டிவிட்டர் நிறுவனத்தின் தலைவரும் உரிமையாளருமான எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆப்பிள் உடன் நேருக்கு நேர் மோதி வருகிறார்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் அதிகப்படியான ஆதிக்கத்தையும், கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்து வருவதை மட்டும் அல்லாமல் டிவிட்டர் செயலி மீது ஆப்பிள் எடுக்கப்போகும் நடவடிக்கை எதிராக எலான் மஸ்க் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றி பின்னர் டிவிட்டர் தளத்தில் வரலாறு காணாத வாடிக்கையாளர்கள், ஆக்டிவ் யூசர்ஸ் என பல பிரிவுகளில் டிவிட்டர் அசத்தி வந்தாலும், தொடர்ந்து பல்வேறு நிர்வாக பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.

ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் இருந்து டிவிட்டர் செயலியை பிளாக் செய்துவிடுவதாக சில டிவீட்டில் எவ்விதமான விளக்கமும் அளிக்காமல் தெரிவித்துள்ளதை எலான் மஸ்க் கடுமையாகக் கண்டித்தார்.

சென்சார்ஷிப் விதிகள்
மேலும் ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் அனைத்து சென்சார்ஷிப் விதிகளையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பது குறித்து ஒரு வாக்கெடுப்புக்குப் பின்பு டிவிட்டர் தளத்தில் விளம்பரம் செய்வதை ஆப்பிள் நிறுத்தியுள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

விளம்பர வருவாய்
டிவிட்டர் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 90 சதவீதம் விளம்பர வருவாய் மட்டுமே. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் டிவிட்டர் தளத்தில் வருடத்திற்கு சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான விளம்பரத்தைச் செய்யும் நிலையில், இது பெரும் இழப்பாக டிவிட்டருக்கு உள்ளது.

டாப் 100 விளம்பரதாரர்கள்
இதேவேளையில் கடந்த சில வாரத்தில் டிவிட்டர் தளத்தில் இருக்கும் டாப் 100 விளம்பரதாரர்கள் ஜெனரல் மில்ஸ் முதல் ஆடம்பர கார விளம்பரதாரரான ஆடி அமெரிக்க வரையில் பலர் டிவிட்டரில் விளம்பரம் செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

30 சதவீதம் வரி
மேலும் எலான் மஸ்க் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் செய்யப்பட்டும் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் 30 சதவீதம் வரி அல்லது கட்டணத்தை வசூலிப்பது குறித்து ரகசியமாக வைத்துள்ளது குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கேட்வே
இதேபோல் ஆப்பிள் ஆப் ஸ்டோர் தளத்தில் வேறு கேட்வே இல்லாமல் ஓரே கேட்வே கொண்டு இங்குவாதல் 30 சதவீத கட்டணத்தை வசூலித்து அதிகப்படியான லாபத்தைப் பார்த்து வருகிறது ஆப்பிள் நிறுவனம்.

கூகுள் - எபிக் கேம்ஸ்
இதேபோன்ற காரணத்திற்காகத் தான் சமீபத்தில் கூகுள் இந்தியாவில் அபராதம் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஆப் ஸ்டோரின் 30 சதவீதம் கட்டணம் சார்பாக Fortnite கேப் தயாரித்த எபிக் கேம்ஸ் கூட வழக்குத் தொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு உலகம் முழுவதும் எதிரொலித்து ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராகத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டென்ட் மாடரேஷன்
இதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் கண்டென்ட் மாடரேஷன் டிமாண்ட் குறித்து அழுத்தம் கொடுப்பதாக எலான் மஸ்க் கூறுகிறார். சமீபத்தில் எலான் மஸ்க் டிவிட்டர் ஊழியர்களிடம் பேசுகையில் கடந்த சில நாட்களில் டிவிட்டர் தளத்தில் வெறுப்பு பேச்சு எண்ணிக்கை பெரிய அளவில் குறைத்திருப்பதை விளக்கினார்.

எலான் மஸ்க்
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் இருந்து டிவிட்டர் செயலியை நீக்கப்போவதா மிரட்டி வருகிறது, ஆனால் எதற்காக நீக்கப்போகிறது என்பதைக் குறித்து விளக்கம் கொடுக்கவில்லை. ஆப்பிள், கூகுள் ஆகிய இரு தளத்திற்குமே தனது ஆப் ஸ்டோரில் சமுக வலைத்தளங்கள் தேவை என்பதை எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.