்க், வெல்னஸ், உற்பத்தித் திறன், ஹோம் இண்டர்நெட், பயிற்சி மற்றும் மேம்பாடு, அவுட் ஸ்கூல்ஸ், டேகேர் மற்றும் காலாண்டு அடிப்படையிலான குழு நடவடிக்கைகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கான நிறுவனத்தின் சலுகைகளை மொத்தமாகக் கட் செய்துள்ளார்.

அலவன்ஸ்

அலவன்ஸ்

டிவிட்டர் ஊழியர்களுக்கான அலவன்ஸ்-கள் காலப்போக்கில் மறுமதிப்பீடு செய்யப்படும், மேலும் நிறுவனத்தின் நிதி நிலைமை மேம்படும் போது மீண்டும் அளிக்கப்படும் என எலான் மஸ்க் தலைமையிலான டிவிட்டர் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Elon Musk plans to add encrypted video and voice calling service in Twitter; employee perks has been cut

Elon Musk plans to add encrypted video and voice calling service in Twitter. Elon Musk cuts Twitter’s employee perks Food, productivity, home internet, daycare
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X